உவக்கும் பக்தி - தமிழ் சிறுகதை
விஷ்ணு புரி ஒரு அழகிய ஊர். சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்களும் மாந்தோப்பு தென்னந்தோப்பு குணம் குளிர்ந்த நீரோடை தெடும் அமைந்திருந்தன. அவ்வூர் மக்கள் மன அமைதியுடன் சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணுபுரியை அடுத்த கிருஷ்ணப்பூரி என்ற ஊரும் இருந்தது. ஸ்வர்ணவதி என்ற ஆறு இவ்விரண்டு ஊரையும் இணைக்கும் பாலமாக இருந்தது.
ஸ்வர்ணவதி ஆறு இரண்டு பட்டினங்களையும் தன் நீரோட்டத்தால் வளம் கொழிக்க செய்து வந்தது. ஆற்று நீரின் தன்மை இரண்டு ஊர்களின் மண்ணும் செழித்து சிறந்திருந்தது. அவ்வூர் மக்களுக்கு அந்த ஆறு ஜீவநதியாக விளங்கியது. நதியை தாயை போல போற்றும் மக்கள் பவுர்ணமி தினங்களில் நறு மலர் தூவி அன்னையை வழிபட்டு வணங்கி வந்தனர். விஷ்ணுபுரியும் கிருஷ்ண புரியும் ஸவர்ணவதி ஆற்றின் இரு கண்களாக விளங்கின.
கிருஷ்ணபுரியில் ஆற்றின் கரையை ஒட்டி ஒரு அழகிய மாந்தோப்பு இருந்தது. அடர்ந்த மரங்களும் அதன் பசுமையான இலைகளும் குடை விரித்தாற்போல் நிழல் தந்து கொண்டிருந்தது. அந்த நிழலுக்கு பெருமை சேர்ப்பது போல ஒரு குடில் அமைந்திருந்தது.
அந்த குடிலில் ஆனந்த சித்தர் என்பவர் வசித்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தியும் நம்பிக்கையும் அளவிட முடியாததாக இருந்தது. காலை மாலை இருவேளையும் இறைவனை பூஜித்து வந்தார். மற்ற நேரங்களில் தன்னை காண வரும் மக்களை அன்போடு வரவேற்று எளிமையாக பழகுவார். அப்படி காணவரும் மக்களும் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை சொல்லும்போது அவர்கள் அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார். தன்னை காண வரும் மக்கள் அன்புடன் தனக்குத் தரும் தின்பண்டங்கள் பால் தயிர் பழங்கள் அனைத்தையும் எல்லோருக்கும் பகிர்ந்து அளிப்பார். அவரது நற்செயல் குடியிலும் அதனை சார்ந்த இடமும் ஒரு தெய்வீக ஒளி பெற்றுத் திகழ்ந்தது.
ஆனந்த சித்தரின் பூஜைக்காக கிருஷ்ணபுரியில் உள்ள மக்கள் அனேகர் பால் கறந்து வந்து தந்தனர். அதே மாதிரி ஸ்வர்ணவதி ஆற்றின் அக்கரையில் இருந்து விட்டுப் ஊரிலிருந்து அம்சவல்லி என்பவள் தினமும் பால் கலந்து எடுத்துவந்து கொடுப்பாள். அவளும் அவள் கணவனும் சொந்தமாக 3 பசுக்களும் இரண்டு எருமை மாடுகளும் குவளையோடு ஆற்றை கடந்து அக்கரைக்குச் சென்று விட்டாள். அன்று கிருஷ்ணபுரி மழையினால் மிகவும் குளிர்ந்து போய் இருந்தது. சித்தரின் குடில் மழையில் குளித்து மேலும் புனிதமடைந்து இருந்தது. சித்தரும் அவரது சீடர்களும் நெருப்பை உண்டாக்கி அதன் முன் அமர்ந்து ஜெபித்து கொண்டிருந்தார் கள். ஹம்சவதி பாலை உள்ளே எடுத்து வந்தாள்.
சித்தர் பார்த்தார். ஹம்சவதியைப் பார்த்தார். மழையோ குளிரோ அவளைப் பாதித்ததாய்த் தெரியவில்லை. அவளது கண்களில் பக்தி மென்மையாக கசிந்து கொண்டிருந்தது. சித்தர் ஹம்சவதியைப் பார்த்து, ஏமா மழையும் குளிரும் உனக்கு இல்லையா? இவ்வளவு சீக்கிரம் பாலை எடுத்துவந்து இருக்கிறாயே? என்று கேட்டார்.
ஹம்சவதி, சுவாமி போன தடவை நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லிக்கிட்டு நான் வந்தேன். ஆத்துல வெள்ளம் குளிரோ எனக்கு ஒன்னும் தெரியல. உங்க அன்பு தான் எனக்கு பெருசா இருந்தது என்று பக்தியோடு பதிலளித்தாள்.
சித்தர் யோசித்தார். "என்னம்மா சொல்ற? நான் என்ன சொல்லிக் கொடுத்தேன்? என்று வினவினார் சுவாமி. ஆற்றை கடக்கும் போது கோபாலா கோபாலா என்று கூப்பிட சொன்னீங்க. அப்படியே கூப்பிட்டு நான் வந்துட்டேன். கால் மேல தண்ணி படல, ஊதக்காத்து உடம்பில் படல, எல்லாம் உங்க மகிமைதான் சுவாமி என்று பதிலளித்தாள்.
சித்தருக்கு வியப்பாக இருந்தது. இவளுக்கு இது எப்படி கைகூடியது? இவள் சொல்வது உண்மையாக இருக்குமா? என்று மனதுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. இறைவனுடைய திருப்பெயரை கூப்பிட வேண்டும் என்று ஹம்சவதியிடம் சொல்லிக்கொடுத்ததே அவருக்கு நினைவில்லை. கூப்பிட்ட குரலுக்கு இவ்வளவு விரைவில் இறைவன் ஓடி வந்து விட்டானே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. அவள் சொன்னது உண்மைதானா என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
ஹம்சவதி இன்னும் ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. நீ அக்கரைக்குச் செல்ல வேண்டும். நான் உன்னுடன் வருகிறேன் வா போகலாம் என்றார்.
விஷ்ணுபுரிக்கு சித்தர் வருகிறேன் என்று சொன்னதும் ஹம்சவதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னை பரிசோதிக்க வருகிறார் என்று அவள் எண்ணவில்லை.
ஹம்சவதிக்கு தன் மீதிருந்த நம்பிக்கை தைரியம். இதை அவர் அறிந்திருக்க வில்லை. தனக்கு பால் கொண்டு வந்து தரும் சாதாரண பெண்ணாகவே அவளை நினைத்திருந்தார். ஹம்சவதியோ சித்தரை இறைவனாகவே நம்பினாள். அவர் சொல்வதையும் அறிவுரையாக ஏற்றாள். அவருடைய வாழ்க்கையில் அவளுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.
வலிவு இருப்பவர் தன் வலிவை அறிவதில்லை. ஹம்சவதிக்கு ஆனந்த சித்தரை நினைத்த உடனே தைரியம் பிறக்கும். புத்தி வரும். அதனால் பக்தி வரும். அதனால் நம்பிக்கை கூடும். ஹம்சவதி முன்னால் நடக்க, சித்தரும் ஒரு சில சீடர்களும் பின்னால் வந்தனர். ஹம்சவதி அக்கரையில் இருந்து வந்தது போலவே "கோபாலா கோபாலா" என்று சொல்லிக்கொண்டு ஆற்றில் நடக்க ஆரம்பித்தாள். அவள் ஒவ்வொரு அடியையும் முன்னால் வைக்கும்போது ஆற்றில் நீர் விலகி வழிவிட்டது. பின்னால் வந்த சித்தர் அதை கண்டு ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். அதற்குள் ஹம்சவதி அக்கரைக்குச் சென்று விட்டாள். சித்தரோ தான் அணிந்திருந்த காவி உடைகள் நனைந்து விடுமோ என்று கையில் பிடித்துக்கொண்டு ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தார்.
ஹம்சவதி சித்தரை தெய்வமாக நினைத்தாள். அவள் மனம் பக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தது. அவளுடைய சிந்தனை ஒருமுகப்பட்டு இருந்ததால் அவளுக்கு இறைவனின் அருள் கைகூடியது. அக்கரை சென்ற ஹம்சவதி திரும்பிப் பார்த்து திகைத்துப் போனாள். ஆற்றில் இறங்க முடியாமல் சித்தர் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று புரியவில்லை.
அக்கரையில் நின்று கொண்டிருந்த ஆனந்த சித்தர் ஒரு உண்மையைப் புரிந்துகொண்டார். ஹம்சவதியின் மனதில் உறுதியாக நிலை பெற்றிருந்த நம்பிக்கையை அவர் தன் கண்முன்னால் கண்டார். வேறு சிந்தனையில்லாமல் தூய அன்போடு ஹம்சவதி இறைவன் அருளைப் பெற்றதில் வியப்பு ஒன்றுமில்லை.
எதிரிகளுடைய போராடி வெற்றி கொள்பவரே மாவீரன் என்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் சோதனைகளை வெற்றிகொண்டு நிலை குலையாது இருக்க ஹம்சவதியின் செயல் ஆனந்த சித்தருக்கு ஒரு பாடமாக அமைந்தது.
No comments:
Post a Comment