களப்பிரர்
களப்பிரர் என்றொரு குலத்தினர் தகி பி மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மேல் படையெடுத்தார்கள்.
தமிழர்கள் அல்லாத, அவர்கள் மக்களை கொன்று குவித்து பொருட்களை சூறையாடினார்கள். சோழர்களரையும் பாண்டியரையும் ஒடுங்கச்செய்து சில காலம் அரசாண்டு வந்தார்கள்.
அவர்கள் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர்? எத்தனை மன்னர்கள் என்ன சாதித்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள் என்ற விவரங்களுக்கெல்லாம் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
அவர்கள் கால செப்பேடுகளோ கல்வெட்டுகளோ எதுவுமே காணப்படவில்லை.
தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகியவைகளில் எதுவுமே அவர்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை. எங்கும் கால்பதித்த களப்பிரர்கள் கொடுங்கோலர்கள் என்று தெரிகிறது.
தமிழுக்கு தாழ்வு
தொடக்கத்தில் பெளத்தர்களாகவும் பின்னர் சமணர்களாகவும் சமய சார்புற்றிருந்த களப்பிரர் காலத்தில் தமிழ் தாழ்ந்தது. பிராகிருத மொழியும் பாலி மொழியும் வளரலாயிற்று.
தமிழ் கலைகளும், நாகரிகமும். பண்பாடும் அவர்களால் பெரும் சோதனைக்குள்ளாயின.
மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் அவர்களாலேயே இருள் மயமாகியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment