பாசபந்தம் - பிரேம பாசம் - தமிழ் சிறுகதை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 5, 2020

பாசபந்தம் - பிரேம பாசம் - தமிழ் சிறுகதை

பாசபந்தம் -  பிரேம பாசம் - தமிழ் சிறுகதை

இரண்டு வீடுகள் பக்கம் பக்கமாக... ஒரே வீட்டில் ஒரு கழுதை மற்றதில் ஒரு நாய்.  கழுதையும் நாயும் வீட்டுப் பிராணிகள்.  ஆனால் நாய் மட்டும் அதன. எஜமானனுக்கும் அவன் பெண்டாட்டி பிள்ளை களுக்கும் செல்லப்பிராணி.  

அவர்கள் அனைவரும் அந்த நாயை செல்லமாக கொஞ்சுவதை பார்க்கும்போது கழுதைக்கு துக்கம் போகும்.  நாயாக பிறந்திருக்க கூடாதா?  என்று ஏங்கும் என்னதான் எஜமானும் அவன் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளும் செல்லமாய் கெஞ்சினாலும் கொஞ்சினாலும் தின்பதற்கு எதையாவது காட்டுவதும் அதைக் அவர் தன் முகத்தை நீட்டும்போது உயரத் தூக்கிப் பிடிப்பதன் எம்பி எம்பி குதிக்க வைத்து குரங்காக ஆட்டி வைப்பது எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் நாய்க்கும் துக்கம் பொங்கும்.  

பொதி சுமந்தோமா,  போனோமோ தன் வேலை உண்டு என்று அக்கடா என்று இருக்கும் கழுதை பிறப்பே மேல் என்று நாய் பெருமூச்சு விடும்.  ஆற்றுத் துறையில் துணிகளை துவைப்பதற்கு இடம்பிடிக்க சலவைத் தொழிலாளர் களுக்கு இடையே எப்போதும் போட்டா போட்டி.  

அதிகாலையிலேயே பொதியை ஏற்றிக் கொண்டு கழுதையை எஜமானருக்கு ஆற்றுக்கு ஓட்டிச் சென்றுவிடுவான்.  இரவு வெகுநேரம் கழித்துத்தான் கழுதையுடன் வீடு திரும்புவான்.  வீட்டுக் காவலுக்காக என்று நாயை எஜமான் அவிழ்த்துவிட்டாலும் வாசல் கதவை இழுத்து மூடி வைத்து இருப்பான்.  

கழுதையும் நாயும் சந்திப்பது அரிதாக இருந்தது

அபூர்வமாக ஒருநாள் சலவைத் தொழிலாளி துணி வெளுக்க போகவில்லை.  பகல்  நேரத்தில் தனது  கழுதையை அவிழ்த்து விட்டிருந்தான்.  நாய் வசிக்கும் வீட்டுப் பக்கமாக போனது கழுதை.  வாசல் கதவு திறந்து இருந்தது நாயும் வெளியே ஓடிவந்து.  இரண்டும் ஒன்றையொன்று சந்தித்தன.  சினேகிதா சுகம் தானா?  என்று குசலம் விசாரித்துக் கொண்டனர்.  

"நாய் பொழப்பு"  இதிலே சுகம் என்ன,  சௌக்கியம் என்ன,  என்று மிகவும் சலிப்பாக சொன்னது நாய்.  

என்னப்பா அப்படி சொல்ற?  உன்  நிஜமானனும்  பெண்டாட்டி பிள்ளைகளும் உன்னை எவ்வளவு செல்லமாய் வைத்திருக்கிறார்கள்,  என்று ஒன்றும் புரியாமல் கழுதை கேட்டது.

வேடிக்கை பார்த்து மகிழ்வதற்காக தன்னை அவர்கள் குரங்காக ஆட்டி வைக்கிற கொடுமையைச் சொல்லி முறையிட்டது  நாய். 

பரிவுடன் கழுதை உச்சுக்கொட்டி நாயின் சோக கதைய கேட்டது கழுதை.  உன்பாடு தேவலைங்கற. சரியா போச்சா போ  இங்க மட்டும் என்ன வாழுதாம்?  கழுதை ஜென்மம். பொதி  பொதியா சுமக்குனும்.  போட்டதை திங்கனும். நொறுங் அடிப்பொ். அதையும் வாங்கிக்கனும்.  கழுதை தன் பாட்டை விவரித்தது.  

பாக்கப்போனா ரெண்டு பேருமே கேடுகெட்ட பொழப்பு தான் போ என்று வருந்தியது நாய்.  

பேசாத எல்லாத்தையும் விட்டுட்டு பரதேசியை போயிடலாம்னு தோணுது என்றது கழுதை.  எனக்கும் அப்படித்தான் அடிக்கடி தோன்றுவதுண்டு என்றது நாய்.  அப்புறம் ஏன் போகலை என்று கேட்டது கழுதை.  

பாச பந்தம் விட மாட்டேங்குதே -  நாய்... 

பாசபந்தமா?  ஆச்சரியத்துடன் கேட்டது கழுதை. 

ஆமாம்,  என் எஜமானன் அவருடைய பிள்ளைகளே கூறுவதைக் கேட்டுருக்கிியா? ஒரு தடவை கூப்பிடுவாரு.  மறுபடியும் கூப்பிடுவாரு.  மறுபுறம் பதில் இல்லேனா  "அட நாய்க்கு பொறந்த பசங்களே ன்னு  கூப்பிடுவாரு.  கேட்டதில்லே?  இப்ப சொல்லு..  இந்த சம்சார பந்தத்தை விட்டுட்டு எப்படி நான் சன்யாசம் போக முடியும் என்று கூறியது நாய்.  

அது சரிதான் என்று ஆமோதித்து கழுதை. 

உனக்கு என்ன வந்தது?  அத்தனை கொடுமைகளையும் சகிச்சிக்கிட்டு இன்னும் உன் உஜமான வீட்டில் இருக்கிறியே ஏன்?  என்று கேட்டது நாய். 

பிரேம பாசம் விட மாட்டேன் என்கிறது என்று பெருமூச்சு விட்டது கழுதை.  

பிரேம பாசமா?  ஒன்றும் புரியாமல் நான் வியப்புடன் கேட்டது.  

என்ன சொல்றான் உன்  எஜமான்  மகள் கிட்டே - நாய்

"அடி கழுதை"  உன்ன பாரு.  சீக்கிரமா எந்த கழுதைக்காவது  கட்டி வச்சிட்டுதான்  மறுவேலையின்னு ஒரு நாளையிலே  பத்து தடவையாவது சொல்றாரே  எப்படி எனக்கு பரதேசியாக போக மனசு வரும்?  

பாசபந்தம் அழைக்க நாய்,  அதனுடைய எஜமானனை வீட்டுக்கும்,  பிரேம பாசம் உந்தித்தள்ளக் கழுதை அதனுடைய எஜமானன் வீட்டுக்கும் திரும்பி சென்றன.

No comments:

Post a Comment