பாரதியார் கவிதைகள் ஒரு பார்வை
பாரதியார் கவிதைகள்
உலக மகா கவிஞர் என்று பாரதியாரே என்று நாடே போற்றுகிறது. உலகமே போற்றுகிறது என்று கூறினால் மிகையாகாது. கவிஞர் பாரதியாரின் கவிதைகள் காலத்தால் அழியாதது. பாரதியார் புகழ் பெற்ற கவிஞர்களான ஷெல்லி வால்ட் விட்மன் போன்றோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். இந்த கவிஞர்கள் போன்று பாரதியாரும் என்றும் வரலாற்றில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை. சாகாவரம் பெற்ற கவிஞர் கவிஞர்களை இரு வகைகளாகப் பிரிப்பர். கருவிலே திரு ஏற்றார்போல் மேகம் போல விரைந்து கவிதை படுபவர் ஒரு சாரார். முயன்று கவி ஏற்றுபவர் மற்றொரு சாரார்.
பாரதியாரோ முதல் வகையை சார்ந்த கவியரசர். 39 ஆண்டுகளில் அவர் மறைந்தது நமக்கு மாபெரும் இழப்பு. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருப்பின் எவ்வளவு இனிய கவிதைகள் பெற்றிருப்போம் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பாரதியாரின் கவிதைகள் தனக்கு நிகரான அவருடைய பாடல்களை தொடர் நாடகங்கள், திரைப்படங்கள், கதைகள் கட்டுரைகள், மேடைப் பேச்சுகள் அனைத்தும் அவற்றை பயன்படுத்த தவறுவதில்லை. அவருடைய கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இவரை அறியாத தமிழர் இருக்க இயலாது. அந்த மாபெரும் கவிஞர் பாரதியார் பெருமையைப் பற்றிப் பின்வருமாறு பாடுகிறார்.
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடாஅவன் பாட்டை இன்னொருவன் பாடினானடாஅதைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேடாஅந்த கிறுக்கு மொழியில் உளறுவதை பொறுப்பாயடா.."
தீர்க்கதரிசி
பாரதியார் ஒரு தீர்க்கதரிசி என்று கூறுகிறோம். தீர்க்கதரிசி என்பதன் பொருள் என்ன? எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்பே உணர்ந்து கூறுபவரை தீர்க்கதரிசி ஆவார். அப்படி பாரதியார் கூறியதை என்ன என்றுதான் பார்ப்போம்.
"வானை அளப்போம். கடல் மீனை அளப்போம். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்ற பாடலடி அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு சான்று ஆகும். இந்த பாடல் பாடப்பட்ட போது உலகம் என நினைத்திருக்கும்? பாரதியாரைப் பார்த்து நகைத்திருக்கும். சந்திர மண்டலத்திற்கு மனிதன் செல்ல இயலுமா சரியான பைத்தியமாக உள்ளது என்று கேலி பேசி இருக்கலாம். ஆனால் 1969 ஜூலை 21-ஆம் தேதி அமெரிக்க நாட்டு ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் காலடி வைத்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்த போதுதான் அவர் ஒரு தீர்க்கதரிசி என நாம் உணர்ந்தோம்.
இந்தியா விடுதலை
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு அவர் எழுச்சியுடன் " ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று பாடி நாட்டிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படு த்திய புதுமைக் கவிஞர் அல்லவா பாரதியார்.
சமுதாயம் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய முறைப்படி கிடைக்க வேண்டும் என்ற உயர் சிந்தனை பாரதிக்கு இருந்தது. பசியால் வாடும் மக்களை பார்த்து மனம் பதறினார். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ என்று பொங்கி பாய்ந்தார். உலக உயிர்களில் மானிட இனம் உயர்ந்தது. மனிதனுக்கு வயிற்றுக்கு இட வேண்டிய உணவை தவறாது இடவேண்டும். " "வயிற்றுக்கு சோறிட வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்பது எவ்வளவு உயர் சிந்தனை. இதன் பிரதிபலிப்புதான் பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவு திட்டம். எம்ஜிஆர் அவர்களின் சத்துணவு திட்டம் என்று கூற நியாயம் உண்டு.
பாரதியின் பல கல்வி நோக்கு
பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்ற பாடலடிகள் கூறும். பல கல்வி பற்றி அறிய வேண்டியது நமது முக்கிய கடமை தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. மருத்துவம் பொறியியல் கணினி என்று பல துறைகளிலும் நாம் வளர்ந்து வருகிறோம். இந்த கல்வி முன்னேற்றம் எல்லாம் அடைய எண்ணி அவர்கள் தான் உலக மகா கவிஞர் பாரதி.
கங்கை காவிரி இணைப்பு
வடநாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நாட்டிற்கு அறிவை தருவதும் தெற்கில் பருவமழை இன்றி வாடும் நாமறிந்த ஒன்று நல்ல நிர்வாகம் உள்ள நாடு நிம்மதியான நாடு என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பாரதியிடம் இருந்தது. அதனால்தான் கங்கை காவிரி இணைக்க வேண்டும் என்று அன்றே சொன்னார்.
காவிரி பிரச்சனை
காவேரி பிரச்சனை இலங்கை பிரச்சனையும் என்று தீரும் என்று நாம் ஆவலுடன் நோக்கி உள்ளோம். நதிநீர் பங்கீட்டு கொள்கையை முறைப்படி பயன்படுத்த தவறியதால் தானே போட்டி பூசல் ஏற்பட்டன. பாரதி கூறிய படி கங்கை காவிரி இணைப்பு திட்டம் ஏற்பட்டால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்படாதா?
இவ்வாறு தொலைநோக்கு பார்வையுடன் வாழ்ந்த பாரதியார் ஒரு தீர்க்கதரிசி என்று கூறுவதே பொருத்தம் உண்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது ஒரு நாள் கங்கை காவிரி இணைப்பு வந்தே தீரும். இதை யாரும் மறுக்க இயலாது பாரதியாரின்
கவிதை தலைப்புகள்
தேசிய கீதங்கள் நாட்டின் உரிமை நிலையை கண்டு பொங்கி எழுந்த பாரதியின் கருத்து பிழம்புகளே அப்பாடல்கள் தான். இந்தியாவிற்கு விடுதலை உணர்வை ஊட்டினார். நாடு மொழி மீது பற்று இன்றி இருந்த நம்மவருக்கு பற்றி ஏற்பட காரணமாகும். பாரதி தமிழ் மொழியின் மீதுள்ள பற்றும் நாட்டுப் பற்றும் உணர்த்தும் பாடல் அடிகள் சான்று பகிர்கின்றன. விடுதலை போராட்ட வீரர்கள் வரலாறு போன்ற தேசிய கீதங்கள் என்ற பிரிவை அணிய செய்யும் பாடல்களாகும்.
பக்தி பாடல்கள்
பாரதியார் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதை அவர் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவர் பாடாத தெய்வம் இல்லை. சிவன், விநாயகன், முருகன் சக்தி, வள்ளி, கண்ணம்மா, திருமகள், கலைமகள் என்று இந்து சமயத்தில் வெளிப்படும் பாடல்களை பாடிப் பரவசப் படுத்துகிறார். மற்றும் ஏசு, அல்லா என்ற கடவுள் அறியும்படி மத ஒருமைப்பாட்டு வலியுறுத்துகிறார். இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர் பாடிய சூரியன் சந்திரன் பாடல் சான்று கூறுவனவாம்.
ஞானப் பாடல்கள்
ஞானப் பாடல்கள் என்ற தலைப்பில் பாரதியார் பாடிய பாடல்கள் மக்களுக்கு ஞானத்தை உணர்த்தும் எண்ணத்தில் பாடுபட்டன. "அச்சமில்லை" என்ற தலைப்பில் உள்ள பாடல் அச்சம் எந்த நிலையிலும் கூடாது என்று கூறுவதாகும். பேரிகை, சங்கு, கடமை, மணப்பெண், பகைவனுக்கு அருள்வாய், கற்பனையூர் என்ற தலைப்பில் பாரதி பாடிய பாடல்கள் நமக்கு நல்வழி காட்டுவது ஆகும். மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலை நாம் மறக்க முடியுமா? அறிவே தெய்வம் என்பதை விளக்குவதன் மூலம் மூடநம்பிக்கைகள் சிறுதெய்வ வழிபாடு போன்ற ஒழிய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
பல்வகைப் பாடல்கள்
அவ்வையார் பாடியது ஆத்திச்சூடி. இதை அறியாதவர்கள் இலர். காலத்தின் சூழலுக்கு ஏற்ப புதிய ஆத்திச்சூடி பாடிய புதுமையை புகுத்தியவர் பாரதியார். போர் முகத்து நில் என்பது புதிய ஆத்திச்சூடி. பாப்பா பாட்டு, புதுமைப்பெண் முரசு , பெண்கள் விடுதலைக் கும்மி, புதிய கோணங்கி என்ற தலைப்புகளில் புதிய சிந்தனைகளை படைத்துச் சிந்திக்க வைக்கிறார்.
தனிப்பாடல்கள்
தமிழ் இலக்கிய பாடல்களில் தனி பாடல்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பாரதியார் பாடல்கள் சிலவற்றை பாடியுள்ளார். மழை, புயல், காற்று, கவிதை என்ற பாடல்கள் சிறப்புடையன. சீட்டுக் கவி எழுதிய எட்டையபுரம் மன்னருக்குத் வறுமை நிலையை உணர்த்தி பொருள் பெற முயன்றதை சீட்டுக்கவிபாடல் கூறும், வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு பாடலும் போற்றத்தக்கது.
சுயசரிதை புதிய பாடல்கள்
பாரதியின் கவிதைகளில் சுயசரிதை புதிய பாடல்களும் சிறப்பு உடையன. பாரதி பாடாத தொடாத துறை இல்லை என்பதற்கு இப்பாடல் சான்று. பழமையில் ஊன்றித் திழைத்தவரக்கு புதுமையை போற்றும் வண்ணம் அமைந்த அவர் புதிய பாடல்கள்.
கண்ணன் பாட்டு
பாரதியார் கண்ணனை போல பல கோணங்களில் பார்க்கிறார். கண்ணனை தன் தாய், தந்தை, சேவகன், அரசன், ஆண்டான் என்ற எண் வகையான பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும் திறமை கொண்டவை, இறைவன் நாம் விரும்பியபடி காட்சி கொடுத்து அருள் தருவான் என்பது இதன் கருத்தாகும்.
புதுமை
இறைவனைத் தன் நாயகனாக பாடியவர்கள் உண்டு. ஆனால் இறைவனை தனக்கு காதலியாக பாடிய கவிஞர் பாரதியார் எந்த வகையில் ஒரு புரட்சியை செய்தார் என்பது பொருத்தமாகும்.
பாஞ்சாலி சபதம்
பாரதியார் பாஞ்சாலி சபதம் பாடிய நோக்கம் பலருக்கு தெரியாமல் உள்ளது. ஆனால் அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு பாரதி உள்ளம் அனலில் இட்ட மெழுகு போல் துடித்தது. அதன் வெளிப்பாடே பாஞ்சாலி சபதம். அதிலிருந்து அவர்கள் முன்னிலையில் பீஷ்மர் துரோணர் கிருபர் முதலிய பெரியோர்கள் முன்னிலையில் மானபங்கம் செய்யப் பட்டாள். ஐந்து கணவர்கள் இருந்தும் முன்னிருந்து கண்ணிருந்தும் குருடர்களாய் இருந்தனர். அதுபோல பாரத அன்னை அடிமைபட்டு கிடப்பது கண்டு இந்திய மக்கள் கவலைப்படவில்லை. பாரத அன்னையை மீட்கச் சீறிப்பாய முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் தோன்றி மக்களை சிந்திக்க வைத்தது பாஞ்சாலி சபதம். வெள்ளையரை அனைவரும் ஓரணியில் நின்று எதிர்க்கும் அளவு நாம் மாறி பாரதியின் பாஞ்சாலி சபதத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாம்.
குயில் பாட்டு
பாரதியார் வெள்ளையரை எதிர்த்து இந்தியா நாளிதழில் எழுதி வந்தார். வெள்ளை நரிகள் சினம் கொண்டு இந்தியா நாளிதழ் வராமல் தடை செய்தன. பாரதியையும் கைது செய்ய ஆணை போட்டது. விடுதலைப் பணியை தொடர்ந்து ஆற்ற பாரதியார் தேர்ந்தெடுத்த இடம் புதுவை. சுமார் 10 ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்த பல இன்னல்களை ஏற்றார். அப்போது புதுவை இயற்கை சூழலில் தோன்றியதே "குயில் பாட்டு" குயில் மாடன், நெட்டைக் குரங்கன் போன்ற பாத்திரங்கள் மறக்க இயலாது.
வசன கவிதை
கவிதை இரண்டாகப் பிரிப்பர். அவை மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பன. மரபு கவிதை இலக்கண நெறியின் படி பாடப்படுவது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற உறுப்புகள் முக்கிய இடம்பெறும். இலக்கணத்தைப் பற்றி கவலைப்படாமல் கருத்துக்கு முதன்மை தருவது புதுக்கவிதை. இன்று புதுக்கவிதை சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. இளைஞர்கள் மத்தியில் புதுக்கவிதைக்கு மிக செல்வாக்கு உள்ளது. பாரதியாரின் வசனகவிதை மூலம் அதற்கு வித்தூன்றினார்.
அவர் விதைத்த விதைதான் இன்று பெரிய ஆல விருட்சம் போல் வளர்ந்து சிறப்புடன் திகழ்கிறது. ராஜகோபாலன், மேத்தா, இன்குலாப், அப்துல் ரகுமான் போன்றோர் இந்த வரிசையில் இன்று முன்னணியில் உள்ளனர். காட்சி புகழ் ஞாயிறு காற்று, கடல் விடுதலை போன்ற தலைப்பில் பாரதியார் பாடிய பாடல்கள் வசன கவிதையில் அடங்கும். இவற்றைப் படித்து ரசித்து பலர் கவிதையில் ஈடுபாடு கொண்டனர். கவிதையை எழிமையாக்கிய பெருமை பாரதியாரைச் சாரும். இத்தகைய பல நிலைகளில் பாடப்பட்ட பல்வேறு தலைப்புகள் காலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
No comments:
Post a Comment