ரசமான வேலை - தமிழ் சிறுகதை - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 10, 2020

ரசமான வேலை - தமிழ் சிறுகதை

ரசமான வேலை - தமிழ் சிறுகதை



பர்வத நாட்டை மரகத வண்ணன் என்ற அரசன் ஆண்டுவந்தான்.  நாட்டுப்பற்று மக்களிடம் அளவற்ற அன்பு கொண்டவர்.  அன்பு என்ற சொல்லுக்கே பொருளாக அவன் விழங்கினான்.  மன்னன் மரகதவண்ணன் பெயருக்கு ஏற்ப மக்கள் மனதில் மரகதம் ஒளிரும்.  தான் தனது முன்னோர்கள் நாட்டுக்கு செய்துவிட்டு சென்றிருந்த நற்பணிகள் அனைத்தும் தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்தான். 

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை மன்னன் நன்கு உணர்ந்திருந்தான். அதனால் தனது முன்னோர்கள் கட்டிவிட்டிருந்த அன்ன சத்திரங்கள் அனைத்தையும் பாங்குற நடைபெற ஆவண செய்திருந்தான்.  

ஒரு சமயம் மன்னன் மாறுவேடம் புனைந்து மக்களின் நலமறிய அமைச்சர் சிலரோடு சென்றான்.  நாட்டின் வட பகுதியில் திருட்டு என்ற பகுதியில் அன்னசத்திரம் ஒன்று தேவைப் படுவதை உணர்ந்தான் மன்னன்.  

அது முன்னோர்கள் பல இடங்களில் அன்ன சத்திரங்கள் கட்டியிருந்தார்கள் நாட்டின் பல இடங்களுக்கு மக்கள் திண்ணந்திட்டைக் கட்டியிருந்தார்கள். நாட்டின் பல இடங்களுக்கு மக்கள் தின்னந்திட்டைக் கடந்து சென்றனர்.  ஆனால் அவ்விடத்தில் ஓர் அன்னச் சத்திரம் இருந்தால் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நினைத்தான். அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தான் 

மன்னன் விருப்பமாயிற்றே? நினைத்த காரியம் தடைபடும் என்ன?  குறிப்பிட்ட இடத்தில் சத்திரம் கட்டும் பணி ஆரம்பமாகியது.  காற்றோட்டமான சமையலறையும்,  பொருள்கள் சேகரித்து வைக்க தனி அறையும்,  நீர் வசதிக்காக கிணறும்,  சமையலுக்கு தேவைப்படும் பாத்திர வகைகளும் சமைத்த உணவை அமர்ந்து சாப்பிட அகலமான காற்று வசதி உள்ள வெளிச்சம் நிரம்பிய கூடங்களும் அமைக்கப்பட்டன.  

சத்திரத்தின் பின்புறம் காய்கறி வகைகள் பயிரிடப்பட்டன.  சமையல் வேலை செய்வதற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கைதேர்ந்த சமையல்காரர்கள் அமர்த்தப்பட்டனர்.  ஒரு நல்ல நாளில் குல தெய்வத்திற்கு பூஜை செய்துவிட்டு மன்னன் மரகத வண்ணன் அந்த சத்திரத்தில் அனைவரும் உணவு உண்ண ஏற்பாடு செய்தான். 

முதல் நாள் மன்னனே வந்தவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தான்.  பின்னர் சத்திரத்தின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துத் தக்கவரிடம் விட்டு சென்றான்.  மாதங்கள் சில கடந்தன.  மன்னன் உணவு உண்ணும் வேளையில் தான் அமைத்த சத்திரம் எப்படி இருக்கிறதோ சுவையான உணவு பரிமாறப்படுகிறதோ  வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாது தட்டுப்பாடின்றி உணவு அங்கு பரிமாறப் படுகிறதோ என்று சிந்திப்பது உண்டு.

திண்ணந்திட்டில் அமைக்கப்பட்டுள்ள அன்னசத்திரத்தின் பெயர் அமுதசுரபி. பெயருக்கு ஏற்ப அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கி வந்தது. பொருத்தமான இடத்தில் சத்திரம் இருந்ததால் வழிப்போக்கர்கள், சாதுக்கள், தாய்மார்கள், குழந்தைகள் முதியோர் பலர் அங்கு தங்கி உணவு உண்டனர் 

மன்னரை வாயார வாழ்த்திச் சென்றனர்.  ஒரு முறை மன்னர் அமைச்சர் கருணாகரத் தேவரையும் மற்றும் சில ஆலோசகர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சத்திரத்திற்கு வந்தார்.  கடைசி பந்தி போஜனம் நடந்து கொண்டிருந்தது.  மன்னரும் மற்றவர்களும் மாறுவேடத்தில் இருந்தனர். அதே பந்தியில் அமர்ந்து உணவு உண்டார். எல்லாருக்கும் நல்ல பசி வேளையில் ஒரு பொரியல்,  கீரை மசியல்,  சுண்டை வற்றல் இவற்றோடு அன்னம் பரிமாறப்பட்டது. 

கடைசி பந்தியானதால் காய்கறிகளுடன் வெந்த புளிக்கூட்டு அவர்களுக்கு இல்லாது போயிற்று.  கடைந்த பருப்பில் உப்பு மிளகு கூட்டி நறுமனமத் தழையிட்ட ரசம் வார்க்கப்பட்டது.  மன்னர் பருப்பு ரசத்தை ருசிப்பார்த்தார்.  மனதில் நிறைவு ஏற்படவில்லை.  உடன் வந்தவர்கள் முகங்களிலும் சந்தோஷத்தின் பசித்திருந்ததின் அடையாளமே தெரியவில்லை.  மன்னர் ஒரு முடிவுக்கு வந்தார்.  

மன்னர் அரண்மனையில் அமுதசுரபி அன்னச் சாவடியில் உண்ட உணவை பற்றி விவாதித்தார்.  முதல் நாள் மன்னரோடு வந்தவர்கள் அனைவரும் அவரோடு இருந்தனர். மன்னர் சத்தரத்தின் நிர்வாகம் மேலும் சீரிய முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.  அந்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.  எந்த முறையில் சத்திரத்தில் நல்லவிதமாக நிர்வகிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  ஒவ்வொரு நாளும் நம்மில் யாராவது ஒருவர் செல்லலாம் என்று ஒரு அமைச்சர் கூறினார். 

உணவுப் பொருட்களை இங்கிருந்தே வாங்கி அனுப்பி விடலாம் என்றார் ஒருவர்.  தினமும் காய்கறிகள் புத்தம் புதிதாய் பசுமையாய் கிடைக்க செய்ய வேண்டும் அப்படி செய்தால் உணவில் நல்ல ருசி இருக்கும் என்றார் ஒருவர். 

சமையல்காரர்கள் மாற்றி விட்டால் என்ன என்றார் ஒருவர்.  இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினார்கள். மன்னர் அனைவரது கூற்றையும்  ஏற்றுக் கொண்டார்.  அதைப் பற்றி சிந்திக்கவும் செய்தார். இதுவரை எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கருணாகரத் தேவரை பார்த்து மன்னர் தாங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று வினவினார். 

கருணாகர தேவர் புன்னகை புரிந்தார்.  அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது ஆயினும் இது எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது.  அதை சரி செய்தால் தான் சத்திரத்தின் உணவு சரித்திரம் படைக்கும் என்று எனக்கு தோன்றுகிறது மன்னா என்றார் அமைச்சர். 

அமைச்சரின் உரையை கேட்ட மன்னர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.  என் மனதில் இத்தனை நேரம் உறுத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியும் இதுவே.  என்ன செய்யலாம் என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னர்.  அந்த நேரத்தில் அவர்கள் அருந்துவதற்காக அரண்மனையிலிருந்து சுவையான சூடான கலவைகூழ் ஒன்று வந்தது.  அதில் நறுமண எண்ணெய் தாளிக்கப்பட்டிருந்தது. அந்த மணம் நாசியை துளைத்தது.  அதனால் மறந்திருந்த பசி உணர்ச்சி மீண்டும் ஏற்பட்டது. அங்கு வந்த அரசியார் அன்னையைப் போல சாலப் பரிந்து விருந்தோம்பல் செய்தார்.  

வீரத் தளபதியான மாமல்லன் கலவையை கூழ் சாப்பிடும்போது கிண்ணத்திலிருந்து உறிஞ்சி பருகினான்.  மற்றவர்கள் மன்னர் முன்னிலையில் சாப்பிடுகிறோம் என்ற உணர்வில் இயற்கையான தங்கள் ஆசையை அடக்கிக் கொண்டு இருந்தனர்.  

மாமல்லன் கூழ் அருந்திய காட்சியை அமைச்சர் கருணாகர தேவன் கண்ணுற்றார்.  அவர் சிந்தையில் ஒரு பொரி தட்டியது.  சத்திரத்தின் குறை நீங்க வழி ஒன்று கண்டுபிடித்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.  

மறுநாள் மன்னர் நாட்டில் பறை அறிவித்தான்.  திண்ணந்திட்டிலுள்ள அமுதசுரபி அன்னச் சத்திரத்தில் விருந்து ஒன்று நடைபெற இருக்கிறது. எல்லாரும் வந்து விருந்துண்டு செல்ல வேண்டும். இது மன்னரின் அன்பு கட்டளை.  

மகிழ்ச்சியோடு சென்றவர்கள் சத்திரத்து வாசலில் இருந்து அறிவிப்பை கண்டதும் பசி அடங்கி உயிர் ஒடுங்கிப் போயினர்.  அப்படி வந்தவர் அனைவரையும் திடுக்கிட வைத்த செய்தி...... 

இன்று இங்கு விருந்து உண்பவர் எவரும் உணவு வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.  அதற்கு தடையில்லை.  பங்கய நாட்டிலிருந்து விசேஷ சமையல் நிபுணர்கள் வந்து உள்ளனர்.  விருந்தில் விசேஷமாக பன்னீர் ரசம் பரிமாறப்படும்.  ரசத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம்.  ஆனால் ஒரு நிபந்தனை.  ரசம் அருந்துபவர்கள் அன்னத்தில் கலந்து பிசைந்து உண்ஷவர்கள் எவரும் உறிஞ்சுதல் கூடாது. அப்படி செய்தால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.  

அந்த அறிவிப்பை வந்தவர்கள் அனைவரும் படித்தனர்.  சிலர் முணுமுணுத்தனர் ஒருவரோடு ஒருவர் இதுபற்றி சர்ச்சை செய்து கொண்டனர்.

முதல் பந்தி உணவு அளிப்பதற்காக தலைவாழை இலைகள் வரிசையாக போடப்பட்டன. மக்கள் அனைவரும் இலையின் முன் அமர்ந்தனர்.  வகைவகையான உணவுகளை அவரவர் விருப்பப்படி பரிமாறப்பட்டன.  சமைத்த பண்டங்கள் நிறமும் நறுமணமும் எச்சிலைக் கூட்டி விழுங்கி வைத்தது.  ஆயினும் நெஞ்சில் பயம் கூடு கட்டிக் கொண்டிருந்தது.  ரசம் பரிமாறுவதற்கு முன்பே வயிற்றை நிரப்பிக் கொண்டு எழுந்து விட்டனர் மக்கள் பலர். 

பன்னீர் ரசம்,  பன்னீர் ரசம் என்று பரிமாறுபவர் கூறிக் கொண்டு வரும்போது பந்தியில் அமர்ந்து இருந்த பாதிப்பேர் கைகழுவி விட்டனர்.  சிலர் இலையின் முன் கவிழ்ந்து படுத்து தயிர் தயிர் என்றனர்.  அது உயிர் உயிர் என்று கத்துவது போல மன்னனின் செவியில் விழுந்தது.  இந்த விதமாக முதல் பந்தி முடிந்துவிட்டது.  மன்னரும் அமைச்சரும் என்ன செய்வது என்பது புரியாமல் திகைத்து நின்றனர்.  இரண்டாவது பந்தி தொடங்கியது.  மன்னர் முகத்தில் கவலை திரண்டது.

வைத்த குறி தப்பாமல் ஆள் அகப்படுவானா?  என்ற சிந்தனையில் மனம் லாடுவைப்போல உதிர்ந்து கொண்டிருந்தது.  இலையில் உணவு வகைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன.  மூன்றாவது வரிசையில் ஏழாவது நாளாக ஆஜானுபாகுவாக ஆரோக்கியம் உள்ளவனாக அமர்ந்திருந்தான் காசி பிரசாத்.  

இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை கையாள ஒதுக்கிய இடத்தில் இருந்து அவன் சாப்பாட்டு பிரியன் என்பது விளங்கிற்று.  இலையின் முன் அமர்ந்திருந்த எல்லாரும் விசையால் இயங்கும் பதுமை போல் சாப்பிடுவதைக் கண்டான் காசி பிரசாத். 

நல்ல சுவையான உணவு பதமான பக்குவத்தில் இதமான சூட்டில் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சப்தம் கூட எழவில்லை எப்படி இவர்களால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட முடிகிறது என்று காசி பிரசாரத்திற்கு வியப்பாக இருந்தது.  அருகில் அமர்ந்திருப்பவர்களை பார்த்து ஏன் இப்படி சாப்பிடுகிறீர்கள்?  பலகார வகைகளையும் உணவு வகைகளையும் பார்த்து உங்களுக்கு பசி அடங்கி விட்டதா என்று கேட்டான்.  

அதே நேரத்தில் சூடான பன்னீர் ரசத்தை மணக்க மணக்க எடுத்து வரும்போது ரசத்தின் மணம் ஆளைத் தூக்கி கொண்டு போயிற்று.  ரசம்,  ரசம் என்று பரிமாறுபவர் அங்குமிங்கும் அலைந்தனர்.  சிலபேர்கள் சிறிதளவு  ரசம் ஊற்றும்படி கேட்டனர். சிலபேர் வேண்டாம் என்று கை தலையசைத்தனர். 

மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த காசி பிரசாத் ரசத்தின் வருகைக்காக அன்னத்தைக் குவித்து வைத்து நடுவில் குளம் வெட்டி இருந்தான்.  ரசம் பரிமாறுபவரகளும் சந்தோஷமாக அவனுக்கு சூடான ரசத்தை வேண்டியமட்டும் ஊற்றினர்.  

ரசத்தின் ருசி காசி பிரசாத்தை மெய்மறக்கச் செய்தது.  அன்னத்தை நன்கு பிசைந்து சேர்ந்து உர் என்று உறிஞ்சி சாப்பிட்டான்.  சாப்பிட்டுக்கொண்டிருந்த எல்லாரும் திடுக்கிட்டுப் போய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர்.  கையில் எடுத்து அன்னம் கையிலேயே இருந்தது.  வாய்க்குள் போகவில்லை.  வாயில் மென்று கொண்டிருந்த உணவு மேலே போகாமல் இருந்தது.  திறந்த வாய் திறந்தபடி இருந்தது.  மூடிய வாய் மூடியே இருந்தது.  இருபுறமும் அமர்ந்திருந்த இருவரும் ஒரே நேரத்தில் காசி பிரசாத்தின் கையை பிடித்தனர்.

 வாயிலிருந்து அன்னத்தை விழுங்கிவிட்டு காசி பிரசாத் அவர்களைப் பார்த்து அருமையான ரசத்தை சாப்பிட விடாமல் கையை ஏன் பிடிக்கவில்லை என்று என்றான்.  பன்னீரை சத்தை உறிஞ்சி சாப்பிட்டால் சிறை தண்டனை என்று உனக்கு தெரியாதா?  வாசலில் உட்புறம் எழுதி வைத்திருந்த செய்தியை படிக்க வில்லையா?  என்று பதறிப்போய் கேட்டனர்.  காசி பிரசாத் பலமாக சிரித்தான். எவ்வளவு சுவையான விருந்து.  அருமையான ரசம்.  அனுபவித்து சாப்பிடாமல் என்னால் இருக்க இயலாது.  பன்னீர் சத்தை உறிஞ்சி சாப்பிட்டு விட்டு நான் சிறை சென்றாலும் பரவாயில்லை.  இருப்பது அனுபவித்து ஆனந்தித்துச் சாப்பிடாமல் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்னைத் தடுக்காதீர்கள் என்றான். 

காசி பிரசாத்தை அட்டகாசமாக பன்னீர் இரத்தத்தை உரிஞ்சி உரிஞ்சி சாப்பிட்டான்.  மறைந்திருந்த மன்னரும் அமைச்சரும் மனம் மகிழ்ந்தனர். காசி பிரசாதத்தோ உண்டு முடித்து நிறைவான மனதோடு வெளியே வந்தான்.  மன்னர் மாறு வேடத்தைக் கலைத்தார்.  அமுதசுரபி அன்ன சத்திரத்திற்கு காசி பிரசாத் தலைமை அதிகாரி என்று அறிவித்தார்.  எவர் ஒருவர் தான் உண்ணும் உணவை ரசித்து புசிக்கிறாரோ அவரே இந்த சத்திரத்தின் தலைமை அதிகாரியாக வேண்டும்.  அப்போதுதான் சத்திரத்தில் உண்ண வரும் மக்களுக்கு சுவையான உணவு தடை இன்றி எந்நேரமும் கிடைக்கும்.  தான் எப்படி உண்கிறோமோ அவ்விதமே அடுத்தவரும்  கு உண்ண வேண்டும் என்று நினைக்கும் இயல்பு இப்படிப்பட்டவர்களிடம் தான் இருக்கும் என்று அமைச்சர் கருணாகரத் தேவர் மன்னரிடம் ஆலோசனை கூறியிருந்தார்.  

அப்படிப்பட்ட ஆளைத் தேர்ந்தெடுக்கவே இந்த தேர்வுக்களம்  அமைக்கப்பட்டது.  இந்த களத்தில் வெற்றி பெற்றவன் காசி பிரசாத்தை என்று புலனாகியது.  உண்ண வந்திருந்த அனைவரும் உண்மையை அறிந்தனர்.  உள்ளம் மகிழ்ந்து முடிவினை ஏற்றுக்கொண்டனர். 

மன்னர் வாழ்க
 மந்திரியார் வாழ்க வாழ்க என்று ஆனந்தக் கூச்சலிட்டனர்.

No comments:

Post a Comment