ஊதாரி கருமி - சிறுகதை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 5, 2020

ஊதாரி கருமி - சிறுகதை

ஊதாரி கருமி - சிறுகதை

அவன் கருமி 
ஆணுக்கு ஒரு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் தேவை.  எனவே அவனும் நாலா திசைகளிலும் தேடிப் பார்த்து ஒருபெண்ணை வேண்டா வெறுப்புடன் கல்யாணம் செய்துகொண்டான். சிக்கனமாக இருக்கவேண்டிய அவசியம் பற்றி அவளுக்கு அவன் முதலிரவு அன்றே பள்ளி அறையில் வெகு சிரத்தையுடன் உபதேசித்தான். 

உண்மையில் அவளுக்கு அப்படி உபதேசம் தேவையில்லை என்பதை அவன் மறுநாளே கண்டுகொண்டான்.  பூஜைக்கு கற்பூரம் கொடுத்த அவன் தீப்பெட்டியில் தூக்கி  தீக்குச்சியை உரசப் பொக அவள் தடுத்தாள். 

"ஏற்றி வைத்த எண்ணெய் விளக்கு எரியும்போது தீக்குச்சி அளித்து இது என்ன?  ஊதாரித்தனம் என்று கணவனை  அவள் அவளை கடிந்து கொண்டாள்.  

தனக்கேற்ற மனைவியை தனக்குக் கொடுத்ததற்காக கடவுளுக்கு அர்ச்சனை இல்லாமல் லட்சார்ச்சனை செய்தான்.  

கற்பூரம் எதடுத்து அர்ச்சிக்காமல்  வெறும் வார்த்தைகளை உச்சரிப்பது இலட்சார்ச்சனை.  இதிலென்ன கருமித்தனம்?  

கோடி அர்ச்சனை கூட செய்வான்.

சும்மா சொல்லக்கூடாது, 

கருமித்தனம் அவனுடையதோ, இல்லை அவளுடையதோ  தெரியவில்லை

அவள் கர்ப்பவதியாக வெகு காலம் பிடித்தது.

கர்ப்பவதி ஆனதிலிருந்து இருவருக்கும் பிறப்பது ஆணா  இருக்க வேண்டுமே என்பது அவர்களுக்கு பெரும் கவலை.  

என்ன செய்வியோ ஏது செய்வியோ பெக்கறது பெக்கற ஆண்  பிள்ளையா பெத்து எடு.  இந்த சொத்து எல்லாம் மருமவன்னு வர்ற ஊரானுக்கு இல்லை போய் சேர்ந்து விடும் என்று கணவன் வாய்க்கு வாய் புலம்பிக் கொண்டே கொண்டிருந்தான். 

அவளும் பிறப்பது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டும் என்று எத்தனையோ கோயில்களுக்கும் கடவுள்களுக்கும் பிரார்த்தனை செய்துகொண்டாள் நேர்த்திக்கடனாய் எந்த கடவுளுக்கும் எந்த கோயிலுக்கும் எதையாவது செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளவில்லை. அவள் அதில் மட்டும் அவள் வெகு ஜாக்கிரதையாய் இருந்தாள். 

புத்தகத்தில் அர்ச்சனை எழுதுவது பிரார்த்தனை.  அதாவது செலவில்லாத நேர்த்திக்கடன். அவள்  ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.  கணவன் சொன்னது சொன்னபடி ஆண் பிள்ளையை பெற்றெடுத்த தனது மனைவியை வாயார "உத்தமி"  "பத்தினி"  என்றெல்லாம் புகழ்ந்தான். 

பிறந்த மகன் வளர்ந்தான்.  விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது.  ஊரை அழைத்து விருந்து வைத்தவனல்ல.  பிள்ளைக்கு பெயர் வைத்தவன் அல்ல அந்த  கருமி. 

 ஆனால் பிள்ளை பள்ளிக்கூடம் போக தொடங்கியதிலிருந்தே உடன் படிக்கும் சிறுவர்கள் அவனுக்கு குட்டி கருமி என்று பெயர் வைத்தார்கள். 

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்" என்கிறது திருக்குறள்.

இவர்களோ தங்கள் பிள்ளைகளை " ஊரார் கருமி"  என்று சொல்லக் கேட்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாய் தந்தையராய் வாழ்ந்தனர்.  இந்தப் பிள்ளை வளர தொடங்கியதிலிருந்து அந்த வீட்டில் பூஜைக்கு தேங்காய் என்பதே இல்லை தேங்காயை இல்லாமல்தான் அன்றாட பூஜை.

ஆனால் அடிக்கடி வீட்டில் தேங்காய் அரைத்து வீட்ட குழம்பு மணக்கும்.  பிள்ளை சூறைத்தேங்காய் பொருக்குவதிலும் பிள்ளைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் அதை வீடு கொண்டுவந்து சேர்ப்பதிலும் பலே கில்லாடி.  ஒருவருக்கு ஒருவர் பொருத்தமான தம்பதி,  அந்த தம்பதிகளுக்கு தப்பாமல் பிறந்த புத்திர பாக்கியம்.  

அந்த மகனும் வளர்ந்து ஆளானான்.

அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த போதிலும் வருகிற மருமகள் ஊதாரித்தனமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை. கண்டுகொள்ளாமல் இருந்தனர் பெற்றோர். 

இந்த கருமி வீட்டில் எவன் கொடுப்பான்?  என்று பெண்ணைப் பெற்றவர்களும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டதனால் குட்டி  கருமி தனிக்க்கட்டையாக ஊரை சுற்றி சுற்றி வந்தான்.  

தனிக்கட்டை 2 அர்த்தத்திலும் கல்யாணமாகாத கட்டை.  காசு பணம் செலவு செய்ய மனம் வராது என்பதனால் கூட திரிபவர் சாவகாசம் இல்லாத தனிக்கட்டை.  

மகனுக்கு பெண் தேடாமல்ல் இருந்து விட்டால் அவனை இழுத்து வந்து அவனே எவளையாவது இழுத்து வந்துவி விடுவானோ என்ற பயமும் பெற்றோர்களுக்கு. இல்லை.  

இந்த கருமியை போலவே எங்கோ ஒரு ஊரில் இன்னொரு கருமி.  ஏதாவது ஊதாரி வீட்டில் பெண் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் இந்த கவலை.  

முந்திய கருமியைப் பற்றி கேள்விப்பட்ட புதிய கருமியும் புதிய கருமியை பற்றி கேள்விப்பட்ட முந்திய கருமியும் சிந்தித்தார்கள்.  சந்தித்தார்கள்.  சம்பந்தம் பேசினார்கள்.  வேறு பெண்ணோ  பிள்ளைகளோ  இல்லாததால் தனக்கு உள்ளதெல்லாம் மாப்பிள்ளைக்கு தான் என்று அறிவித்துவிட்டான்.  பெண்ணை பெற்ற கருமி  நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கலாம் என்ற அடிப்படையில் சம்பந்திகள் பேச்சில் முன்னேற்றம் கண்ட போதே

 அப்பா நான் பொண்ணைப் பார்க்கணும் என்றார் குட்டி கருமி

பொண்ணை  ஏண்டா நீ பார்க்கிற?  அதான் உள்ளதெல்லாம் உனக்குத்தான் என்று சொல்லிவிட்டாரே.  அவனுக்கு இருக்கிறதெல்லாம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரே பொண்ணு.  முன்னிலையிலும் ஒன்னும் இல்ல பின்னாலேயே ஒன்றுமில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார் தந்தை கருமி.  

"நம்ம குடும்பத்துக்கு ஏத்த தானே பார்க்க வேண்டாம் என்று பரம்பரை புத்தி பூர்வமாக கேள்வி ஒன்றைக் கேட்டான் மகன்"  பெண் பிடித்திருந்தால் நிச்சயதார்த்தம் என்ற நிபந்தனையுடன் பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு.  

பெண் பிடித்துவிட்டது.  

நிச்சயதார்த்தமும் நடந்தது பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் விருந்து படைத்தார்கள்.  பெண்ணே சமையல் செய்ததாக அவரது அவள் தகப்பனார் சொன்னார்.  மிளகு ரசம் வெகு ஜோர் என்று குட்டிக் கரிமி மாப்பிள்ளை குவளையில்  வாங்கி குடித்தான். 

பெண்ணைப் பெற்றவன் பெருமிதத்துடன் சொன்னான். 

கல்யாணத்துக்காக என்று வாங்கி மிளகைப் பொடி செய்து ஒரு சம்புடத்தில் வைத்திருந்தோம்.  மிளகுப்பொடியை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு அந்த அந்த வெறும் சம்டத்தில் வெந்நீர் ஊற்றி வைத்த ரசம் இது.  

அவ்வளவுதான் 

குட்டி கருமி கையை உதறிவிட்டு விட்டு விருட்டென எழுந்தான்.

மிளகு தூள் வைத்திருந்த அந்த வெறும் பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி கல்யாண விருந்துக்கில்ல இரசம் வச்சிறுக்கனும்.  அத விட்டுட்டு இந்த நிச்சயத்தாரத்துக்கு இப்படி ரசம் வைத்தால் என்ன ஊதாரித்தனம்?  இது எப்படி பட்ட ஊதாரித்தனம்?  இப்படிப்பட்ட ஊதாரி பொண்ணு எனக்கு வேண்டாம் என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு பெற்றோரை இழுத்துக் கொண்டு போய் விட்டான். 

 அதுக்கப்புறம் அந்த குட்டி கருமிக்கு கல்யாணம் ஆச்சாஈ  ஆகலையா? என்பது யாருக்கு தெரியும்?  

ஆமாம், கருமியும்  ஒரு கல்யாணத்தை செய்து கொண்டு பரம்பரையைப் பெருக்க வேண்டும் என்று நாடு  தவம் கிடக்கிறதா என்ன?

No comments:

Post a Comment