பாண்டியர்களின் வரலாறு - அரசுரிமை மாற்றம் The History of Pandiyargal - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 27, 2020

பாண்டியர்களின் வரலாறு - அரசுரிமை மாற்றம் The History of Pandiyargal

பாண்டியர்களின் வரலாறு - அரசுரிமை மாற்றம் The History of Pandiyargal


அரசுரிமை மாற்றம் 

சில ஆண்டுகளுக்குப் பிறகு குலசேகர பாண்டியனுக்கே  பாண்டி நாட்டு அரசுரிமை சோழ மன்னரால் வழங்கப்பட்டது.  

இப்படி அவ்வப்போது தலைதூக்கிய சேர பாண்டியர்களின் எழுச்சி அவ்வப்போது சோழ மன்னர்களால் அடக்கப்பட்டது. எனினும் மூன்றாம் இராசராச சோழன் காலத்தில் பாண்டியர்கள் துவக்கிய உரிமைப்போர் அடக்க முடியாத பெரும் தீயை மூட்டிவிட்டது. இந்தப் போரை தலைமை தாங்கி துவக்கியவன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தான்.  கிபி 1216 - 1238. 

 சோழ நாட்டின் மேல் படையெடுத்து இவன் மூன்றாம் இராசராசனை வென்றான்.  அந்நாட்டின் தலைநகரம் தஞ்சையைக் கைப்பற்றினான். தஞ்சையையும் உறையூரையும் உருகுலையத் தீயிட்டான். மாளிகை பலவற்றை இடித்துத் தள்ளினான்.  பழையாறையில் வீர முழுக்கு செய்துகொண்டான்.  

பிறகு தில்லைக்குச் சென்று கூத்தப் பிரானை வணங்கித் தன்னோடு திரும்பும் வழியில் பொன்னமராவதியில் மூன்றாம் இராசராசனைச் சந்தித்தான்.  அவன் சோழ நாட்டு அரியணையை மீண்டும் வணங்கி தனக்கு அடங்கி நடக்க செய்தான்.  இதனாலேயே இவன் "சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன் என்ற விருதுப் பெயரும் பெற்றான்.  

மூன்றாம் இராசராசன் மீண்டும் பாண்டியனோடு முரண்பட்டான்.  மறுபடியும் போர் மூண்டது.  இந்த முறையும் மூன்றாம் ராச ராச நால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நாட்டை விட்டு ஓடிய அவன் சேந்தமங்கலம் கோட்டையில் கோப்பெருஞ்சிங்கனால் அவன்  சிறை வைக்கப்பட்டான். 

பாண்டிய மன்னன் பாழையாரில் வீர முழுக்கு செய்துகொண்டான்.  கிபி 1232 இல் ஓய்சல மன்னனான வீர நரசிம்மன் இராசராசனை விடுவித்தான்.  அதுமட்டுமா? பாண்டியனோடு போரிட்டு வென்று சோழனை மறுபடியும் அரசனாக்கினான்.

பிறகு கிபி 1239 - 1251  பாண்டி நாட்டு அரசனாக முடிசூட்டிக் கொண்டவன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்,  சோழ ரோடு தொடுத்த போரில் இவன் மூன்றாம் ராஜேந்திரனிடம் தோல்வி கண்டான்.  இந்த நிலையில் ஓய்சல மன்னன் வீர சோமேசுவரன் இராஜேந்திரனோடு  அவனை வென்று  பாண்டிய நாட்டு ஆட்சி பொறுப்பை மறுபடியும் சுந்தரபாண்டியனிடமே ஒப்படைத்தான்.

பாண்டியர்களின் வரலாறு - அரசுரிமை மாற்றம் The History of Pandiyargal

No comments:

Post a Comment