Parts of the Sera Nadu | சேர நாட்டு பகுதிகள் | Dynasty of the Serar சேர மன்னர்களின் வம்ச வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 14, 2020

Parts of the Sera Nadu | சேர நாட்டு பகுதிகள் | Dynasty of the Serar சேர மன்னர்களின் வம்ச வரலாறு

Parts of the Sera Nadu | சேர நாட்டு பகுதிகள் | Dynasty of the Serar சேர மன்னர்களின் வம்ச வரலாறு



பண்டைய சேர நாடு பல்வேறு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இப்போது உள்ள திருவனந்தபுரம் மாவட்டமும் கொல்லம் மாவட்டத்தின் சில பகுதிகளும் குட்டநாடு  எனப்பட்டது.  

எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களும் மாவட்டத்தின் சில பகுதிகளும் குட்ட நாடு எனப்பட்டது.  

திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களோடு கோழிக்கோடு மாவட்டத்தின் ஒரு பகுதியும் சேர்ந்தது குட்ட நாடு எனக் குறிப்பிடப்பட்டது. 

கண்ணணூர் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் கோழிக்கோடு மாவட்டத்தின் பெரும் பகுதியும் இணைந்த பகுதி பூமி நாடு என்பதாக இருந்தது. அதற்கு கிழக்கே  வளநாடு  கூடலூர் ஆகியவை சேர்ந்த கற்க நாடாக இருந்தது. 

இவை தவிர.... 

  • மங்கலாபுரம் (மங்களூர்)
  • குளத்தநாடு (சிரக்கல் பழையங்காடி)
  • வள்ளுவநாடு (தெற்கு நீலகிரி)
  • வெங்கா நாடு (கொல்லங்கோடு)
  • நாஞ்சில் நாடு (நாகர்கோயில்)
  • எரநாடு (கோழிக்கோடு)
  • ஒட்டநாடு (காயாங்குளம்)

ஆகிய பிரிவுகளும் சேர்ந்து 12 உண்டு. 

பூமி நாட்டை ஆண்டு வந்த சேரர்கள் பூமியர் என்றும்,  குட்ட நாடாண்ட சேரர்கள் குட்டுவர் என்றும்,  குட நாட்டை ஆண்ட சேரர்கள் குடவர் எனவும் குறிப்பிடப்பட்டார்கள். 

நம்பூதிரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாண்வர்கள் "பெருமாள்" என்ற பட்டத்தோடு இருந்தார்கள்.  சோழர்களின் புலிக்கொடியும், பாண்டியர்களின் மீன்கொடியும் இமயத்தின் முடியில் ஏற்றப்பட்டது உண்டு. ஆனால் முதன் முதலில் இமயத்தின் முடியில் விற்கொடி பறக்க விட்ட பெருமை சேரர்களுடையதாகும். 

பழைய குறிப்புகள் 

சேர நாட்டை சேர்ந்த கொல்லி மலை, ஏழில் மலை, குதிரை மலை,  பொதிய மலை, நாஞ்சில் மலை, அயிரை மலை, நேரி மலை எல்லாம் புலவர் பாடும் புகழுடையோர் களாக இருந்தன. முருகன் கடவுள் வள்ளியை மணந்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடப்படும் வள்ளிமலை ஒரு காலத்தில் சேர நாட்டைச் சேர்ந்ததாக இருந்திருக்கிறது. 

கிமு 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மகாபாரதத்திலேயே சேரநாடு சிறப்பித்துச் சொல்லப் பட்டிருக்கிறது.  மெகஸ்தனிஸ் டாலமி பிளினி போன்றோரும் கிரேக்கர்களும் யவனர்களும் சேரர்களை சேரர்கள் என்றும்  சேரமானகள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். 

கிறிஸ்து பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புகழ்பெற்ற பழமை உடையதான  சேரர் பரம்பரை பற்றிய வரலாற்று குறிப்புகள் அகநாநூறிலும், லத்தின்  நூல்களிலும் மட்டுமன்றி இருக்கும் வேதத்திலும் கூட காணப்படுகின்றன. 

முசிறி என்ற துறைமுகத்தில் வந்திறங்கி எகிப்தியர்களும் ஐரோப்பியர்களும் விலை உயர்ந்த பொருட்களை இங்கிருந்து வாங்கிச் சென்றார்கள். கொண்டுவந்துவிற்றார்கள். பண்டமாற்று செய்துகொண்டார்கள் என்பதற்கெல்லாம் வரலாறு இருக்கிறது.  

சேர மன்னர்களுக்கு வானவரம்பன்,  வானவன்,  குட்டுவன், குடக்கோ, பொறையன்,  இரும்பொறை கடுங்கோ, கோதை  என்கிற சிறப்பு பெயர்கள் எல்லாம் இருந்ததாக சங்க நூல்களிலே காணக்கிடைக்கின்றன.  

சேரநாடு 140 யோசனை பரப்பளவுள்ள தாக இருந்தது.  சேர நாட்டுக் கடற்கரை 160 கிலோ மீட்டர் வரை நீண்டு பரவியிருக்கிறது. கார்வார் முனையிலிருந்து நேத்ராவதி ஆறு கடலில் விழும் பகுதி வரையிலான கடற்கரை கடற்கடம்பு என்று குறிப்பிடப்பட்டது.  சேர நாட்டின் மேலைக் கடற்கரையில் காந்தளூர் என்ற துறைமுகம் இருந்தது.

சேரநாட்டு அரசர்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்திய தாக தெரிகிறது.  கொல்லி காவலன், கோழி வேந்தன் கொல்லிநகர் இறைவன் என்றெல்லாம் இவன் குறிப்பிடப்பட்டான். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாண்ட சேர மன்னர்களில் சேரமான் பெருமாள் நாயனார் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்திருக்கிறார்.  சேர சோழ பாண்டியர்களிடையே பெண் கொடுப்பதும் பெண் கொள்வதும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. 

உம்பற்காடு

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை சேரர் தலைநகரான வஞ்சி பெருமையோடு விளங்கியிருக்கிறது.  சேரநாட்டில் "அகபா" எனும் பெயர் பெற்ற கோட்டை ஒன்று இருந்திருக்கிறது.  சேரன் வஞ்சி எனப்படும் திருவஞ்சைக் களத்தில் இலந்திகை என்றோர் ஒரு தடாகம் இருந்தது.  அதன் கரையில் அழகுற அமைக்கப்பட்டு இருந்த வெள்ளி மாடத்தில் அரச மரபினர் சென்று தங்குவது வழக்கம். 

சேர நாட்டுக்கு சொந்தமாயிருந்த ஆனை மலை காடு "உம்பற்கடு" எனப்பட்டது. உம்பல் என்றால் யானை.  யானைகள் மிகுந்திருந்த காடு ஆதலால் இப்பெயர் வந்தது.  

இப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள கரூர் பலமுறை சேரர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்ததுண்டு. வான நூல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று அக்காலத்தில் இங்கு இருந்திருக்கிறது.  கரூரில் கோச்செங்கட் சோழன் மகன் நல்லிடிக்கோனுக்கும் சேரமன்னன் ஆட்டான் அத்திக்கும் ஒரு முறை நடந்த போரில் சேரன் வென்றிருக்கிறான். 

கீராங்கனூர் என்று இரு குறிப்பிடப்படும் இடம் அன்று கொடுங்கோளூர் எனப்பட்டது.  சேக்கிழாரால் புகழ்ந்து பாடப்பட்ட இந்த ஊரில்தான் சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வம் கண்ணகி கோயில் எழுப்பினான். 

இப்போது உள்ள தர்மபுரி அப்போது தகடூர் என்று குறிப்பிடப்பட்டது.  தகடூரையும் கொல்லி மலையையும் சேர நாட்டுடன் இணைத்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.  இந்த வெற்றி பற்றி அரிசில் கிழார் பாடிய நூலே தகடூர் யாத்திரை. 

பழைய கொல்லத்தை கடல் கொண்ட பின் கிபி ஆயிரத்து 825 ல் புதிய கொல்லம் கட்டப்பட்டது.  மூன்றாம் சேரமான் பெருமாள் ஆட்சி செய்த போதுதான் சேர நாட்டில் முகமதியர்களும், கிறிஸ்தவர்களும் பெளத்தர்களும், பாரசீகர்களும்  பசியுடன் வந்து குடியேறினர்.

No comments:

Post a Comment