கண்ண கவிச்சா கோயில் - தமிழ் சிறுகதை
கண் அவிச்சா கோயில்
கண்கொடுத்த தீர்த்தம்
இவற்றுக்கு தலபுராணம் ஏதாவது இருக்க வேண்டுமே.
இல்லாமலா?
கண் அவிச்சா கோயில், ஆகியவற்றின் மகாத்மியம் இது.
அவர்கள் இருவரும் கணவன்-மனைவியும்.
கல்யாணமான புதிதில் இருவரும் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய் சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தார்கள். நாள் ஆகஆக மனைவியின் போக்கு மாற தொடங்கியது. கணவனை பார்க்கவும் பிடிக்கவில்லை அவளுக்கு.
பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே அதுபோன்ற இந்த புளிப்பு. குடிகாரன் ஒருவன் இவளுக்கு வலை வீசி வளைத்துப் பிடித்துக் கொண்டான். ஆவலுடன் ஒளிந்து மறைந்து வாழத் தொடங்கிய நாளிலிருந்து சொந்த புருஷன் மீது சலிப்பு மிகுந்த வரத் தொடங்கியது.
என்ன புருஷன் இவன் என்று கசப்புடன் ஒரு பக்கம்.
சொந்த புருஷன் பார்த்துவிட்டால் என்கிற பயமும் அவளுக்கு நிறைய உண்டு. கலப்பையை ஒரு ஒரு அழுத்து அழுத்தினாள் பூமியைப் பிளக்கிறது. அந்த கலப்பையால் அவன் அடித்து நொறுக்கினால் எலும்பு கூட மிஞ்சாதே என்ற பயம். இந்த பயத்தில் அன்றாடம் கோயிலுக்குப் போவாள்.
அன்றாடும் உள்ளூர் காளி கோயிலுக்கு தவறாமல் போய் சாமி கும்பிட்டு வருவது கண்டு "உத்தமி" என்று பேசி வந்தார்கள்.
காளி கோவிலுக்கு இவள் சும்மா போகவில்லை. அம்மா தாயே நான் பயம் இல்லாம லேயே வாழனும். என் புருஷன் கண்ணில் படாமல் இருக்கனும். என் புருஷன் கண்ணில் படாமல் இருக்கிறதன்னா என் புருஷன் கண்ணு ரெண்டுமே பொட்டையா போய்விடும் என்று அவள் வெகு உருக்கமாக வேண்டிக் கொள்வாள்.
வழக்கம் போல அவள் இப்படி பிரார்த்தனை செய்தபோது கோவிலில் ஒரு குரல் கேட்டது. பரம பக்தையே உன் பக்தியை மெச்சி நீ உன் புருஷன் எண்ணை தேச்சு குளிப்பாட்டி அவனுக்கு உளுந்தஞ்சோறு பொங்கி போடு. எனன்னைக்கு இது செய்வியோ அதற்கு மறுநாள் அவனுக்கு கண் தெரியாமல் போகும்.
சுற்று முற்றும் பார்த்தாள். யாரையும் காணோம். ஆத்தா கொடுத்த வரம் தான் இது என்று அவள் உறுதி செய்து கொண்டாள்.
அன்று சாயங்காலம் அவள் கணவனுக்கு நல்ல யோகம். அவனை எண்ணை தேய்த்து குளிப் பாட்டினால் உளுத்தம்சோறும் கோழிகறி வறுவலும் ஆட்டிறைச்சி கொழம்புமாக வயிறு புடைக்க விருந்து படைத்தாள்.
ஆத்தா சொன்னது சொன்னபடி அன்றைய தினம் சாயந்திரமே வா. ஆமாம் அவள் அவசரம் அவளுக்கு.
அன்றாடம் கோயிலுக்குப் போகிற மனைவி என்னதான் வரம் கேட்கிறாள் பார்ப்போமே என்ற குறு குறுப்பு அவனுக்கு. அவளையும் அறியாமல் அவள் முன்னே சென்று சிலையின் பின்னே ஒளிந்து இருந்த கணவன் மனைவியின் வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனான். ஆனால் நிதானம் இழக்காமல் ஆத்தாவாக குரல் கொடுத்தான்.
குரல் கொடுத்த கண் அவிய வரம் கொடுத்தது கணவனே தான் என்பது மனைவிக்கு தெரியாது.
மறுநாள் காலை வழக்கமாக அவன் எழுந்திருப்பதற்கு முன்னேயே அவனை அவள் எழுப்பி விட்டாள். எழுந்தவன் கண்களை அகலத் திறந்தான். கண்களை கசக்கி விட்டு மறுபடியும் கூர்மையாக பார்த்தான். எனக்கு என்ன இது திடீர்னு கண்ணு ஒரே மங்கலாக இருக்கு? ஐயோ எனக்கு என்ன இப்படி திடீரென்று கண்ணை தெரியலையே என்று புலம்பினான்.
அவன் ஆத்தா கொடுத்த வரம் பலித்து விட்டது என்று மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி.
விளைந்த நெல்லை வாசலில் போட்டுவிட்டு தண்ணீர் கொண்டுவர கிளம்பியவள் கணவனை காவலில் இருக்க சொன்னாள். எனக்குத் தான் கண் தெரியாதே என்றான் கணவன்.
அதனாலென்ன? காதுமா செவிவிடா போச்சு? இந்த கோலை வச்சுக்கோ ஏதாவது சத்தம் கேட்டா அடிச்சு நொறுக்கு" என்று கூறி விட்டு வேகமாய் மனைவி போய்விட்டாள்.
கள்ளபுருஷன் காத்திருந்தான். கடவுள் பற்றிய பயமில்லாமல் அவனுடன் பொழுதை கழித்துவிட்டு திரும்பினாள். தண்ணீர் குடத்துடன் திரும்பி வரும் மனைவியின் தொண்டை சத்தம் கேட்கிறதோ இல்லையோ நிதானத்தில் அல்ல. மனைவியை தான் என்பது பார்வைக்கு நன்றாக தெரிந்து நிலையிலேயே கணவன் கன்னாபின்னாவென்று கோலைக் கழற்றி சுழற்றிய அவளை அடித்து நொறுக்கி விட்டால் அவள் அலறல் கேட்டு அடிப்பதை நிறுத்திவிட்டு, நீயா? நான் யாரோன்னு நினைச்சேன்.
எனக்கு தான் கண்ணு தெரியலையே என்று "வருத்தம்" தெரிவித்தான் கணவன்.
அடிப்பட்டது மனைவிக்கு வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் கணவனுக்குக் அழிந்து போயிருப்பது பெருமகிழ்ச்சி.
கள்ள புருஷன் பட்டப்பகலிலேயே, புருஷன் இருக்கும் வேளையிலேயே அவன் வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினான்.
கணவனின் குருடன் நடிப்பும் தொடர்ந்தது.
ஒரு நாள் மத்தியான வேளை, அவள் கள்ள புருஷனுடன் வீட்டில் இருந்தாள். கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாரோ எவரோ என்று கள்ளபுருஷன் குதிருக்குள் போய் ஒளிந்துகொண்டான். மனைவி கதவை திறந்தாள். கதவை தட்டியவன் சொந்த புருஷன்.
மனைவிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
குருட்டு கட்டையே கண்ணுதான் தெரியலையே... ஒரு இடத்தில் விழுந்து கிடக்க படாது. ஏன் அங்கேயும் இங்கேயும் அலையணும் என்று மனைவி அவனை கடிந்து கொண்டாள்.
குதிருக்குள் மற்றவன் ஒளிந்திருப்பதைக் கண்டு கொண்ட கணவன் அதை காட்டிக் கொள்ளவில்லை.
"எண்ணெய் தேய்ச்சி குளிக்கணும். சூடா காட்சி கொடுஸ என்றான் கனவன். உடனே அவனுக்கு எண்ணையை காய்ச்சி பாத்திரத்தில் ஊற்றிவைத்தாள்.
மேல் துண்டால் அந்த எண்ணெய் பாத்திரத்தை பொத்திக் கையில் பிடித்தபடி மெல்ல வெளியே போக கிளம்பிய கணவன், எண்ணைப் பாத்திரத்தைக் குதிருக்குள் கொட்டி கவிழ்த்தான்.
கொதிக்கும் என்னை விழுந்ததும் கள்ள புருஷன் செத்தே போனான்.
"கண்ணு தெரியாம, இப்படி எண்ணையைக் கொட்டிட்டியே.. அப்பாவி ஒருத்தன் செத்துப்போயிட்டானே" என்று கணவனைக் கடிந்துகொண்டாள்.
கள்ளப் புருஷனுக்காக ஒப்பாரி வைத்தாள். கண்ணு தெரியாம இல்ல. தெரிஞ்சுதான் அந்தப் பாவி தலையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றினேன்.
மனைவி திடுக்கிட்டாள்
கோயிலில் மறைந்திருந்து அவள் பிரார்த்தனையையும் கேட்டது, அவனுக்கு அவனே வரம் கொடுத்ததையும் கணவன் பெருமிதத்துடன் சொன்னான். தான் அகப்பட்டுக் கொண்டதை உணர்ந்ததும் அவள் தன் கணவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள். ஊரைக்கூட்டி தன்னை அவமானப் படுத்த வேண்டாம் என்று கெஞ்சினாள்.
ஊரில் யாருக்கும் தெரியாமல் இவனைக் கொண்டு போய் புதைச்சிட்டு வரலாம் வா.... தூக்கு என்றான் கணவன்.
கள்ளப்புருஷன் பிணத்தை அவளையே சுமக்க வைத்தான். யாருக்கும் தெரியாமல் வீறு கொண்டு செல்ல வேண்டாவா? அதற்காக அவ்வப்போது வேண்டுமென்றே ஆளரவம் கேட்பதாக சொல்லி சொல்லி பிணமும் தோலுமாய் அவளை பாடாய் படுத்தி வைத்தான்.
மயானத்தை சென்றடைந்ததும் அவளையே குழியும் வெட்டச் சொன்னான். பெரிய குழியாக வெட்டச் செய்தான். பின்னர் கள்ளப்புருஷன் பிணத்தை அவள் குழியில் இறக்கியதும், பிணத்தை அவளையும் அதே குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போட்டு மூடினான் கணவன்.
காதலர்கள் மரணத்திலும் பிரியக் கூடாது அல்லவா? ஊருக்கு வந்த கணவன் ஊர் குளத்தில் ஆசை தீர குளித்து கரையேறினான். மனைவிக்கு காளி வரம் கொடுத்து தனக்கு கண் போனதையும், அந்த குளத்தில் மூழ்கி எழுந்தது தனக்கு கண் பார்வை வந்ததையும் கணவன் ஊராரிடம் கதையாக சொன்னானாம்.
கண் அவிச்சா கோயில்
கண்கொடுத்த தீர்த்தம்
இவற்றின் தலப்புராணம் இதுதான்.
No comments:
Post a Comment