Imayavaramban Nedunjseralathan இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | The History of Sera Nadu சேர நாடு வசலாறு
உதிய சேரலாதன்
சேர நாடாண்ட இவனுடைய மூத்த மகன் இமயவரம்பன் பற்றியும் இரண்டாவது மகன் பல்யானைச் சேல்கெழுகுட்டுவன் பற்றிப் பதிற்றுப்பத்தில் இரண்டாவது மூன்றாவது 10 களில் கூறப்பட்டுள்ளது. முதல் 10 கிடைக்காததால் ஒருவேளை அதில் இவன் வரலாறு கூறப்பட்டிருக்கும் என்பது அறிஞர் கருத்து.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட பெருமையாளன் இவன். "குமரக்கடவுள் கடலில் கொண்டுபோய் சூரபதுமனை வீழ்த்தியது போல, கடலில் படைகொண்டு சென்று கடற் கொள்ளையர்களை வீழ்த்தியவன் நெடுஞ்சேரலாதன் என்று புலவர்கள் பாடியுள்ளனர். இது மட்டுமா? வடக்கே படையெடுத்துப் போய் அவர்களின் ஆணவ மடக்கி வென்று இமயத்தில் வில் பொறித்த இமயவரம்பன் என்று விருது பெயர் பெற்றவன் இவன்.
கரிகாலனின் மகன் மணிக்கிள்ளியின் மகள் நற்சோணையை இவனுடைய அரசமாதேவியானாள். வேள் ஆவிக்கோ என்பானின் மூத்த மகள் வேண்மாள் இவனுடைய இரண்டாம் மனைவி. முதலாமவளுக்கு செங்குட்டுவன், இளங்கோ வடிகள் ஆகிய இரண்டு பிள்ளைகள். இரண்டாமவளுக்கு களங்காங்கண்ணி, நார்முடிச்சேரல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற இரு பிள்ளைகள். முரஞ்சியூர் முடிநாகனாரிடம் கல்வி பயின்றவன் நெடுஞ்சேரலாதன். புலவர் பெருமக்கள் மாமூலனாரும் கண்ணனார் என்பாரும் கொடைக்குணம் மிகுந்த இவனுடைய ஆட்சி திரம் பற்றி அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.
பல்யானைச் சேல்கெழுகுட்டுவன்
பலமிக்க யானை படை கொண்டு இருந்ததால் பல்யானை என்று சிறப்போடு பெயர் குறிப்பிடப்பட்ட இவன் 25 ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தியவன். நீதி தவறாமல் அரசோச்சிய சேல்கெழுகுட்டுவனுக்கு நாளடைவில் பதவி மோகம் நீங்கித் துறவின் மேல் பற்று உண்டாயிற்று. தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு துறவு பூண்டு காட்டிற்கு சென்றான். இது பற்றி அவன் காலப் புலவரான கோதமனார் என்பார் தம்முடைய பாடலில் தெளிவுரை குறிப்பிட்டிருக்கிறார்.
சேரமான் குட்டுவன் கோதை
இம்மன்னன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் மகன் எனப்படுகிறது. மதுரைக் குமரனார் என்ற புலவரால் பாடப்பட்ட இவன் காலத்தில் நாடு அமைதியும் வளமும் உடையதாக திகழ்ந்தது. இவனுடைய காலம் கிபி 80 முதல் கிபி 130 வரை என்று கூறுவர்.
இளங்காய் கண்ணி நார்முடிச்சேரல்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவனுடைய இரண்டாம் மனைவியின் மகள் வேண்மாள் என்பவளுக்கும் பிறந்தவன் இவன். இவனுடைய ஆட்சிக் காலத்தில் சேர நாட்டில் வில், வேல், வாள் பயிற்சிக்கெல்லாம் பள்ளிகள் அமைந்திருந்தன. அதுபோல குதிரையேற்றம், யானை ஏற்றம் எல்லாம் கற்பிக்க பயிற்சியாளர்கள் அரசரால் நியமிக்கப்பட்ட இருந்தார்கள். மக்கள் மகிழ ஆட்சி புரிந்த இவனைப் போற்றி காப்பியனார் கல்லாடர் ஆகிய புலவர் பெருமக்கள் பாடியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment