கை கொடுத்தால் கால் - தமிழ் சிறுகதை
பாய்மரக்கப்பல் முதலில் எங்கே நங்கூரம் போடுமோ அந்த நாட்டில் இறங்கி, அந்த நாட்டு மக்களிடையே தமது நற்செய்தி பிரசாரத்தை தொடங்குவதே அவர் உத்தேசம். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பாய்மரக்கப்பல் ஏதோ ஒரு நாட்டை சென்றடைந்து. நங்கூரம் போடவில்லை. சூறைக்காற்று மோதியதில் கடலில் கவிழ்ந்தது.
பலரும் கடலுக்கு இரையானது இந்தத் துறவி மட்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி நீச்சலடித்து ஏதோ ஒரு இடத்தில் கரை ஏறி விட்டார்.
நாகரிக மனிதனின் காலடி சுவடுகளை ஏதோ ஒரு தீவாந்திரம் அது.
மனித நாகரீகம் எப்படியும் வாரங்களும் தீவாந்திரங்களும் இப்போதும் இருக்கத்தானே செய்கின்றன. இப்போது மிருகங்களில் ஓரங்களிலோ நர மாமிச பட்சிணி பச்ச நிகரான காட்டுமிராண்டிகள் இருப்பார்களா என்பது சந்தேகம்.
துறவியை கரையேறிய தீவில் அந்நிய மனிதன் எவனும் காட்டுமிராண்டிகள் விரும்பி சுவை தரக்கூடிய பூச்சிகளே
துறவியை முதலில் பார்த்து காட்டுமிராண்டி ஒருவன் குழல் ஊதுவது போல கைகளை வாயருகே குவித்த குரல் கொடுத்தான்..
ஒரு கும்பலே வந்து துறவியை சூழ்ந்து கொண்டது. மனித கசாப்பு ருசி எண்ணிப் பார்த்து அவர்கள் வாயை சப்புக் கொட்டினார்கள்.
அவர்களிடம் துறவி பேசத் தொடங்கினார். அவர்கள் ஆத்மாவை இரட்சிப்பதற்காகவே ஆண்டவன் திருவுள்ளம் அவரை இங்கே அனுப்பி வைத்திருப்பதாக அவர் மெல்லப் பேசத் தொடங்கினார். தாங்கள் சுவைத்து உண்பதற்கு சுவையாக மனித கறி அங்கே அவர் வந்து சேர்ந்து இருக்கிறார் என்பதை காட்டுமிராண்டிகள் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு கைகளைக் கொண்டும் அவருக்கு புரிய வைத்தார்கள். இப்போது துறவிக்கு அவர்கள் ஆத்மா ஒரு பொருட்டாகப் படவில்லை. தம் உயிரையும் உடலையும் அவனிடமிருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி? என்பதே பெரும் கவலை ஆட்கொண்டது.
காட்டுமிராண்டிகள் தங்களுக்கு இரையாக இருக்கும் எந்த அந்தத் துறவியை சுற்றி சுற்றி வந்து தங்களுக்கு தெரிந்த கலைநயத்துடன் கும்மி அடித்து மகிழ்ச்சி கொண்டாட தொடங்கினர்.
துறவி அவர்களிடம் சொன்னார். உங்களுக்கு இரையாவதை என் உடம்பெடுத்த பயனாகவே கருதுகிறேன். ஆனால் என் உடம்பு ருசி கசப்பு. உங்களால் சுவைத்து சாப்பிட முடியாது என்பதுதான் என் கவலை.
காட்டுமிராண்டிகளுள் ஒருவன் சொன்னான். முன்னே பின்னே மனித மாமிசம் சாப்பிடாதவர்களா நாங்கள்? நரமாமிச ருசி எங்களுக்கு தெரியாதா என்ன? எங்களை ஏமாற்ற பார்க்கிறாய்?
இல்லை, இல்லை, உங்களையாவது நானாவது ஏமாற்றுதாவது வேண்டுமானால் மாதிரி பார்க்க என் சதையிலிருந்து சிறிதளவு எடுத்து தருகிறேன் தின்று பார்த்துவிட்டு பிறகு சொல்லுங்களேன் என்றார் துறவி.
தம் கால்கள் ஒன்றிலிருந்து கொஞ்சம் சதையை எடுத்து அவர்களிடம் முகமலர்ச்சியுடன் கொடுக்கவும் செய்தார்.
காட்டுமிராண்டிகளின் தலைவன் அதை தன் வாயில் போட்டு மெல்ல தொடங்கிய அதே வேகத்தில் தூ என்று உமிழ்ந்து விட்டான்.
கசகசப்பு, கசப்பு.... என்று எச்சிலை துப்பிய அவனது முகம் பலவிதமாக கேணியது.
அவ்வளவு தான்.....
சீ.... இந்த கறி கசக்கும்" என்று காட்டுமிராண்டிகள் அவரை விட்டு விட்டார்கள். ஆமாம் மனிதக்கறி கசக்காது என்று காட்டுமிராண்டிகள் சொன்னார்களே அவரது சதையை மட்டும் எப்படி கசந்தது?
அந்த கால அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கைக் கால்.
ரப்பரிலேயே செய்தது.
ரப்பர் கசப்பாயிருந்தது.
சொந்தக்கால்கூட அல்லாத அந்த கால் அவருக்கு கைகொடுத்து காப்பாற்றி விட்டது. அதற்கு பிறகு காட்டுமிராண்டிகள் எவரும் அவரை நெருங்கவே இல்லை. அவரும் அவர்களின் ஆத்மாவை பற்றி அக்கறை காட்டவும் இல்லை.
காய் கிழங்கு கனிவகைகளைப் புசித்து உண்ட அந்தத் துறவி, இந்த காட்டுமிராண்டிகளிடையே தம் உடலையும், உயிரையும் இரட்சித்தபடி வெகு காலம் வாழ்ந்திருந்ததாகக்க கதை முடிகிறது.
No comments:
Post a Comment