Tamil Motivational Story வாழ்க்கையின் இரகசியம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 13, 2020

Tamil Motivational Story வாழ்க்கையின் இரகசியம்

Tamil Motivational Story வாழ்க்கையின் இரகசியம்



ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த ஒரு துறவி ஒரு கிராமத்திற்கு வந்து இருந்தார். அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் அந்தத் துறவியைப் பார்க்க நிறைய பேர் போயிருந்தாங்க.  அந்த துறவியும் நிறைய கருத்துக்களை சொன்னார்.  நிறைய கதைகளை சொன்னாரு. நிறைய தகவல்கள் வந்து சொன்னாரு. 

அதை சில பேர் கேட்டுகிட்டு ஊருக்குள்ளே வந்து,  இந்த மாதிரி ஒரு துறவி வந்திருக்கிறார்.  இவர் வந்து வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் ஒரு வந்து பார்த்து இருக்கிறார்.  இவருக்கு எல்லா ரகசியங்களும் தெரியுமாம்.  இந்த மாதிரி நிறைய மிகப் பெரிய ஞானி இவர் மிகப்பெரிய ஞானம் அடைந்தவர் அப்படின்னு சொல்லிட்டு அவருடைய புகழை வந்து இவங்க பாட ஆரம்பிச்சாங்க. 

அந்த ஊருக்குள் இருந்த கூட்டத்தில் இரண்டு நண்பர்கள்,  அவங்களுக்கு பயங்கரமான ஒரு ஆர்வம் ஏற்பட்டது,  சரி நாமும் இந்த துறவியைப் பார்த்து வாழ்க்கையின் ரகசியம் என்ன அப்படிங்கறத நாம தெரிஞ்சுக்கலாம்.  அப்டின்னு சொல்லிட்டு இவங்க முடிவு பண்றாங்க. அந்த  துறவியை வந்து பாக்க வராங்க. 

அங்க அந்த கூட்டம் வந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போக ஆரம்பித்தது. இருந்தது சரி தோட்டம் முழுசும் கலஞ்சிப் போகட்டும்.  நம்ம கிட்ட தனியா போய் கேட்போம்.  அப்ப ஏதாவது நமக்கு ஸ்பெஷலா கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கு. அப்படின்னு சொல்லிட்டு காத்திருக்கிறார்கள்.  கூட்டம் அப்படியே கலஞ்சிப் போகுது. கலஞ்சிப் போனதுக்கு அப்புறம் இரண்டு நண்பர்களும் அந்தத் துறவியைப் பார்த்து,  சாமி வணக்கம், வாழ்க்கையுனுடைய இரகசியம்  எல்லாம் உங்களுக்கு தெரியும்னு சொல்லி கேள்விப்பட்டோம்.  எங்களுக்கு அந்த வாழ்க்கையின் ரகசியத்தை பத்தி தெரிஞ்சுக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு. 

அதுக்காக நாங்க எந்த லெவலுக்கும்  நாங்க போறக்குத் தயா.ர் நீங்க எங்களுக்கு உதவி பண்ணுங்க எங்களுக்கு சொல்லிக் கொடுங்க.  அந்த  ரகசியங்களும் தெரிஞ்சுக்கணும்.  அப்படின்னு சொல்லிட்டு கேட்கிறாங்க.  அதற்கு அப்படின்னா நீங்க என்னோட வாங்க அப்டின்னு சொல்லிட்டு  இவரு பாட்டுக்கு கிளம்பி போக ஆரம்பிச்சார்.  இவங்களும் என்ன பண்றாங்க  அப்படின்னா ரெண்டு நண்பர்கள் அவர் பின்னாடியே வந்து போக ஆரம்பிக்கிறார்.  

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அந்த துறவி வந்து ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறார்.  அது வந்து ஒரு காலை நேரம்.  அங்க போயிட்டு வாங்க ஒரு சின்ன ஒரு குன்று இருக்கும்.  ஒரு மலை. அங்க உக்காந்து வேடிக்கை பார்த்துட்டே இருக்கிறார்.  அங்கு வந்த நடக்கிற ஓவ,வொரு விஷயங்களையும் இவங்களும் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  

ஒரு மான் கூட்டம் அந்த வழியாய் மேய வருது. அவங்க அத உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அந்த மான் கூட்டமும் அந்தப் புல்வெளியில் உள்ள எல்லாம் மேய ஆரம்பிக்குது.  இரண்டு நண்பர்களுக்கும் ஒரு வருத்தம் நம்ம வாழ்க்கையினுடைய ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்னு  இவர் கூட வந்தா,  இவரு காட்டுக்குள்ள உட்கார வைத்து மானை  வேடிக்கை பார்க்க விட்டாரே  அப்படின்னு சொல்லி முகத்த முகத்த  பார்த்துட்டு  உட்கார்ந்து இருக்கிறாங்க.  திடீர்னு ஒரு சத்தம்.  என்னடானு பார்த்தா அந்த மான் கூட்டம் தெறித்து ஓட ஆரம்பித்தது.  அந்த மான வந்து  வேட்டையாடுவதற்கு மான்களை வேட்டையாடி வந்து பாத்திட்டு ஒரு சிங்கம் திடீர்னு ஒரு இடத்திலிருந்து பாய ஆரம்பிக்குது. 

அந்த மானை ஒரு சிங்கம் வந்து துரத்த ஆரம்பிச்ச உடனே ஒரு நண்பருக்கு வந்து பயங்கரமான சந்தோசம். சத்தம் போட ஆரம்பித்தாரு.  துரத்து துரத்து பிடி பிடி அப்படிங்கறாரு.  இன்னொரு நண்பனுக்கு பயங்கரமான ஒரு வருத்தம் எவ்வளவு அழகான இந்த மான்  கூட்டம்.  இத போயி இந்த சிங்கம்வேட்டையாடி சாப்பிடுதே.  அந்தமானுக்கு வந்து குட்டிகள் இருக்கலாம். அது பெண்ணாக இருக்கலாம். அழகாக இருக்கலாம். அதனுடைய கதி என்ன ஆவது அப்படின்னு சொல்லி அழுது புலம்ப ஆரம்பிக்கிறார். 

திடீரென்று இரண்டு சிங்கங்கள் வந்து பார்த்திங்கனா  எங்கிருந்தோ பாய ஆரம்பிக்குது.  ஒரு மான வந்து  வேட்டையாடிடுச்சி,  அதுக்கப்புறம் பின்னாடி ஒரு நாலஞ்சு சிங்க குட்டிகளும் வர ஆரம்பிக்குது.  எல்லாம்  கூட்டமாக உட்கார்ந்து அந்த மானை  ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பிக்குது. இத பாரத்துட்டே இருக்குற  ரெண்டு பேருக்கும் இந்த ரெண்டு குணங்கள் வந்து அதிகரிக்க ஆரம்பிக்கிறது.  

அட அருமையான ஒரு வேட்டையை  பாத்து முடிச்ச ஒரு களிப்பு ல  ஒரு நண்பரும், இன்னடா  இந்த மாதிரி அழகான மானுக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சி சொல்லிட்டு இன்னொரு நண்பர் வருத்தத்தில் உட்கார்ந்திருக்கிறார். 

அப்போது அந்த துறவி இந்த ரெண்டு   நண்பர்களையும் பார்த்து நீங்க என்ன கேட்டீங்க எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் அப்படின்னாரு.  என்ன சாமி மறந்துட்டீங்களா வாழ்க்கையின் ரகசியம் உங்களுக்கு தெரியும்னு சொன்னாங்களே, அத  தெரிஞ்சுக்கலாம் அப்படின்னு வந்து இருக்கிறோம்.  அப்படின்னு அவங்க  ரிப்ளை பண்றாங்க, 

அதற்கு அந்த துறவி வந்துசொன்னார். இந்தப்பா,  வாழ்க்கையினுடைய  ரகசியம் என்ன அப்படின்னு உங்களுக்கு சொல்றேன்.  ஆனா இதுல ரெண்டு விஷயம் இருக்குது.  தெரிஞ்சுக்கறது இன்னொன்னு அப்படின்னாரு.  சரி அதை இன்னொன்னு அதை நான் பின்னாடி சொல்றேன்.  இந்த மான் காலையில் எழுந்திருக்கும்போது இந்த மான் கூட்டத்துக்கே ஒரு விஷயம் தெரியும்.  என்ன அப்படின்னா?  நம்மை இன்னைக்கு ஏதாவது ஒரு சிங்கம் வேட்டையாட போகுது.  அல்லது ஏதாவது ஒரு மிருகம் நம்மை வேட்டையாட போகுது.  அப்படிங்கறது அதுக்கு தெரியும்.  அதனால்தான்  இயற்கை அதனுடைய உள் உணர்விலேயே ஏதாவது ஒரு சின்ன ஒரு அசைவோ சின்ன ஒரு சத்தமோ கேட்டால் கூட உடனே வந்து அத நல்லா உன்னிப்பா பார்த்து ஆபத்தை உணர்ந்து தப்பிச்சு போகக்கூடிய பலமும் வேகமும் அந்த புத்தியும் இந்த மானுக்கு இயற்கை கொடுத்து இருக்கு.  

இன்னொரு பகுதியில் பார்க்கும்போது அந்த சிங்கம் இன்னிக்கு நம்ம எப்படியாவது வேகமாக ஓடக்கூடிய மான வேட்டையாடி சாப்பிடணும்.  அப்படி இல்ல அப்படின்னா நம்முடைய குடும்பமே பட்டினி கிடக்கும் அப்படிங்கறத அந்த சிங்கத்துக்கும் தெரியும்.

 வாழ்க்கையோட மிகப் பெரிய ரகசியமே என்னன்னா,  எல்லா உயிர்களுக்குள்ளேயும் அது வாழறதுக்கான  அத்தனை தகுதிகளும் வைத்திருக்கிறது. அதுக்குள்ள இருக்கு.  ஆனா ஏதோ ஒரு தவறுனால  அந்த விஷயம் மாட்டிக்குது.  இந்த மான் எப்படி வந்து இந்த சிங்கத்து கிட்ட மாட்டுச்சோ அந்த மாதிரி ஏதோ ஓரிடத்தில் ஒரு சில தவறுகள் நடக்குது.

ஏனெனில் இந்த கூட்டத்தில் எத்தனையோ நூற்றுக்கணக்கான மான்கள் இருந்துச்சு,  அந்த ஒரு மான் மட்டும் இந்த சிங்கத்துக்கு இறையானது.  இதுக்க இதற்கெல்லாம் ஒரு காரணம் உண்டு.  இது தான் வந்து வாழ்க்கையோட ரகசியம்.  அப்படின்னு அந்த துறவியும் பதிலளிக்கிறார்.  இரண்டு நண்பர்களும் தலைசொறிந்துட்டு சாமி எனக்கு புறிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரி இருக்கு.  அப்படின்னு பதில் சொல்றாங்க.  

அதற்கு அந்த துறவி என்ன சொன்னார் அப்படின்னா நான் ஆரம்பத்திலேயே ஒன்னு சொன்னேன்.  வாழ்க்கையின் இரகசியத்தை பத்தி தெரிஞ்சிக்கணும்னா ரெண்டு விஷயம் இருக்குது.  ஒன்னு வந்து தெரிஞ்சுகிறது.  இப்ப நீங்க அத தெரிஞ்சிக்கிட்டிங்க,  இதில் இரண்டாவது ஒரு விஷயம் இருக்கிறது.  அது என்னன்னா?   உணர்ந்துகொள்வது.  தெரிஞ்சுகிறது யார் வேணாலும் தெரிஞ்சுக்கலாம்.  ஆனால் உணர்ந்து கொள்வதே எல்லோராலும் செய்து விட முடியாது.  அப்படி செஞ்சிட்டிங்கனா நீங்களும் என்ன மாதிரி மாறி இருக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு அவருக்கு அறிவுரை சொன்னார் இதுதான் வாழ்க்கையின் ரகசியம்.

No comments:

Post a Comment