வாழ்க்கை வரலாறு- பார்புகழும் சுப்பிரமணிய பாரதியின் இளமைப்பருவம்
மலர்தலை உலகின் அவ்வப்போது மாட்சிமை பொருந்திய மக்கள் தோன்றி இறந்தும் இறவாப் புகழ் பெற்றுத் திகழ்வது நாமறிந்த ஒன்று. உலகம் அழியாமல் இருப்பதன் காரணம் அத்தகைய பண்பாளர்கள் தோற்றமே என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூற்று.
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறும் தன்னலம் கருதாமல் பொது நலம் கருதும் சான்றோர்கள் வாழ்வதால் உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறுகிறது. அந்த வரிசையில் சிறப்புடன் சில சான்றோர்கள் தோன்றி நாட்டையும் நாட்டு மக்களையும் வாழவைத்து சென்றதே நம் இலக்கியங்களில் அறிந்து மகிழ்கிறோம்.
சுப்பிரமணிய பாரதியின் பிறப்பு
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பண்பாட்டால் நாகரீகத்தால் உயர்ந்தது தமிழகம். தமிழகத்தில் சிறந்தது திருநெல்வேலி நகரம் ஆகும். திருநெல்வேலி பால தீரர்களையும் அறிஞர்களையும் நாட்டுக்கு ஈந்து பெருமையில் ஓங்கி நிற்கிறது. அம்மாவட்டத்தில் எட்டையபுரம் என்ற ஊரில் சின்னசாமி அய்யர் என்ற சான்றோர் வாழ்ந்து வந்தார். திருவள்ளுவருக்கு மனைவியாக வாய்த்த வாசுகி போன்று சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் திகழ்ந்தார். அந்தணர் என்போர் அறவோர் என்ற நெறிப்படி அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் செய்த அருந் தவப் பயனாய் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி மூல நட்சத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. "ஆண் மூலம் அரசாளும்" என்று சான்றோர் வாக்கிற்கு ஏற்ப அக்குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். தெய்வ நம்பிக்கை மிகுந்த அவர்கள் தங்கள் அன்பு மகனுக்கு முருகனது பெயரான சுப்பிரமணியன் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தனர். சுப்பிரமணியன் என்ற பெயர் நாளடைவில் சுப்பையா என்று அனைவராலும் அழைக்கப் பட்டது.
தாயாரின் மறைவு
இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது இயற்கையின் நியதி. அந்த மரபுப்படி ஐந்து வயதில் சுப்பையா தம் அன்புத் தாயை இழந்தார். தாயற்ற பிள்ளை என்று பலரும் பரிதாபப்படும் நிலை வராமல் பாட்டியும் அத்தையும் கண்ணை இமை காப்பது போல காத்து வந்தனர். மறுமணம் செய்து கொண்டால் எங்கே தன் குழந்தை சிற்றமையால் துன்புறுமோ என்ற அச்சத்தால் அந்த எண்ணத்தையே முற்றும் நீக்கி சின்னசாமி அய்யர் வாழ நேரிட்டது.
மறுமணம்
பின்னர் உற்றார் உறவினர் வற்புறுத்தல், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு மறுமணம் புரிய ஒத்துக்கொண்டார். வள்ளியம்மாள் என்ற அருங்குணச் செல்வியை இரண்டாம் மனைவியாக ஏற்றார். அவளுக்கு எந்தவகையிலும் குறையாதவர் என்றே கூறலாம். சிற்றன்னை பெற்ற அன்னையை போல் ஒரு குழந்தையைப் பேணி வளர்த்த பெற்ற தாயினும் உற்ற தாயான அவளிடம் சுப்பையாவும் குழந்தைகள் வளர்ந்து வந்தனர். சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்ற கருத்தின் படி சின்னசாமி அய்யர் தமக்குத் தாமே கணிதம் போன்றவற்றை கற்பித்து வந்தார்.
பள்ளிக்கல்வி
உரிய வயதில் சுப்பையா பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அவரின் மனம் கல்வியில் முழுமையாக ஈடுபாடு கொள்ளவில்லை. இயற்கை அழகை கண்டு ரசித்த கடவுள் காட்சியில் சிந்தித்தல் போன்றன அவரது வழக்கமானது. அதனால் புத்தகம் சிலேட்டு போன்றவற்றை தொலைத்து விடுவார். வள்ளியம்மை யாரோ தன் கணவரிடம் அதை மறைத்து புதிதாக வாங்கி கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்பார். சின்னசாமி ஐயர் தன் மகன் தன்னை அறியாமல் தனது அரசவைப் பணியிலேயே கவனமாக இருந்து வந்தார்.
குழந்தைப் பிராயத்திலேயே தன்னையொத்த சிறுவர்களுடன் விளையாடி மகிழும் வாய்ப்பு சுப்பையாவிற்கு இல்லாமல் போயிற்று. பெரிய அறிஞர்களுடன் அமர்ந்து வேதாந்த தத்துவங்களை பற்றி விவாதம் செய்வது அவரது வழக்கமான செயலாக இருந்தது.
தாய்வழி பாட்டனார் வீட்டில் தங்கியிருந்து தந்தைக்கு தெரியாமல் அவர் அரசவைக்குச் இல்லாத நேரம் பார்த்து சுப்பையா அரசவைக்கு செல்வார். தாம் இயற்றிய கவிதைகளை அரசரிடன் காட்டி மகிழ்வார். அரசரோ கவிஞரது மதிநுட்பம் கண்டும் கேட்டும் வியந்ததில் ஐயமில்லை. சின்னசாமி ஐயர் இடம் சுப்பையாவின் ஆற்றலை கவிதைத் திறனை கூறி மகிழ்ந்தார். அன்பு மகனின் அறிவு ஆற்றல் கேட்டு மகிழ்ந்த தந்தையின் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏது.
ஞானசம்பந்தரால் சீர்காழி பெருமை பெற்றது. நம் சுப்பையாவால் எட்டையபுரம் பெருமை பெறுகிறது என்ற பேச்சு ஊர் முழுதும் ஒலித்தது.
பாரதி ஆனார்
கவிஞன் உருவாவதில்லை. கருவிலேயே திருவுடன் பிறக்கிறான். அம்முதுமொழிப்படி ஏழு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் கவிஞருக்கு அமைந்தது. கற்ற அறிஞர்கள் சமஸ்தானப் புலவர்கள் முன்னிலையில் அவர் பாரதி பட்டம் பெற்றார். அன்று முதல் இவ்வுலகம் ஆர் விகுதி சேர்த்து பாரதியார் என்றே வழங்கி வருகிறது அவர்கள் இயற்கை இறைவன் போன்ற தலைப்பில் அமைந்தன.
பாரதி சின்னப் பயல்
கவிஞருக்கு பாரதியார் மீது அழுக்காறு ஏற்பட்டது. இந்த சிறிய வயதில் இவ்வளவு கவித்திறனா என்று வியந்தார். பாரதியார் போட்டிக்கு அழைப்பதற்கு உடன்பட்டார் பாரதி சின்னப் பயல் என்று ஏற்று அடியை கொடுத்து வெண்பா போட்டிக்கு அழைக்க பாரதி அதற்கும் உடன்பட்டார்.
பாரதி சின்னப்பயலே என்ற ஈற்றடியைக் கொடுத்துப் போட்டி நடந்தது. பாரதி காந்திமதி நாதனின் சிறுபிள்ளைத்தனத்தை பின்வருமாறு பாடி வெளிப்படுத்தினார்.
"காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்"
என்ற பாடலால் காந்திமதிநாதன் வெட்கி தலைகுனிய நேரிட்டது.
நெல்லை இந்துக் கல்லூரி கல்வி போதித்த பெருமையைப் பெற்றது. அவரது ஒன்பதாம் வகுப்பு வரைதான் எனினும் உயர்கல்வி பெற்றவருக்கு உரிய ஆற்றல் பாரதியாருக்கு இயல்பாய் அமைந்திருந்தது. பல கற்று உணர்ந்த அறிஞர்கள் பாரதியுடன் வாதம் செய்து வெல்ல இயலாமல் வாயடைத்து சென்ற காட்சிகள் தொடர்ந்தன.
திருமணம்
அக்காலத்தில் பாலிய விவாகம் என்று அழைக்கப்படும் குழந்தை திருமணம் வழக்கத்திலிருந்து ஒன்று. அந்தக் கொடிய வழக்கம் நம் கவிஞரையும் விட வில்லை. தன் 14 ஆம் வயதில் செல்லம்மாள் என்ற 7 வயது சிறுமியை மணந்தார். இது எத்தகைய திருமணம் என்று எண்ணிப்பார்த்தால் நகைப்பு தானே தோன்றும் அல்லவா.
தந்தையாரின் இழப்பு
எட்டையபுரம் அரண்மனையில் அலுவல் புரிந்து வந்த சின்னசாமி ஐயர் திடீரென்று மரணம் அடைந்தார். பாரதியோ மாலுமி அற்ற கலம் போல வருந்தினார். இளம் பருவத்திலேயே தாய் தந்தை இருவரையும் இழப்பது என்பது சிறிதா? அனுபவித்தவர்களால் அல்லவா அதன் துன்பத்தை உணர இயலும். கலைஞரின் குடும்பம் வாழும் வழி தெரியாமல் தவித்தது.
கார்த்தி வாழ்க்கை
நமது பாரதநாட்டின் புண்ணிய தலங்களில் ஒன்று காசி. வாழ்நாளின் பிற்பகுதியில் காசி செல்வது உலகவழக்கு. நம் கவிஞரோ இளமையிலேயே அழியாத செல்வமான கல்வியை கற்கும்க்கும் நோக்குடன் காசி சென்றார். தன் அன்பு மனைவியை பிரிய மனம் இல்லை. எனினும் கடமை முந்திக்கொள்ள தம் அத்தை குப்பம்மாள் ஆதரவில் காசியில் வாசம் தொடங்கியது.
அத்தை குப்பம்மாள்
தந்தையை இழந்த நிலையில், அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் குப்பம்மாள் உதவினார். தன் பிள்ளையை போல நடத்தி வந்தார். இறுதி வரை அவரது அன்பை பாரதி மறக்கவில்லை.
காசியில் உள்ள இந்தக் இந்துக்கல்லூரியில் கல்வி தொடர்ந்தது மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் கற்று புதுமுக தேர்வில் முதலாவதாக வெற்றியை ஈட்டினார். அதை கண்டு அத்தையர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
பன்மொழிப் புலமை பாரதி
தம் தாய்மொழியாம் தமிழுடன் ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் வங்காளி போன்ற பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். அதனா லன்றோ "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாட முடிந்தது.
மனவேறுபாடு
அத்தை குப்பம்மாள் ஆதரவில் காசியில் பயின்று வந்த போது மாமா கிருஷ்ண சிவனும் அவர்மேல் அன்பு காட்டத் தவறவில்லை. பாரதிய எக்கவலையும் இன்றி தன் கல்வியைத் தொடர முடிந்தது. கற்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கவிதை புனைதல், நண்பர்களுடன் அளவளாவுதல் செய்வது வழக்கம்.
பாரதியார் அந்தணர்க்கு உரிய கட்டுப்பாடு இன்றி வாழ்வது. அனைவருடனும் இயல்பாக பேசுவதும் பழகுவதும் கிருஷ்ணனுக்கு அறவே பிடிக்கவில்லை. மேலும் அவர் அணிந்த கோட்டும் சூட்டும் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல ஆனது. வெகுண்ட கிருஷ்ண சிவன் பாரதியைப் பார்த்து "நீ என்ன கைம்பெண்ணா? உன் தந்தை உயிருடன் இல்லை. இருந்தால் தற்கொலையே செய்து கொண்டிருப்பார்" என்று சினந்தார். இனி எங்களுடன் சமமாக உட்கார்ந்து உணவு கூடாது என்றும் ஆணையிட்டார். அத்தை குப்பம்மாள் என் அன்பு வார்த்தைகள் பாரதியின் உள்ளத்தில் ஆறுதல் தந்தன.
காசியில் மார்கழித் திருவாதிரை நாளில் சமய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். ஒருமுறை கிருஷ்ண சிவன் திருவெம்பாவை சொற்பொழிவு நிகழ்த்த ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். யாது காரணத்தாலோ அவர் வருவது தடைபட்டது. என்ன செய்வது என தவித்து நின்ற வேளையில் குப்பம்மாள் பாரதியைப் பாடும்படி கேட்டுக் கொண்டார். பாரதியும் சுப்பு பாட்டியும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை யாவரும் மகிழ இசைத்தனர். கிருஷ்ண சிவனுக்கு பாரதியின் பெருமை அப்போதுதான் தெரிந்தது.
எட்டயபுர மன்னர் காசிக்கு செல்ல நேர்ந்தது. பாரதியை சந்தித்து, தம்முடன் வந்து இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தாம் ஒரு சிறைப் பறவை அல்ல என்றும் தம்மால் ஓரிடத்தில் கட்டுப்பட்டு இருக்க இயலாது என்றும் பாரதியார் மறுப்புரை புகன்றார். உன் விருப்பப்படி நடக்கலாம். உமக்கு எந்தத் தடையும் இல்லை என்ற உத்தரவாதத்தின் பேரில் எட்டயபுரம் அரசர் அழைப்பை ஏற்றார் எனினும் பாரதியின் புகழை உணர்த்த இதைவிட வேற எதைக் கூற முடியும்?
No comments:
Post a Comment