வாழ்க்கை வரலாறு - பாரதியாரின் 10 ஆண்டுகால புதுவை வாழ்க்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 4, 2020

வாழ்க்கை வரலாறு - பாரதியாரின் 10 ஆண்டுகால புதுவை வாழ்க்கை

வாழ்க்கை வரலாறு - பாரதியாரின் 10 ஆண்டுகால புதுவை வாழ்க்கை 

புதுவை பயணம் 

அருமை நண்பர்களான சிதம்பரனாரும்,  சிவாவும் சிறையில் வாடுவது கண்டு மனம் நொந்தார் பாரதி.  தம்மையும் சிறைப்படுத்தினால் நாட்டு மக்களிடையே உரிமை உணர்வை ஊட்ட வல்லவர் யார் என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.  நண்பர்களுடன் அளவளாவினார்.  அதன் பலனாக புதுவை செல்ல முடிவெடுத்தார். 

தம் நண்பர் ஒருவருடன் புகைவண்டியில் சைதாப்பேட்டையில் பயணத்தை தொடங்கினார்.  இயல்பாகவே பாரதியார் சற்றும் அச்சமே இல்லாதவர் ஆனாலும் அன்று மனம் கலங்கி இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.  டிக்கெட் பரிசோதகர் வந்தபோதும் ஸ்டேஷன் மாஸ்டர் வந்தபோதும் காவலர் என்ற அச்சம் கொண்டார்.  அச்சமுற்றான் அறிவார் என்ற பழமொழிக்கு தேற்ற மனத்துணிவு பிறக்க ஆறுதல் அடைந்தாராம். 

முன்பின் அறியாத புதுவைக்கு குவளை கிருஷ்ணமாச்சாரியாரின் சட்டகர் குப்புசாமி அய்யங்கார் நாடி அவர் பயணம் தொடர்ந்தது.  நண்பர் கொடுத்த கடிதத்துடன் குப்புசாமி அய்யங்காரை ஒருவாறு அடைந்தார்.  பாரதியாருடன் சென்ற நண்பர் புதுவையில் அவரை விட்டுவிட்டு பாரதியாரின் மைத்துனரிடம் செய்தியைக் கூறினார்.  தேச பக்தரான அவர் துணிமணி போன்றவற்றை கவிஞருக்கு வாங்கி கொடுத்து ஆறுதல் வார்த்தைகளையும் கூறிச் சென்றதாக தெரிகிறது.  மேலும் அவர் சென்னை சென்று தன் சகோதரியை கடையத்துக்கு அழைத்துச் சென்றார். 

பாரதியார் பெருமை 

குப்புசாமி அய்யங்கார் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் பண்பினர்.  பாரதியைக் கண்டு உள்ளன்புடன் இருக்க இடம் கொடுத்து ஆதரித்ததால் அவரும் வரலாற்றில் இடம் பெற்றார் என்று கூறலாம். 

பாரதியாருக்கு தங்க புகலிடம் கொடுத்து வைத்த பெருமை அடைந்தது. ஆங்கில அரசின் அடக்குமுறை கொடுமைகளில் இருந்து தப்பிக்க இதோ ஒரு புகலிடம் உள்ளது என போற்றும் நிலையை புதுவை பெற்றது என்றால் அது மிகையாகாது.  பிற்காலத்தில் அரவிந்தர் ஐயர் வ வே சு போன்றோர் வருகைக்கும் இச்செயல் அடித்தளம் அமைத்தது என்று கூறலாம்.

காவலர் தந்த தொல்லைகள் 

பாரதியை கைது செய்ய எண்ணியவர்க்கு  ஏமாற்றம்தான் கிடைத்தது.  அவர் புதுவையில் உள்ள செய்தி அறிந்து வியந்தனர்.  சுதந்திர ஆர்வம் கொண்டவர்களுக்கு புகலிடம் உள்ள செய்தியை மறைக்க எண்ணி ஆங்கில அரசு தன்னால் ஆனதை செய்தது. உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுமா?  பாரதி புதுவையில் தஞ்சம் புகுந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.  

பாரதியாரை கண்காணிக்க காவலர்கள் அமர்த்தப்பட்டனர்.  புதுவையிலேயே தங்கி வேவு பார்க்கும் செயலை மிக வேகமாக செய்தும் அவர்களால் எதையும் செய்ய இயலவில்லை.  பாரதியார் மீது போலீசில் இலாகா மீது  மூலம் பொய் குற்றம் சுமத்த குறுக்கு வழியை தேடியும் கிடைக்கவில்லை.  அவரை ஒரு நிமிடம் நேரமும் நிம்மதியாக இருக்க விடாமல் அடாத செயல்கள் புரிந்தும் உண்மையே வென்றது பாரதியின் தேசப்பற்று.  அவரை புடம் போட்ட தங்கமாக மாற்றியது.  எனவே குள்ள நரித்தனமான குறுக்கு வழியை நாடி குப்புசாமி அய்யங்கார் பயமுறுத்தினர்.

குப்புசாமிக்கு ஏற்பட்ட நிலை 

குப்புசாமி அய்யங்கார் ஒரு சிறிய வியாபாரி.  சற்று பயந்த மனப்பான்மை உடையவர்.  போலீஸ் என்றாலே ஒரு காத தூரம் ஓடும் மனப்பான்மை கொண்டவர்.  காவலர் குப்புசாமி அய்யங்கார் அணுகி பாரதி சென்னை சர்க்காருக்கு பரம விரோதி என்று எச்சரித்தனர்.  எனவே அவரை நீர் வீட்டில் வைத்திருப்பது ஏற்றதன்று.  மீறினால் பல தொல்லைகள் நீர் அடைய நேரும் என்று எச்சரிக்கை செய்தனர். 

அய்யங்கார் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல ஆனது.  காவலர்களை தேடிக் கொள்ளவும் அவள் விரும்பவில்லை. பாரதியைப் பார்த்து வெளியேறி விடுங்கள் என்று கூறவும் நாக்கு வரவில்லை.  படாத பாடுபட்டார் முடிவில் வேறு வழியின்றி பாரதியிடம் சுவாமி தாங்கள் வேறு இடம் சென்று தங்கிக் கொள்ளுங்கள் இனியிம் உங்களுக்கு இடம் அளிப்பதால் என் குடும்பம் சீரழியும் என்று தயங்கிக் கொண்டே சொன்னார்.  மனிதர் நோக மனிதர் பார்க்கும் நிலை அறிந்த பாரதி அதை கேட்டு வியந்த கேட்கவும் செய்தார். 

முன்பின் தெரியாத இடத்தில் எங்கு செல்வது? எப்படி வாழ்வது?  ஒன்றுமே புரியாமல் கேட்க நேர்ந்தது ஐயா இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்.  நான் வேறு இடம் சென்று தங்கிக் கொள்கிறேன் என்றார்.  இரண்டு நாட்கள் கடந்தன. இடம் தான் கிடைக்க வில்லை.  அப்போது அவர் மனம் பதறியது குயில் பாட்டில் பின்வருமாறு பாடினார் போலும்.

நாளொன்று போவதற்கு நான்பட்ட பாட்டை 
தாளம் படுமோ தறிபடுமோ?  யார் படுவார்? 

இப்பாடல்  அடிகள் அர்த்தமுள்ள நிலையை விளக்கப் போதுமானதாகும்.  சில நேரங்களில் இப்படியும் ஒரு மனிதரா என்று அவர் மீது சினம் கொண்ட நேர்ந்தது.  எய்தவன் இருக்க அம்பை நோவது தகுமா என்று மனம் ஆறுதல் அடைந்து செய்வது அறியாது பாடி நின்றார்.  குறித்தபடி இடம் பெயராததால் அய்யர் முகம் கடுகடுத்தது.  நெஞ்சம் பொறுக்கவில்லை தெய்வமே எனக்கு வேறு வழி இல்லையா என்றுத் தெருத் திண்ணைமீது தியானித்தார்.  வழியும் பிறந்தது. 

ஆபத்பாந்தவன் குவளை 

உண்மை நண்பரை ஆபத்தில் உணரலாம் என்ற பழமொழியின் படி உற்ற நண்பர் குவளை கிருஷ்ணன் அங்கு வந்து சேர்ந்தார். நடந்ததை அறிந்த அவர் பாரதியாருக்கு யாமிருக்க பயமேன் என்று ஆறுதல் கூறித் தேற்றியும் மனசஞ்சலம் குறையவில்லை. மற்றொரு நண்பரான சுந்தரேச அய்யரால் வேறு வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.  இருள் நீங்கி ஒளி பிரகாசித்தது.

கண்ணன் என் சேவகன் 

பாரதியாரின் படைப்புகளில் ஒன்று கடன் பாட்டு கண்ணன் என் சேவகன் என்ற தலைப்பில் எங்கிருந்தோ வந்தான் என்ற பாடல் பிறக்க வழி பிறந்தது.  குவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியின் உள்ளம் மகிழும் வண்ணம் அவர் நண்பர் சீனிவாசன் அங்கு வந்து சேர்ந்தது மேலும் இன்பம் தந்தது.  சீனிவாசர் பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்ததால் கவிஞருக்கு மனதில் தைரியம் ஏற்பட்டது.  புதுவையின் கடற்கரையும்,  தோட்டங்களும்,  வீதிகளும் சோலைகளும்,  பாரதியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

இந்தியா மீண்டும் தோற்றம் 

வேறு எந்த மனிதனாக இருந்தாலும் எவ்வளவு இடர்பாடுகளை ஏற்க முடியுமா மனைவியை குடும்பத்தை மறந்து நாட்டு விடுதலையை பெரிதாக எண்ணினார். திருமால் ஆச்சாரியர் சீனிவாச போன்றோர் முயற்சியால் இந்தியா 1908ல் மீண்டும் புதுவையிலிருந்து அச்சாகியது.

புதுவையில் இந்த பத்திரிக்கை நடத்த பல எண்ணங்கள் தோன்றின புதுவை சட்டப்படி சர்க்காருக்கு ஜான்சி இந்தியர் முன்வரவேண்டும்.  சீனிவாசனின் நண்பரும் வில்லியனூர் வசியமான லக்ஷ்மி நாராயண அய்யர் அந்த பொறுப்பை ஏற்று உதவி புரிந்தார்.  ஒரு வீட்டை கூலிக்கு அமர்த்தி புதுப்பொலிவுடன் இந்திய வெளிவந்தது.  அதை கண்ட பாரதிக்கு ஏற்பட்ட இன்பத்தை எப்படி கூறி விளங்கவைக்க இயலும் 

பாரதியின் சீடர்கள்

முன்பின் அதிகம் பழக்கம் இல்லாத புதுவையில் சுமார் பத்தாண்டுகள் பாரதியார் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவரது சீடர்கள்.  அவர் சுமார் 35 சீடர்கள் அவருக்கு துணை நின்று பாரதியார்க்காக உடல் பொருள் ஆவியை இழக்கவும் சித்தமாய் இருந்தனர்.  அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சங்கரகிருஷ்ணன் பானு தோத்தாத்திரி அதிகமா போன்றோர் ஆவர் குவளைக்கண்ணன் பயன் கருதாத சீடர் என்று சொல்லலாம்.  வேணுகோபால் தேவசிகாமணி,  அம்மாக்கண்ணு அம்மாள்,  கோவிந்தன் ஆகியோர் பாரதியார் புலிப்பால் கொண்டு வா என்று உத்தரவிட்டால் வரக் கூடியவர்கள்.

பாவேந்தர் பாரதிதாசன் 

புரட்சிக் கவிஞர்,  பாவேந்தர் என்ற பாராட்டுகளுக்கு எல்லாம் உரியவர் பாரதிதாசன் ஆவார்.  இவர் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி தமிழ்ப்பணி சமுதாயப் பணி புரிந்த ஒரு மாபெரும் கவிஞர் கனக சுப்புரத்தினம் என்ற தன் பெயரை பாரதியாரிடம் கொண்ட பற்றின் காரணமாக பாரதிதாசன் என்று மாற்றம் செய்தார் அப்பெயரை என்று நிலை என்றும் நின்று நிலைத்து விட்டது 

பாரதியார் புதுவையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக விடுதலை பணியாற்றி உதவி புரிந்த நண்பர்கள் பாவேந்தரும் குறிப்பிடத்தக்கவர்.  புதுவையில் ஒரு திருமணத்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது.  பாரதியாரின் முன் எங்கெங்கும் காணினும் சக்தியடா என்ற பாடலைப் பாடி அவர் தம் உள்ளத்தில் என்றும் நீங்கா இடம் பெற்றார்.  

பாவேந்தரும் விடுதலை பாரதியாரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை மதிப்பை இறுதிவரையிலும் கடைப்பிடித்து தமிழ் பண்பாட்டை நிலைநாட்டியவர்கள் 

இருவருடைய பாடல்களும் விடுதலை உணர்வு பெண்கள் முன்னேற்றம் தமிழ்ப்பற்று,  நாட்டுப்பற்று,  போன்றவற்றை மையமாகக் கொண்டே பாடப்பட்டன.  மற்ற எல்லா தமிழ் அன்பர்களை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு என்றும் பாரதியாரின் உள்ளத்தில் இடம் பெற்றவர் பாவேந்தர் பாரதிதாசன் என்று சொல்லலாம்.

இந்த நிலையில் சிஷ்யர்களின் பெற்றோர் உறவினர்கள் வந்து அவர்களை தங்களுடன் வந்து விடுமாறு வேண்டினார். பாரதி அதற்கு மறுப்புரை பகிரவில்லை.  ஆனால் தேசப்பற்றும் பாரதியார் மீது ஆழ்ந்த அன்பும் கொண்டவர்கள் மறுத்துவிட்டதால் திரும்பவேண்டிய நிலை உண்டாயிற்று.  

பாரதியார் மனம் சோர்ந்த நிலையில் எல்லாம் இயல்பாகவே வியப்பான செயல்கள் நடைபெறுவது வழக்கம்,  தேசபக்தரும் புதுவை வந்து அடைந்தது பாரதிக்கு புதிய பலத்தை தந்தது.  அரவிந்தர் பிரஞ்சியர் குடியிருந்த தெருவில் குடிபுகுந்தார்.  அந்த இடம்தான் பிற்காலத்தில் அரவிந்தர் ஆசிரமம் என்று ஆனது. 

ஆஷ் கொலை 

கொடுங்கோலன் ஆஷ் துரையை வீரன் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றான். வீரர் சிதம்பரனார் கோவை கோவை சிறையில் செக்கிழுத்தார் கல்லுடைத்து மனத்தை உறுத்தியது முடிவு விபரீதமானது கொல்லப்பட்டதற்கு பாடம் போதித்த வாஞ்சிநாதன் புகழ் மறையுமா? 

வாஞ்சிநாதன் செய்த அந்த செயலால் சாதுக்களான கிராமவாசிகள் இளைஞர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாயினர்.  புதுவையிலும் அந்த பாதிப்பு தொடர்ந்து.  சுதேசி கொலை சந்தேக கண் கொண்டு பார்த்தவர்.  பாரதியாரின் குடும்பத்தினரும் சிறை செய்யப்பட்டனர்.  ஊரார் ஏச்சு பழிப்புரைகள்   போன்றவற்றை கவிஞர் குடும்பம் ஏற்க வேண்டி வந்தது.  பாரதியாருக்கு வரும் பணிகள் நிறுத்தப்பட்டன.  கடிதங்கள் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டன.  உதவி செய்தவர்களும் பயந்து கொண்டு பிறர் அறியாமல் செய்தனர்.  

தியாக உள்ளம் 

நாட்டின் நிலைமை ஒருபுறம்,  குடும்பப் பொறுப்பு ஒருபுறம்,  பாரதியாரைப் பற்றி இழுத்தன.  முடிவில் நாட்டின் நிலைமை தான் பெரிது என நினைத்து எதையும் இழக்க சித்தமானார்.  நாட்டிற்காக சிலரேனும் தங்கள் சுகத்தை உயிரையும் வழங்க வந்தால் நாட்டை விடுவிக்க இயலும் என்பது அவரது அசையாத நம்பிக்கை.  

தண்ணீரில் மூழ்கியவனுக்கு உயிர் வாழ சுவாசம் தேவை.  அது போல மனிதனுக்கு சுதந்திர தாகம் முக்கியம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவர் ஒரு குடும்பத்தை காக்க நினைப்பது இயல்பு.  அந்த வகையில் பாரதியோ இந்த பாரத தேசத்தை அடிமை இருளில் இருந்து காக்க முன் வந்தார். இந்த ஆற்றல் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படாது.

வறுமை நிலை

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அதிகரித்தன. வறுமை குடும்பத்தை வாட்டியது.  பாரதியாரிடம் பற்று கொண்ட நண்பர்கள் இரவு நேரத்தில் யாரும் அறியாமல் வந்து உதவி செய்து சென்றனர்.  சிஐடி களுக்கு மக்கள் அஞ்சியதை  இது காட்டுகிறது. 

இல்லை என்ற கொடுமையை இல்லையாக வைப்பேன் என்று வார்த்தை அவரது புண்பட்ட இதயத்தில் புறப்பட்டது.  "எப்படி வறுமையிலும் செம்மையாக வாழ்கிறீர்கள்"  என்று கேட்க அதற்கு பாரதி பின்வரும் பதில் கூறுவார் நான் என் கடமையை செய்கிறேன்.  அதனால் என் மனம் நிறைந்து இருக்கிறது இந்தக் கூற்று அவர் மனப்பக்குவத்தை உணர்த்தி நிற்கிறது. 

ஆங்கிலப் புலமை 

ஐரோப்பாவிற்கு சென்று வரலாம் என்ற எண்ணம் எழுந்ததால் பாரதியார் மனு செய்தார்.  வெள்ளையர் அரசு அதற்கு உடன்படவில்லை.  அவர் கோரிக்கை கிணற்றில் போட்ட கல் ஆனது.  ஒருமுறை இதைப் பற்றி பேச கவர்னர் மாளிகையில் இருந்து அழைத்து வந்தது.  ஆங்கிலேயரான இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாரதியின் ஆங்கிலப் பேச்சை கேட்டு வியந்தார்.  

நீங்கள் லண்டனில் ஆங்கிலம் கற்றுக் கொண்டீர்களா?  என்று அவர் கேட்டார்.  பாரதியாரோ நிலையிலும் காசியிலும் கற்றுக்கொண்டதாக அடக்கத்துடன் விடைபெற்றார்.  

இதுவரை நான் பார்த்து இந்தியர்களில் உயர்ந்த முறையான இங்கிலீஷ் பேசி நீங்கள் பேசி தான் கேட்டேன் என்று புகழ்ந்து பேசினார்.  தங்களைப் பற்றி சர்க்காரிடம் சொல்கிறேன் என்று கூறிச் சென்ற அவரால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை.  ஒரு வெள்ளையேர வியக்கும் அளவிற்கு ஆங்கிலப் புலமை பெற்ற பாரதியை ஒரு தெய்வீக ஆற்றல் பெற்ற மேதை என்று கூறுவது பொருத்தமானது.

பகைவனுக்கு அருளும் பண்பு 

ஒருநாள் தன் உடன் உரையாடிக் கொண்டிருந்த நண்பருடன் சென்ற பாரதியார் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை.  பக்கத்து ஊர்களுக்கு சென்று இருப்பார் என இருந்தனர்.   இரவு நெடுநேரமாகியும் திரும்பாத காரணத்தால் மனம் நொந்தனர். அவருடன் சென்ற நபர் யார் என உணர்ந்தும் அனலிடைப்பட்ட மெழுகானார் செல்லம்மாள். 

திருப்பாதிரிப்புலியூரில் தற்செயலாக பாரதியாரையும் நண்பரையும் சந்தித்த அவர் உறவினர் திரும்பப் புதைவைக்கே  அழைத்து வந்தார். சுதேசி களுக்கு இந்தியாவில் தடை நீங்கியது என்று பொய் சொல்லி அழைத்து சென்ற நண்பர் ஏமாந்தார் பின்பு பாரதியாரிடம் அவரை திரும்பி வந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டி பகைவனுக்கும் அருளும் வணக்கம் குணம் கொண்ட பாரதி அவரை மன்னித்து அன்பு காட்டி மகிழ்ந்தார்.

படைப்புகள் 

புதுவையின் இயற்கை சூழல் கவிதை மழை பொழியும் ஆற்றலை ஏற்படுத்தின அதுதான் குயில் பாட்டு தோன்றியது காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் பாடல்கள் காலத்தால் அழியாத கண்ணன் பாட்டு பாஞ்சாலி சபதம் முதல் பகுதி போன்றனவும் அங்குதான் தோன்றின சுதேச கீதங்கள் படம் அந்த புதுவை மண்ணில்தான் 

பாரதியார் பித்தரா?

பாரதியாரின் உண்மையான அன்பு உள்ளத்தை உணராத மக்கள் அவரை பித்தன் என்று ஏளனம் பேசி இகழ்ந்தனர்.  அவருடைய புதல்வியே அவரை பார்த்து அப்பா உங்களைப் பித்தன் என்று  என்று கூறுவதன் காரணம் என்ன என்று கேட்டார்.  சிவனே பித்தன் தானே?  என்னை பித்தன் என்று சொல்வது பொருத்தம் தான் என்று கூறிய சமாதானம் செய்தார். தம்மை இகழ்பவரையும் கேலி பேசுபவரையும் மன்னித்தல், எதையும் சமமாக எண்ஷதல்  போன்ற பண்புகள் பாரதிக்கே உரியன.  பிற்காலத்தில் தான் அவர் பெருமையை உலகம் அறிய முடிந்தது.

புதுவை வாழ்வு கசந்தது 

சுமார் 10 ஆண்டுகாலம் பாரதிக்கு அடைக்கலம் கொடுத்து புதுவை பெருமை பெற்றது.  "வேதம் படித்த அந்தணனிடத்திலிம்,  மாமிசம் தின்னும் புலையனிடத்திலும்,  பசுவினிடத்திலும்,  நாயினிடத்திலும் சமநோக்கு உடையவர்களே உண்மை மனிதர் என்ற கீதையின் வாக்கியங்களுக்கு பாரதியாரை உதாரணமாக காட்டலாம். 

எத்தகையோர்க்கும் தன் சொந்த ஊரின் நினைவு தோன்றுவது இயற்கையே. அந்த வகையில் பாரதிக்கும் எட்டையபுரம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  சிறைவாசத்துக்கு ஏன் அஞ்சவேண்டும் சிறை செல்லவும் தயார் என்று துணிந்து நின்றார்.  1919 ஆம் ஆண்டு ஒருநாள் புதுவையை விட்டு  நம் புனித கவிஞர் புறப்பட நேர்ந்தது.  கடலூரில் பாரதியை கைது செய்ய காவலர் அணுகினார்.  என் மேல் என்ன குற்றம் கண்டீர் என்று பாரதி கேள்விக்கணைகள் தொடுத்தார்.  

அவை செவிடன் காதில் ஊதிய சங்கானது.  கவிஞரைக் கைது செய்தனர் 20 நாட்கள் வைத்து தன் மனக் கொதிப்பை வெளிப்படுத்தினர். 

தென்னாட்டில் ஒரு குறிப்பிட்ட ஊரில் வசிக்கலாம்.  நம் இஷ்டப்படி சுற்றக்கூடாது.  மற்ற ஊர்களுக்கு சென்றால் கண்காணிப்பு அவசியம் என்று உத்தரவு பிறந்தது.  பாரதியார் விடுதலை அடைந்தார்.  

சுதேச இயக்கத்தில் ஆர்வம் கொண்ட நல்ல உள்ளங்கள் அந்த இனிய செய்தியை கேட்டு மகிழ்ந்தனர்.  

பாரதியார் உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகளே.  ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியே புதுவையில் கழித்தார்.  புதுவை கடற்கரையும் சோலைகளும் பாரதியின் நினைவை நமக்கு என்றும் உள்ளத்தில் நிலைபெறச் செய்து வருகின்றன.  இங்குதான் பகவத்கீதையைப் பாரதியார் மொழிபெயர்த்தார். 

பாரதி அங்கிருந்து புறப்படாமல்  இருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க கூடும்.  விடுதலைப் பறவையான அவரால் மனசாட்சிக்கு கட்டுப்படாமல் இருக்க இயலாது.

No comments:

Post a Comment