கொக்குக்குக் கால் ஒன்று - தமிழ் சிறுகதை - பாமரர் கதைகள்
ஆனால் எஜமானுக்கு சமைக்கும் கொக்குக்கறியை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று அவனுக்கு உத்தரவு. எவருக்கும் ருசி பார்க்க கூட தரமாட்டான். சமையலுக்கு அவனுக்கு ஒத்தாசையாக என்றுெவேலைக்காரி ஒருத்தி நியமனம் பெற்றாள். அவள் கொஞ்சம் அழகி.
இளம் வயதினர் எல்லோருமே அவள் மீது ஒரு கண் . சமையல்காரனுக்கும் அவள் என்றால் மிகவும் பிடிக்கும்.
மற்றவர்கள் வேலையாள்கள் தத்தம் போய்பணிக்காக வெளியே போய் விடுவார்கள்.
சமையல்காரன் வீட்டிலேயே இருப்பான். அவனுக்கு உதவி என்பதனால் அவளும் எப்போதும் அவனுடயே இருப்பாள்.
இருவரும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.
மற்ற வேலை ஆள்களுக்குப் பொறாமை.
எஜமானிடம் சமையல்காரனை சிக்க வைக்க வேண்டும் என்று சமயம் பார்த்திருந்தார்கள்.
ஒருநாள் கொக்க வேட்டைக்கு போனான். வேட்டையாடிக் கொண்டு வந்த சமையல்காரனிடம் கொடுத்து சமைக்கும் படி கூறினான். அடுப்பில் வெந்து கொண்டிருந்த போது வாசனை மூக்கை துளைத்தது.
சமையல்காரனின் உதவியாளான அந்த பொண்ணுக்கு வாய் ஊறியது. அடுப்பிலிருந்து கொக்குக் கறியை இறக்கியப் பின்னர்ச் சமையல்காரனிடம் ருசிப் பார்க்கக் கொஞ்சம் கேட்டாள்.
கொக்குக் கறியை யாருக்கும் தரக்கூடாது என்பது எஜமானன் உத்தரவு.
தரமறுத்தான் வேலைக்காரன்.
எனக்குக் கூடவா தரக்கூடாது? செல்லக்கோபத்துடன் சினுங்கினாள் அவள்.
அந்த மோகினியின் சிரிப்புக்கு முன்னே சமையல்காரனின் நொறுங்கிப்போனது.
சமைத்த வைத்திருந்த கொக்குக் கறியிலிருந்து ஒரு காலை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.ெ யாரிடம் சொல்லி விடாதே என்றும் எச்சரித்தான்.
சாப்பாட்டு அறையின் மேசைமீது உணவு வகைகளை கொண்டு வந்து வைப்பதுதான் சமையல்காரனின் வேலை.
உணவு பரிமாறுதல் மற்றொருவனின் வேலை
சமையல்காரன் அவன் காதலிக்குக் கொக்குக் கறியிலிருந்து ஒரு காலைப்பிடித்து கொடுத்ததையும், அவள் ஓர் இடத்தில் ஒளிந்து வேகவேகமாக சாப்பிடுவதையும் அந்த வேலைக்காரன் பார்த்து விட்டான்.
அவன் பார்த்தது அந்த பொண்ணுக்கோ, சமையல் காரனுக்கோ தெரியாது.
சீமான் பகல் உணவுக்காக சாப்பாட்டுக்கு வந்தார்.
கொக்குக் கறியில் ஒரு கால்தான் இருப்பதை அப்போது தான் கவனித்தது போல....
ஆ.... இது என்ன?
ஒரு கால் தானே இருக்கிறது என்றான் அந்தப் பரிமாறுகிறவன்.
சீமான் சமையல் காரனை அழைத்தார்.
தான் அகப்பட்டுக் கொண்டதை உணர்ந்த சமையல் காரன் எதையும் காட்டிக்கொள்ளாமல் எஜமானிடம் கூறினான்.
எஜமான் கொக்குக்கு இருப்பதே ஒரு கால் தானே? கொக்குக்கறியில் எப்படி இன்னொரு கால் இருக்கும்?
சீமான் சீறினார்
என்ன, கொக்குக்கு ஒரு கால் தானா?
"ஆமாம் எஜமான்"
சமையல்காரன் கொக்குக்கு கால் ஒன்றுதான் என்று சாதித்தான். வேணும்னா நாளைக்கு காலையில உங்களுடைய ஏரிக்கு நானும் வரேன்.கொக்குக்கு கால் ஒன்றுதான். நேராவே காட்டுகிறேன் என்று சவால் விடுவது போல சொன்னான் சமையல்காரன்.
மறுநாள் காலை
சமையல்காரன் தன்னுடன் அழைத்துக்கொண்டு சீமான் ஏரிக் கரைக்கு சென்றார். ஏரிக்கரை சென்றடைந்ததும் அங்கு கொக்குகள் நிறையவே இருந்தன. கொக்கு ஒற்றைக் காலில் நிற்பது தான் வழக்கம். இந்த ஒற்றைக் கால் பழக்கம் இருந்ததால் தான் சமையல்காரன் கொக்குக்கு கால் ஒன்றுதான் என்று சமாளித்து விடலாம் என்று நம்பினான்.
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்கு ஒன்றைக் கண்டதும் " பார்த்தீர்களா எஜமான்" " நான் சொன்ன மாதிரியே கொக்குக்கு கால் ஒன்றுதான். நல்லா பாருங்க என்றான்.
அப்படியா இதோ பாரு என்று சீமான் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அவைகள் திசைக்கொன்றாக பறந்தன. அப்போது அவை இரு கால்களை நீட்டின.
அந்த இரு கால்களையும் சுட்டிக்காட்டியபடி சமையல்காரனை அதட்டினார் சீமான்.
இப்ப என்ன சொல்ற?
கொஞ்சமும் அஞ்சாமல் சமையல்காரன் சொன்னான். " நேத்து நீங்க இப்படி துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம் இல்ல? சுட்டு இருந்தா அந்தக் கொக்கும் இன்னொரு காலை நீட்டி இருக்கும் இல்ல"
சீமான் அசந்தே போனார்
தவறுகள் ஏற்படும் போது தந்திரமாக
ReplyDeleteவிடுபடும் ஆற்றல் தெரிந்திருக்க வேண்டும்
தங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி
Delete