Name of the Ancient Tamil books | The Borders of the Sera nadu | A short history of Sera nadu | Tamil Sera Dynasty | Kumari kandam
திருக்குறள்
கிமு முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இது உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்களாலான இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைக் கொண்டது ஆகும்.
எட்டுத்தொகை
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை அகநானூறு, புறநானூறு ஆகியவைகளே எட்டுத்தொகை எனப்படும்.
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவைகளை பத்துப்பாட்டு எனப்படும்.
இவற்றில் நற்றிணை குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் பற்றியவை. அதாவது இன்பத்தைப் பற்றியவை.
பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறப்பொருள் குறித்தவை. அதாவது அறம் பொருள், வீடு பற்றி கூறுவது.
பரிபாடல் புறமும் பற்றியது
பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு இரண்டும் அகப்பொருள் பற்றியவை ஆகும். மற்றவை எட்டும் புறப்பொருள் குறித்தவை.
இந்த நூல்களில் எல்லாம் உள்ள இனிக்கும் தமிழ் பாடல்கள் யாவும் வெவ்வேறு காலத்தில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் சேர இளவரசரான இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. மற்றொன்றான மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது.
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் சங்கமருவிய நூல்கள் என்கிறார்கள் தமிழறிஞர்கள்.
குமரிக்கண்டம்
பழங்கால தமிழகம் இன்றுள்ளது போல் இல்லை. தெற்கு இந்துமாக்கடலில் இன்னும் விரிந்து பரந்து இருந்தது. அதில் மிகப்பெரிய குமரிமலை இருந்தது. குமரி ஆறு ஓடிக்கொண்டிருந்தது குமரிக்கண்டம் என்ற பெயர் விளங்கியது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை இருந்தது.
அடிக்கடி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டத்தில் பெரும் பகுதி கடலில் மூழ்கிவிட்டது. எஞ்சிய நிலப்பகுதியே இப்போது தமிழ்நாடு என்று வழங்கப்படுகிறது.
இவ்வளவு அருமை பெருமைமிக்க "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயரிய நோக்கம் தழைத்து செழித்த பண்டைத் தமிழகம் பற்றிப் பாரே புகழ் அந்நாளில் அரசாண்ட சேர சோழ பாண்டிய அரசர்கள் அரசுகள் பற்றி சிறிது காண்போம்.
சேரர்கள் Serar
தக்காணம், தென்னிந்திய ஆகிய இந்த இரண்டும் தீபகற்ப இந்தியாவில் அடங்கும். இதில் கிருஷ்ணா நதிக்குத் அருகில் உள்ள பகுதியை "தென்னிந்தியா" எனப்பட்டது.
மிகப் பழங்காலத்திலேயே இந்த தென்னிந்தியா நாகரிக மேம்பாடு உடையதாக திகழ்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட இதனுடைய சிறந்த பகுதியை தமிழகம் என குறிப்பிடப்படும். தமிழகத்தில் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் சிறப்புடன் ஆண்டுவந்தனர். இதை வரலாறும் இலக்கியங்களும் நமக்கு தெரிவிக்கின்றன. புதை பொருட்கள் நாணயங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவைகளும் பண்டைத் தமிழகத்தில் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஆனால் சேர நாடு பற்றிய முழுமையான வரலாறு எந்த வகையில் நமக்கு கிடைக்கவில்லை. ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர நாடு என்பது மேலைக் கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே விரிந்து கிடக்கிறது. அதாவது இப்போதுள்ள கேரள மாநிலத்தில் பெரும் பகுதியை சேரநாடு, மேற்கு தொடர்ச்சி மலை சேர நாட்டை சோழ பாண்டிய நாடுகளினின்று பிரிந்து விளங்கச் செய்தது.
இந்நாட்டை சேரர் அல்லது சேரலர் என்னும் அரச பரம்பரையினர் நீண்ட நெடுங்காலம் ஆண்டு வந்தார்கள். இவர்கள் பிற்காலத்தில் கேரளர் ஆயினர் என்கிறார்கள் கற்றறிவாளர்கள்.
பிற்காலத்தவர்களும் தம்மை வேணாட்டு அடிகள்என்று கூறி கொண்டவர்களுமான திருவாங்கூர் மன்னர்கள் கால கல்வெட்டுக்கள் இதை மெய்ப்பிப்பதாக கேரளமும் தமிழகத்தின் ஒரு பகுதியே என எடுத்துக் காட்டுவதாக உள்ளன. திருவாங்கூர் உள்ள பகுதியை எவனர்கள் ஆய் நாடு என்றே குறிப்பிட்டுள்ளனர். தமிழ் வேளிர்களில் "ஆய்" என்பானும் ஒருவன் அல்லவா?
சேர மன்னர்களின் மிகச் சிறந்தவனாகப் புகழ்பெற்ற செங்குட்டுவன் கற்பு தெய்வமாம் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான். அது தொடர்பான விழாவிற்கு இலங்கை மன்னனான கயவாகு என்கிற அவன் நண்பனும் வந்து கலந்து கொண்டான்.
கயவாகுவின் காலம் கிபி 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. அதை வைத்து சேர மன்னர்களின் காலம் இரண்டாம் நூற்றாண்டு தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. சேரர் குடியில் உதியன் மரபினர், இரும்பொறை மரபினர் என இரு பிரிவினர் இருந்தார்கள். உதியன் மரபினர் வஞ்சியை தலைநகராகக்கொண்டும், இரும்பொறை மரபினர் தொண்டி, மாந்தை ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு நாடாண்டார்கள்.
No comments:
Post a Comment