பாரதியும் தமிழும்
மொழி உணர்வு
மனிதன் தன் எண்ணத்தை வெளிப்படுத்த உறுதுணையாக திகழ்வது மொழி. மொழி உணர்வு மனிதனாய் பிறந்த அனைவரும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று. உணர்வு இல்லாதவன் பகுத்தறிவு அற்ற விலங்குகளுக்கு ஒப்பாவான். இந்த கருத்தை பாரதியின் பாடல்கள் உறுதிப்படுத்தும். இரு கண்கள் ஒன்றாக கூறியதுடன் மற்றவர்களையும் அவ்வாறே செய்ய வைத்த உலக மகா கவிஞர் பாரதியார் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை.
பாரதியாரின் மொழிப்பற்று
பற்று என்பதற்கு ஆசை விருப்பம் என்று பல பொருள்கள் கூறலாம். பொருள் மனைவி மக்கள்மீது கொள்வதும் பற்றுதான். ஆனால் அந்த பற்று அழியக் கூடியது. தன்னலத்துடன் கூடிய மொழிப்பற்று காலத்தால் அழியாதது. அது தன்னை உடையவரை இறந்தும் இறவாப் புகழ் பெறத் துணை செய்யும்.
நாகர்களின் மொழிப்பற்று
ஐம்பெரும் காப்பியங்கள் என்பன தமிழில் உள்ள இலக்கியங்களில் சிறப்பிக்கத் தக்கவனவாகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று போற்றத்தக்கன. புத்த சமய காப்பியமான மணிமேகலை நாகர்களின் மொழிப்பற்று எத்தகையது என்பதை உணர்த்துகிறது. தம் நாகர் மொழியைப் பேசிய ஒரே காரணத்திற்காக நாகர்கள் மனம் மாறினர். சாதுவன் கூறியதை தெய்வ வாக்காக மதித்தனர்.
மனிதர்களை கொன்று தின்னும் மற்றவர்களுக்கு தமிழ் மொழியின் மீது பற்று அல்லது ஆறு அறிவு உள்ளது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நமக்கு உள்ளதா? மொழியும் நாடும் இரு கண்களைப் போன்று மதிப்பவனே மனிதன். அதில் பின் வாங்குபவன் விலங்கு என்பதை அறியவேண்டும்.
மொழிப்பற்று
பாரதியார் தமிழ் சுதந்திர தெலுங்கு கன்னடம் வங்காளம் சமஸ்கிருதம் ஆங்கிலம் என பல மொழிகளை அறிந்தவர். அதனால்தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடினார்
பல மொழிகளை அறிந்த பாரதியார் தமிழ் மொழியைப் போல இனிமையான மொழியை அறிந்ததில்லை. உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை என்று பாடியுள்ளார்.
வடமொழியில் காளிதாசனையும் ஆங்கிலத்திலே ஷெல்லியும் சிறந்த புலவர்கள் என்போம். பாரதியோ தாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பிறந்ததில்லை என்று உறுதிபடக் கூறுகிறார்.
தமிழர்கள், தமிழர் என்ற பெயர் மட்டும் கொண்டிருந்தால் போதாது. செவிடர்களாய்க் கண்ணிருந்தும் குருடராய் வாயிருந்தும் ஊமையாய் தமிழர்கள் உள்ளதைக் கண்டார் பாரதியார் தமிழர்களே தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்யுங்கள்.
மறைவாக நமது பழம்பெருமை பேசி இருப்பதால் பயன் என்ன? நான் மற்ற நாட்டு அறிஞர்கள் வரலாறுகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள். தொல்காப்பியம் சிலப்பதிகாரம் போன்ற சிறந்த படைப்புகளை படியுங்கள் என்று வேண்டுகோளையும் விடுக்கிறார்.
நமது பெருமையை நாமே பேசுவது தற்பெருமை தமிழர்களுக்கு இந்த இழிநிலை வேண்டா என்பது பாரதியின் எண்ணம் நமது பெருமையை உயர்வை மற்றவர்கள் சொல்ல வேண்டுமே வேண்டும் என்பது அவரது அசைக்க முடியாத கருத்தாகும் நம் நாட்டில் வெள்ளப்பெருக்கை போல கலைமகள் கலைகள் வளர வேண்டும் கவிதைகள் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பள்ளத்தில் வீழ்ந்து அறியாமை இருளில் சிக்கி உள்ள குருடரெல்லாம் விழிபெற்றுப் உயர்வு அடைவர்
எனவே பாரதியின் மொழி பற்றிய மற்ற அனைவரையும் நிலையிலும் மாறுபட்ட ஒன்று அவர் கவிதைகளை படிப்பதும் அவர் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது மேன் அவருக்கு இருந்த மொழிப்பற்று நாம் நமக்கு இருக்க வேண்டும் அதற்காகவே அந்த நிலை ஏற்பட்டால் பாரதியின் ஆன்மா சாந்தி அடையும்
தொன்மையும் சிறப்பும்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" என்ற தொடர் நமது தமிழின் தொன்மைக்கு சான்றாகும். கல் மண் முதலியன தோன்றாத முன்னமே தோன்றியது தமிழ் இனம் என்பது பாரதியின் முடிவு.
வரலாற்று ஆசிரியர்களால் காண முடியாதது இல்லை ஆனால் அவர்களாலும் காணமுடியாத தோற்றமுடையது தமிழ்மொழி அதே நேரத்தில் இளமை குன்றாமல் என்றும் பதினாறு போல் புதுப் பொலிவுடன் திகழும் மொழி என்று கூறுகிறார். இதனால் பாரதியின் மொழிப்பற்று நமக்கு விளங்கும் சொல்லில் உயர்ந்த சொல் தமிழ்ச்சொல் என்பது அவர் முடிவு யார் கேட்கிறார்களோ இல்லையோ குழந்தைகள் கேட்பார்கள். அவர்களை வருங்கால சிற்பிகள் என்ற எண்ணத்தில் தொழுது தமிழைப் என்று பாப்பாவுக்கு கூறுகிறார்.
தமிழமுது
தேவாமிர்தம் உண்டவர்கள் அழியா வரம் பெற்றவர்கள் என்பது வரலாறு. அதைப் பெற தேவர்களும் அசுரர்களும் பட்டபாடு நமக்குத் தெரியாதா? தமிழ் சுவையை அறிந்தவர் இந்த உலகில் வாழ லாம். அவர்கள் தேவர் உலகில் வாழும் தேவர்கள் இதனை தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் என்று பாடல் உணர்த்தி நிற்கும்
செந்தமிழ் நாடு
தமிழ் மொழியை அந்த அளவிற்கு நேசித்தார் ஓ அதே அளவிற்கு தமிழ்நாட்டையும் நேசித்தார் செந்தமிழ் செந்தமிழ் நாடு என்ற மற்றவர் சொல்ல கேட்பதே பாரதியாருக்கு பேர் இன்பமாக தோன்றுகிறது செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாடலடி உலகம் உள்ளளவும் போற்றும் பாடல்
ஆறு இல்லா ஊருக்கு அழகு இல்லை என்பது தமிழகத்தில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை காவிரி தென்பெண்ணை பாலாறு வையை பொருநை என பல ஆறுகள் ஓடி செழிப்பாய் வழங்கிய நாடு தான் தமிழ்நாடு உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தும் ஒருசேர பெற்றுள்ள நாடு என்று இருக்குமானால் அது தமிழ்நாடு தான் என்பது பாரதியின் முடிவு.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் நெஞ்சை அள்ளும் சிலம்பு இளங்கோ உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் போன்ற பெருமக்கள் தமிழ் மொழிக்கு ஆரங்கள் ஆவர்.
சிங்களம், சாவகம், ரோமாபுரி போன்ற பல மேலை நாடுகளுடன் வாணிபம் செய்து தொலைத்த நாடு தமிழகம் என்பதை அறியும்போது நாம் மிகவும் பெருமை அடையாமல் இருக்க முடியாது. வடக்கே வேங்கடம், தெற்கே கன்னியாகுமரி க்கும் இடையே தமிழன்னை ஆட்சி புரிகிறாள் என்பதை அவர் பாடல்கள் வலியுறுத்தும். எனவே நம் மொழி மீது அந்த அளவு கற்றுக் கொடுக்கிறோமோ அந்த அளவு நம் நாட்டின் மீதும் பற்றுக் கொண்ட வேண்டும் எங்கும் வாழ்ந்தால் கேடொன்றும் இல்லை அல்லவா?
தமிழ்த் தாய்
மாதா , பிதா குரு தெய்வம் என்பது நம் நாட்டுப் பழமொழி. தாதி தாயே மதிக்கத் தெரியாதவர் மனிதன் அல்லன் அதனால் நாடு மொழி 6 பூமியாக அனைத்தும் தாய்நாடு தாய்மொழி பூமாதேவி என்று அழைத்து வருகிறோம் இறைவன் அருளால் அகத்தியரால் வளர்க்கப்பட்ட பெருமை உடைய மொழி நம் தமிழ்மொழி மூவேந்தர்களும் குறுநில மன்னர்களாலும் பொலிவுடன் வளர்க்கப்பட்ட மொழி கணித தன்மை கன்னித்தன்மை மொழி இப்படி பல பெருமைகளைப் பெற்ற தமிழுக்கு பழிச்சொல் ஏற்பட்டது பாரதி அதைக்கேட்டு சினத்துடன் பொங்கி எழுந்தான்
பேதையின் வார்த்தை மேலை நாட்டு மொழிகளில் புத்தம் புதிய கலைகள் நாள்தோறும் வளர்ந்த வண்ணம் உள்ளன பஞ்சபூதங்களின் செய்திகள் நுட்பங்கள் போன்றவற்றை கூறும் ஆற்றல் பெற்றுள்ளன மேற்சொன்னவற்றை கூறக்கூடிய ஆற்றல் வளம் போன்றவை தமிழ் மொழிக்கு இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்பதை ஒருவன் உரைத்தான் நாட்டுப்புறங்களில்
நாட்டுப்புறங்களில் ஒரு வார்த்தை ஒன்று இல்லாமல் பிறக்காது அல்லாமல் குறையாது என்பதை வார்த்தையாகும். எனவே அந்தப் பேதை சொன்ன கூற்றை நாம் மறுக்க முடியாது நாம் உண்மை நிலையும் அதுதான் என் அருமை மக்களே என்ற பழிச் சொல் எனக்கு இருக்கலாமா? தாய்க்கு தாய்நாட்டிற்கு பலபேரின் நீங்கள் பார்த்திருக்கலாம் என்று தமிழ் தாய் மனம் வருந்தினாள். நமக்கு ஆலோசனைகள் கூறி அதன்படி நடக்குமாறு வேண்டுகிறாள் முன்னோர்களின் வீர பிரதாபங்களை கூறி காலம் கழிக்காதே பல நாடுகளுக்கு செல்ல வேறு கலைச்செல்வங்கள் யாவும் கொண்டு வந்து சேர்ப்பது என்று வேண்டுகோள் விடுக்கிறார் என்று சொன்ன வார்த்தைகள் உண்மையாகும்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பது போல இந்த வார்த்தைகளை தள்ளிவிடாமல் கலைச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் தமிழ் தாய்க்கு ஏற்பட்ட பழியைத் தீர்ப்பதே நமது முதன்மையான கடமையாகும் மாதா வயிறு எரிய வாழான் ஒரு நாளும் என்பதை எண்ணி செயல்படுவோம் பாரதியின் பாடல்களை படித்தவர்கள் சில குறிக்கோள்களை பெற்றே தீரவேண்டும் மொழிப்பற்று அவற்றில் முக்கியமான ஒன்று அவர் போன மொழிப் பற்று கொண்டு திகழும் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் பிரிக்க முடியாதவை.
மொழிப்பற்று நாட்டுப்பற்று இயல்பை அமையவேண்டும் கதை சொன்ன வார்த்தையை பொய்யாக்கியது தமிழர் ஒவ்வொருவரின் தலையாய கடமை. மருத்துவம் பொறியியல் சட்டம் போன்ற பல்வேறு துறைகளிலும் தமிழ் நூல்கள் என வேண்டும் அத்தகைய பாடங்களை கற்பிக்கும் திறன் தமிழ் மொழிக்கு இல்லை என்ற பணியை நாம் எப்படி எப்பாடுபட்டாவது நீக்க வேண்டும் பல மொழிகளைப் படித்தேன் நம் மொழியில் இல்லாத பிற மொழிகளிலுள்ள புதுமைகளை ஏற்று புதிய நூல்களை படித்தல் வேண்டும் தமிழால் எதுவும் செய்ய இயலும் தமிழனால் எந்தச் செயலும் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துவோம்
No comments:
Post a Comment