பாண்டியர்களின் வீழ்ச்சி The fall of the Pandyas | The History of Pandyas பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 27, 2020

பாண்டியர்களின் வீழ்ச்சி The fall of the Pandyas | The History of Pandyas பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு

பாண்டியர்களின் வீழ்ச்சி The fall of the Pandyas | The History of Pandyas பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு


பாண்டியர்களின் வீழ்ச்சி 

மாறவர்மன் சுந்தரபாண்டியன் அரசாண்டு வந்த காலத்தில் சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், மாறவர்மன் வீர பாண்டியன் என்பவர் அரசு பிரதிநிதிகளாக இருந்தார்கள். சுந்தரபாண்டியன் கொங்கு நாட்டிலும் வீரபாண்டியன் சிதம்பரம் பகுதியிலும் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்கள் வெவ்வேறு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஆனாலும் சகோதரர்கள். 

தனக்கு அடுத்ததாக பட்டத்துக்குரிய சுந்தரபாண்டியனை புறக்கணித்து வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான் மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியன். 

இந்த அநீதிகளை கண்டு வெகுண்டெழுந்து சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று தானே அரியணையைப் ஏறினான் வீரபாண்டியன்.  இதனால் கடும் சினமுற்று சுந்தரபாண்டியன் மேல் போர் தொடுத்தான்.  எதிர்பாராதவிதமாக பெரும் தாக்குதலுக்கு ஆளான சுந்தர பாண்டியன் மதுரையை விட்டு ஓடிவிட்டான். 

அலாவுதீன் கில்ஜி,  டில்லியை தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை ஆண்டு வந்த காலம் அது.  கிபி  1310 அவனுடைய படைத்தலைவனான மாலிக்காபூர் தக்கனத்தின் மேல் படையெடுத்து வந்தான். 

சுந்தரபாண்டியன் அவனை சரண் அடைந்து.  தனது நிலையை கூறி தனக்கு அளிக்கப்பட்ட  படைத்துணை அளிக்குமாறு வேண்டினான்.

அதன்பேரில் மாலிக்காபூரின் படை மதுரையை சூழ்ந்தது.  வீரபாண்டியன் எளிதில் சிக்காமல் அவன் படையை பல முனைகளிலும் எதிர்த்து தாக்கிக் கதிகலங்கச் செய்தான்.  

பாண்டிய நாடு முழுவதும் தீயிடுதலும்,  கொள்ளை அடித்தலும்,  கோயில்களும் மாளிகைகளும் தகர்க்கப்படுவதும் மாலிக்காபூர் படையினரால் வேறு வழியின்றி மூர்க்கத்தனமாக நிகழ்த்தப்பட்டன.  இந்த நிலையில் வீரபாண்டியனின் படையில் பணிபுரிந்து வந்த 20 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்கள் உண்ட வீட்டுக்கு இரண்டகம் விதத்தில் மாலிக்காபூரின் சேர்ந்து கொண்டு விட்டார்கள். 

வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் வீரபாண்டியன் தலைமறைவானான். இதை தொடர்ந்து மாலிக்காபூரின் படைகள் பாண்டியனின் அரண்மனை நிதிகளை சுருட்டின.  மதுரை,  சிதம்பரம், திருவரங்கம் கோயில்களில் எல்லாம் கொள்ளை அடிக்கலாயின. பாண்டியர் படையிலிருந்து யானைகளும் குதிரைகளும் அவர்களால் டெல்லிக்கு கவர்ந்து செல்லப்பட்டன. 

இப்படி எல்லா வகையிலும் அடியோடு பலவீனப்பட்டது பாண்டியநாடு.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரன் என்பான்  படை எடுத்து வந்து பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் கைப்பற்றினான்.  இதற்கிடையில் 50 ஆண்டுகாலம் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றது என்று வரலாறு கூறுகிறது.  சங்கம் வைத்து தங்கத் தமிழ்  வளர்த்த  பாண்டிய நாட்டினுடைய புகழ்மிகு மகுடம் அடியோடு சாய்ந்தது. இத்துடன் பாண்டியர்களின் வரலாறு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment