வாழ்க்கை வரலாறு - பார் புகழும் பாரதியின் கடைய வாழ்க்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 3, 2020

வாழ்க்கை வரலாறு - பார் புகழும் பாரதியின் கடைய வாழ்க்கை

வாழ்க்கை வரலாறு - பார் புகழும் பாரதியின் கடைய வாழ்க்கை

கடையம் செல்லல் 

சென்னையில் சிறிது காலம் பாரதியார் தங்கி இருந்தார் பின்னர் கடையம் சென்று வரலாம் என்ற எண்ணத்தில் தன் துணைவியாருடன் அங்கு தன் பயணத்தைத் தொடர்ந்தார். கடையத்தில் மேலும் பல கசப்பான நிகழ்ச்சிகள் பாரதியாருக்கு ஏற்பட்டன. 

கடுமையான உடற்பயிற்சி தாளமுடியாத எண்ணங்கள் போன்றன பாரதியாரின் பொன்னிற மேனியை கருநிறமாக மாற்றின எலும்பும் தோலுமாய் காணப்பட்டால் அதை கண்ட அவ்வூர் மக்கள் வியந்தனர் 

சுதேசி மித்திரன் இதழுக்கு கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார் தாம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் மாற்றம் இல்லை என்பதால் அவர் மனம் வருந்தியது நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த அவ்வூரில் மனநிறைவுடன் வாழ்ந்து வந்தார்


எளிமை 

புதுவையில் கண்டு களித்தார் போன்றே இங்கும் இயற்கை காட்சிகளையும் கண்டு கழித்து வந்தார் இளமை காலத்தில் நோய் நெய் சற்று நாற்றம் அடித்தாலும் பாத்திரத்துடன் சாக்கடையில் கொட்டியவர் பாரதி கடையத்தில் அவருடன் ஏற்பட்ட மாற்றம் செல்லமான வியப்பில் ஆழ்த்தியது

 அவ்வூர் சிறுவர்கள் வேப்பம் பழம் முதலியவற்றை பொறுக்கி செல்வர் அவர்களைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டார்.  தம்பிகளா  ஏன் இவற்றை பொறுக்கி சொல்கிறீர்கள்-  என்றார் அய்யா வயிற்றுக்கு ஒன்றும் இல்லை பணத்தை எடுத்துச் செல்கிறோம் என்று கூறினர்

இறைவனுடைய படைப்புகள் அனைத்தும் அமிர்தம் போன்றவை. வேப்பங்காய்  கசக்கும் என்று மனதில் எண்ணுவதால் கசக்கிறது.  அமிர்தம் என்று நினைத்தால் தித்திக்கும் என்று சொல்லி தாமும் வேப்பமரத்தை தின்றார்.  அங்கு சாதி மத இன வேறுபாடின்றி அனைவருடனும் இயல்பாகப் பழகி வந்தார்.

வறுமை நிலை


பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது உண்மையல்லவா?  குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பது ஆன்றோர் மொழி.  அன்றாட வாழ்க்கையை நடத்த இயலாது வறுமை நிலை ஏற்பட்டது என்ன செய்வது என்று சிந்தித்தார். எட்டயபுர மன்னர் இருக்கும்போது மன கவலை இல்லை என்று எண்ணி அவரிடம் உதவி பெறலாம் என முடிவு செய்தார். 

சீட்டுக்கவி 


சீட்டுக்கவி உரைநடையில் எழுதப்படும் கடிதங்கள் நாம் பார்த்துள்ளோம். சீட்டுக்கவி என்பது பற்றியும் அறிய வேண்டும் அல்லவா? பலர் சீட்டு கருவிகளை வள்ளல் போன்ற பெருமக்களிடம் எழுதி பொருள் பெற்றதாக நம் இலக்கியங்கள் பேசுகின்றன.  கவிதை வடிவில் எழுதப்படும் கடிதமே சீட்டுக்கவி என்பதாகும்.  எட்டையபுரம் மன்னருக்குத் பின்வருமாறு சீட்டுக்கவி அனுப்பினார்.  உலகம் போற்றும் வகையில் சிறந்த கதைகளை பாடும் கவிஞர் தமிழகத்தில் தோன்றவில்லை என்பது தமிழுக்குள்ள குறை.  ஆனால் அந்த குறை என்னால் தீர்ந்தது. என்னுடைய பாடல்களை படித்து பல நாட்டினரும் மொழிபெயர்த்து போற்றி வருகின்றனர் என்பதை உலகமே அறியும் வண்ணம் பல பெற்ற எட்டையபுர அரசே.  வேங்கட பூபதியே என் வறுமை நிலையைப் போக்கி உதவ வேண்டும் எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்து வருவது உங்களைப் போன்றவர்கள் அது கருணையினால் அல்லவா என்று சீட்டுக்கவி அனுப்பினார் 

 பாரதியார்.எதிர்பார்த்தபடி எட்டயபுரம்  மன்னரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை.  வறுமையிலும் செம்மையாக குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தார்.

புத்தியில்லை 

கடையத்தில் இராமநவமி உற்சவம்.  மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வந்தனர் கச்சேரிகளும் சொற்பொழிவுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பாரதியாரும் அவற்றை கண்டு கேட்டு மகிழ்ந்தார்.  பாரதியார் அந்த வித்வான்கள் உரையாடி மகிழ்ந்தார்.  ஆனால் அவர்கள் பாரதியாரை பைத்தியம் என்று எண்ணி ஏளனம் செய்து வந்தனர்.  

உலகமே புகழும் கவி என்று அவர்கள் அறிய நியாயமில்லை ஏன் உலகமே அவர் இறந்த பின்பு விடுதலை பெற்ற பின்புதான் அவர் பெருமையை உணர்ந்தது.  தேவகோட்டை வித்துவான்,  வள்ளி திருமணம் என்ற தலைப்பில் காலட்சேபம் செய்தார்.  நம் பாரதியாரும் அதை கேட்டு மகிழ்ந்தார். . வேடுவர்கள் பயிர்களை அழிக்கும் மிருகங்களை தடுக்கும்படி இறைவனுக்கு பூஜை போட்டனர்.  அப்போது ஒருவனுக்கு சாமி ஆவேசம் வந்துவிட்டது பின்வருமாறு பாட ஆரம்பித்தான்

"பாக்கும் வச்சான் பணமும் வச்சான் 
வெற்றிலையும் வச்சான் ஒன்னு வைக்க மறந்துட்டான்
சுண்ணாம்பில்ல சுண்ணாம்பில்ல"

இந்த பாடலை கேட்டதும் பாரதி கொள் என்று சிரித்தார்.  அருகில் இருந்தவர்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டனர்.  இந்த பார்த்து நமக்கும் பொருந்தக்கூடிய பாடல் ஆகும் என்றார் . பாரதி எப்படி பொருந்தும்?  என்று கேட்டனர்.  தமிழ் மக்களுக்கு கடவுள் 

நிலமும் வச்சான் பலமும் மச்சான் 
நிகரில்லாத செல்வம் வச்சான் 
ஒன்று வைக்க மறந்திட்டான் 
புத்தியில்லே புத்தியில்லே என்றார்.  நம் நாட்டு மக்களுக்கு புத்தி சிறிதும் இல்லை.  ஆடு மாடுகளைப் போல மனம் போன போக்கில் வாழ்கின்றனர். என்பதை பாரதியார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விளக்கினார்.

புதுப்பாடல் உதயம்

உற்சவ காலங்களில் தினந்தோறும் பாகவதர் ஒருவர் தலைமையில் பஜனை பாடல்கள் இடம் பெற்றன. . அப்பாடல்கள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் இருந்தன.  இயல்பாகவே தமிழின் மீது பற்றுக்கொண்ட பாரதியார் மனம் வருந்தினார்.  அந்தத் தலைவர்களுக்கு தொண்டை கட்டியது.  பாடிய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு மக்களுக்கும் சலிப்பு ஏற்பட்டது.  யார் பாடுவது?  என்ன பாடல் பாடுவது?  என்று அங்கு இருந்த ஒரு தவித்தனர். பாரதியோ நான் புது பாட்டு சொல்லிக் கொடுக்கிறேன் என்று முன்வந்தார்.  

பாரதி பாடலை பாட அங்கு கூடியிருந்தோர் அனைவரும் உரத்த குரலில் உற்சாகத்துடன் பாடினர்.  இதுவரையில் பாடிய பாடல்கள் வேறு மொழியில் இருந்தன.  பொருள் விளங்காத நிலையில் பாடினார்.  பாரதியார் பாடலின் பொருள் உணர்ந்து தான் இயல்பாகவே உணர்ச்சி மேலிட்டு பாடலை செய்தனர். இறைவனை வழிபடுவது அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பது என்ற எண்ணம்.  ஆனால் பாரதியார் பல ஆண்டுகளுக்கு முன்பு அதனை உணர்த்தியுள்ளார்.  பாரதியார் வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அவர் பெற்றிருக்க வேண்டிய விருதுகள்,  பரிசுகள்,  பாராட்டுகள் கணக்கில் அடங்கா.

நண்பரின் போக்கு

பாரதியாரின் நடை உடை பாவனைகள் சிலருக்கு பிடிக்கவில்லை. அவரோ அதை கண்டு கவலை படாமல் தான் போக்கிலேயே நடந்து வந்தார். மனசாட்சிக்கு மட்டும் பயப்படும் அந்த மாமனிதர் ஆன பாரதி மற்றவரைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை.  பாரதியார் கைவிரல்களை மடக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி விரைவாக நடந்து செல்வார்.  அதைக் கண்ட நண்பர் ஒருவர் "என்னடா கையை இப்படி வைத்திருக்கிறாய்"  என்று கேட்டாராம்.  நடப்பதற்கு கூடவா கட்டுப்பாடு வெகுண்டார் பாரதி. மறுகணம் பொறுமை ஆனார்.

மறுநாளே அதே நண்பரின் எதிரில் கைவிரலை விறைப்பாக நீட்டிக் கொண்டு பாரதி நடந்து சென்றார்.  பாரதியின்  நண்பர் "என்னடா கையை நீட்டிக் கொண்டு நடக்கிறாய்? என்று கேட்டதும் பாரதியாரால் பொறுமையாக இருக்க இயலவில்லை.  முதலில் உன் முதுகை பார்த்து நடக்க கற்றுக் கொள். உன்னை போன்ற மனிதனுடைய உறவு எனக்கு அறவே வேண்டாம் என்று கூறினாராம். நண்பர் வெட்கி தலை குனிந்தார்.

இராஜா தோட்டம்

எட்டையபுரத்து மன்னர் தம் அரண்மனையில் ஒரு தோட்டம் இருந்தது.  உயர்ஜாதி ஒட்டு மரங்கள்,  உயர்ந்த பல மரங்கள்,  பூச்செடிகள் ஆகியன அங்கு இடம்பெற்று இருந்தன.  புதுவையில் இருந்து வெளியேறிய  தாம் பிறந்த ஊராகிய எட்டையபுரம் சென்றார்.  தாம் இளமை பிராயத்தில் விளையாடி மகிழ்ந்து பழைய நினைவுகள் அவரை வட்டமிட்டன.  தம் மீது அன்பு கொண்டிருந்த நண்பர்களை கண்டு தழுவி உச்சி முகர்ந்து இன்புற்றார். அச்செயல் ஊர் மக்களுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.  தான் பிறந்த மண்ணின் பற்று யாரையும் விடாது என்பதை இச்செயல் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குகிறது. 

பாரதியார் இளமைப் பருவத்தில் நவநாகரீக வாலிபனாய் கண்டோர் வியக்கும் வகையில் இருந்தவர்.  ஆனால் தற்போது அவர் உருவம் இருந்த நிலையை பார்த்து அவர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை.  எலும்பும் தோலுமாக தாடியும் மீசையுமாக நெற்றியில் நாமம் தரித்து இருந்தார்.  பொதுவாக சொல்வதென்றால் பாரதியை பைத்தியம் என்றே மதித்தனர்.  

மன்னரது இராஜா தோட்டத்தில் உலாவி வரலாம் என்று பாரதிக்கு ஆவல் மேலிட்டது. துணைவியாரையும் உதவிக்கு அழைத்தார்.  ஊருக்கு ஏற்ற வேடம் போட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா?  ஊர் மக்களுக்கு வம்பளக்க நேருமே என்று செல்லமாய் தயங்கியவாறே கூறினார். 

மற்றவரைப் பற்றி நமக்கென்ன கவலை அப்படிக் கேலி பேசி பழித்தாலும் நமக்கு அது மகிழ்ச்சிதான்.  புறப்பட்டு வா என்று கூறியதும் செல்லாமலாளால்  அதை நேரம் மீற இயலவில்லை.

செல்லம்மாளின் உயர்குணம் 

செல்லம்மாளின் உறவுப் பெண்கள் அவரால் கணவனை தன் விருப்பப்படி வைத்திருக்க முடியவில்லை என்று கூறினர்.  கணவனை மருந்திட்டு தன்வயப்படுத்தும் இந்த காலத்தில் இப்படி இருக்கிறாயே?  இப்படி ஒரு கணவனுடன் வாழ்வதைவிட சாகலாம் இன்றேல் நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தலாம் என்று பழித்துப் பேசினர்.  

கணவன்  கருத்தை அறிந்து நடக்கும் உத்தம குணம் கொண்ட செல்லம்மாளோ பேச்சு செவிகொடுத்து கேட்டதே இல்லை.  நீ திருந்த போவதில்லை. உன் தலையெழுத்து என்று அப்பெண்கள் விட்டுவிட்டனர்.  

யார் பைத்தியம்

பாரதியார் அழைத்தபடியே செல்லம்மாள் தன் கணவருடன் இராஜாத்தோட்டம்  பார்க்கப் புறப்பட்டார். எப்போதும் செல்வது போல இருவரும் கைகோர்த்து கொண்டு தெருவின் வழியே நடந்து சென்றனர்.  அதனை கண்டவர்களுக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாயிற்று.  " பைத்தியங்கள் இரண்டு உலாவ செல்வதை பார்த்தீர்களா என்று கைதட்டி எள்ளி நகையாடினர்.  மலையை பார்த்து நாய் குரைப்பது யாருக்கு வலிக்கும்?  பொறுமையின் வடிவமான இருவரும் அதை கண்டும் காணாதவர் போல பதில் வார்த்தை பேசாமல் சென்றனர்.  பாரதியார் அந்த அழகிய இராஜா தோட்டத்தில் உள்ள இயற்கை காட்சிகளை தம் உள்ளம் விரும்பியவாறு கண்டு களித்தார்.

திருவனந்தபுரம் திருவனம் 

பாரதியும் அவர் மனைவியார் செல்லம்மாளும்  சமயம் திருவனந்தபுரம் சென்று இருந்தனர்.  அவர்களது நண்பரும் உறவினருமான ஒருவரது வீட்டில் திருமணம் நடந்தது.  பாரதியார் அங்கு வந்து இருப்பது தெரிந்தும் அவர் ஒரு சுதேசி என்ற காரணம் காட்டி அவர் பாரதியை திருமணத்திற்கு அழைக்க வில்லை.  நேரில் கண்டும் காணாதவர் போலிருந்தார்.  

அழையா விருந்தாளி 

அந்த வீட்டுக்கார அம்மாவின் உள்ளம் பாரதிக்கு தெரியும். அந்த ஒரு காரணத்தால் அழையாத வீட்டுக்கு விருந்தினராக சென்றார்.  அம்மா குழந்தையின் திருமணம் முடிந்ததா?  என்று கேட்டு அந்த வீட்டுக்காரர் பெண்மணியின் நிலைமை புரிய வைத்தார்.  ஐயனே என்னை மன்னிக்க வேண்டும்.  நாங்கள் செய்தது தவறு.

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண 
நண்ணயம் செய்து விடல்"           - என்பது குறல்.  

அதற்கு நீங்கள்தான் சாட்சி என்று அப்பெண்மணி பண்புரைகள பகன்றார்

சிங்கமும் நண்பனே 

திருவனந்தபுரத்தில் இருந்த இருந்த மிருகக்காட்சி சாலைக்கு திருமண வீட்டார் வண்டியில் புறப்பட்டு சென்றனர்.  நீங்களும் வாருங்கள் என ஒப்புக்குக் கூட ஒரு வார்த்தை கேட்காத அவர்களின் செயல் செல்லம்மாள்   உள்ளத்தை உறுத்தியது. பாரதியாரும் செல்லலம்மாளும் இரு மைல் தொலைவு நடந்தே சென்றனர். மிருகக்காட்சி சாலையில் உள்ள அனைத்து விலங்குகளிடமும் தொட்டு பேச பாரதியார் முயன்றார். 

"காக்கை குருவி எங்கள் ஜாதி" 

என்ற எண்ணம் கொண்ட அவர் செயலை கண்டு பலரும் வியந்தனர். விலங்குகளுக்கு தீனிபோடும் வேலைக்காரன் புலியையும் சிங்கத்தையும் மட்டும் மறந்தும் தொட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.  

அதிசயம் நிகழ்ந்தது 

அருகே சென்று அதைத் தழுவ வேண்டும் என்பது பாரதிக்கு எண்ணம்.  வேறு வழியின்றி வேலைக்கார கணவன்  சிங்கத்தை அருகில் வரவழைத்தார். செல்லம்மாள் இறைவா நீ தான் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பாரதியாரோ சிங்கராஜா இவர்கள் உன்னை கண்டு பயப்படுகிறார்கள்.  இவர்கள் போன்று உன்னால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது.  அல்லவா?  நீ அன்பு கொண்ட வரை ஒரு நாளும் வருத்தமாட்டாய்  என்பது எனக்கு தெரியும்.  உன் கர்ஜனையின் மூலம் நான் சொன்னவற்றை உறுதிப்படுத்து என்று வேண்டினார்.

என்ன ஆச்சரியம்.  உடனே சிங்கம் 10 நிமிட நேரம் கர்ஜனை செய்தது.  அரை மணி நேரம் சிங்கத்தின் தலை,  பிடரி, காது போன்றவற்றை தடவிக் கொடுத்தார்.  பிறருக்கு பயந்து வாயில் மட்டும் கையை வைக்க வில்லை. ஆனால் அசிங்கமும் அவரை ஒன்றுமே செய்யாது அன்புடன் நின்று கொண்டிருந்தது.  அந்த வியத்தகு காட்சியைக் கண்டவர்கள் வாய் புதைத்தனர். 

வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள்.  அவ்வூர் பெரிய செல்வந்தரான வக்கீல் சேசஷய்யா தம் இரட்டைக்  குதிரை வண்டியிலிருந்து இறங்கி வந்து பாரதியைக் கண்டு பேசி மகிழ்ந்தார்.  நடந்தா வந்தீர்கள்?  இந்த வண்டியை இந்த ஊரில் உள்ளவரை வைத்துக்கொள்ளுங்கள் என்று இரட்டை குதிரை வண்டியை கொடுத்துவிட்டு சென்றார்.  பாரதியின் பெருமை மற்றவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது. 

வாழ்த்துரை 

கல்யாண வீட்டை அடைந்த பாரதியார் ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். அந்த கல்யாணத்தின் சம்பந்தி அய்யர் ஓடிவந்து பாரதிக்கு மாலை போட்டு வரவேற்றார்.  முகமன் கூறி அழைத்துச் சென்று வேண்டிய மட்டும் உபசரித்தார். வீட்டுக்காரர் எஜமான் அதை கண்டு வெட்கி தலைகுனிய நேரிட்டது.  மணமக்களை வாழ்த்திவிட்டு,  பாரதியார் விடைபெற்று கடையம் வந்து சேர்ந்தார்.

No comments:

Post a Comment