மீண்டும் பாண்டியன்
கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிரர்களின் கொடுங்கோண்மையிலிருந்து பாண்டி நாட்டை மீட்டான். சங்க காலத்திற்குப் பிறகு கிபி ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் காலமோ, தலைமுறைகளோ திருத்தமாக இதுவரை கண்டறியப்படவில்லை.
பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடிச் செப்பேடுகள், இராசசிம்மன் வழங்கிய சின்னமானூர் சிறிய பெரிய செப்பேடுகள், சீவர மங்கல செப்பேடுகள், சில கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இடைக்கால பாண்டிய மன்னர்கள் காலம் ஓரளவு கணிக்கப்படுகிறது.
ஆட்சிக்காலம்
பாண்டியன் கடுங்கோனை கி பி 575 - 600 அடுத்து அரசாள வந்த பாண்டிய மன்னர்கள் பலராவர்.
- மாறவர்மன் அவனி சூளாமணி கி பி 600 - 625
- சடையவர்மன் செளிய வேந்தன் கி பி 625 - 640
- மாறவர்மன் அரிகேசரி கி பி 641 - 670
- கோச்சடையன் இரணதீரன் கி பி 670 - 710
- மாறவர்மன் முதலாம் நரசிம்மன் கி பி 710 - 765
- நெடுஞ்சடையன் பராந்தசன் கி பி 765 - 790
- இரண்டாம் இராசசிம்மன் கி பி 790 - 792
- வருகுண மகாராஜன் கி பி 792 - 835
- சீமாறன் சீவல்லபன் கி பி 835 - 862
- வரகுண வர்மன் கி பி 862 - 895
- பராந்தக பாண்டியன் கி பி 880 - 905
- மூன்றாம் இராசிம்மன் கி பி 900 - 920
- வீரபாண்டியன் கி பி 946 - 966
ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
- கிபி 900 முதல் பாண்டிய நாட்டை ஆட்சி பீடத்தில் இருந்தவர்களில்
- மூன்றாம் இராசசிம்மன் பாண்டியன்
- அமர புயங்கன்
- மானாபரணன்
- வீரகேரள பாண்டியன்
- சுந்தரபாண்டியன்
- விக்கிரமபாண்டியன்
- சீவல்லப பாண்டியன்
- மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன்
- சடையவர்மன் பராந்தக பாண்டியன்
- மாறவர்மன் சீவல்லபன்
- சடையவர்மன் குலசேகர பாண்டியன்
- மாறவர்மன் விக்கிரமபாண்டியன் கி பி 1180 - 1190
ஆகியோர் முக்கியமானவர்கள்
மீண்டும் பாண்டியர் | பாண்டியர்களின் வரலாறு The History of pandiaya Nadu | Kadungon கடுங்கோன்.
No comments:
Post a Comment