சங்ககாலப் பாண்டிய மன்னர்கள்
சங்க கால பாண்டிய மன்னர் தம் பெயர் விபரங்கள் கிடைக்கும் அளவுக்கு மன்னர்கள் பற்றிய முழு விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இதுபற்றி கற்றறி வாளர் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் சிலர் தமிழ் புலமை மிக்கவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்று பார்த்தோம்.
பாண்டிய நாட்டின் வட எல்லையாக இருந்த ஒல்லையூரைச் சோழ மன்னர்கள் கைப்பற்றினர். போரிட்டு வென்று அதை மீட்டு ஒல்லையூர் தந்த என்ற அடைமொழியோடு சிறப்பித்துக் கூறப்படுபவன் பூதப்பாண்டியன். சிறந்த வீரனாக தமிழில் புலமை பெற்றவராக இருந்த அவன் இவன் இவன் மனைவி பூதப்பாண்டியன் தேவையும் புலமை பெற்றவர்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எழுதிய உயிர் உயர்தமிழ் பாக்கள் புறநானூற்றிலும் அகநானூற்றிலும் காணப்படுகின்றன.
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை பற்றிய போதுமான விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவன் ஒரு சிறந்த தமிழ்ப் புலவன் என்று அறியமுடிகிறது. இவனுடைய சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன அப்பாடல்கள்.
இவனெழுதிய இனிய தமிழ் பாடல்கள் ஒன்று பரிபாடலில் காணப்படுகிறது. நற்றிணை இரண்டு பாக்கள் காணப்படுகின்றன. ஒரு பாட்டு புறநானூற்றில் உள்ளது.
பாண்டிய நாட்டிலே பிறந்து, கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்குமளவுக்கு அவரோடு நட்பு கொண்டிருந்தவர் பெரும் புலவர் பிசிராந்தையார். அவர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் அறிவுடைநம்பி பெயருக்கு ஏற்ப பைந்தமிழ் புலமைப் பெற்றவனாக இருந்தான் இவன்.
இவனுடைய இன்பத்தமிழ் பாக்கள் புறநானூற்றிலும் அகநானூற்றிலும் நற்றிணை என்னும் குறுந்தொகையிலும் காணப்படுகின்றன. நீதிநெறி தவறாது அவ்வப்போது மாறுவேடம் அணிந்து பாண்டிய மன்னர்கள் நகர் வலம் வந்தது உண்டு. இதற்கு பொற்கைப்பாண்டியன் பற்றிய வரலாறு தக்க சான்றாகும்.
நெடுஞ்செழியன்
இடைவிடாது தொல்லை கொடுத்துவந்த ஆரியர்களின் கொட்டமடக்கியதாலேயே "ஆரியப்படை கடந்த" என்ற சிறப்போடு குறிப்பிடப்படுபவன் நெடுஞ்செழியன்.
ஆராயாது அளித்த தீர்ப்பால் கோவலன் கொலையுறக் காரணமாகி உண்மையை உணர்ந்தபின் அரியணையில் இருந்து "யானோ அரசன் யானே கள்வன்" எனக் கூறி கீழே விழுந்து உயிர் துறந்த பெருமையாளன் இவனே.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அருந்தமிழ் புலமையாளன். அதை இவனது புறநானூற்றுப் பாடலே உணர்த்தும்.
இதோ அந்தப் பாடல்.....
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றேபிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்சிறப்பின் பாலால் தாயும் மனந் திரியும்ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்மூத்தோன் வருக என்னாது அவருள்அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்கீழ்ப்பால் ஒருவன் கற்பின்மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பாண்டிய மன்னனும் பாட்டு தமிழில் பண்பட்டவனேயாவான்.
பாண்டிய மன்னர்களின் வீரத்தாலும் விவேகத்தாலும் இணையற்றுத் திகழ்ந்த சிறப்பினன் இவன்.
- நக்கீரர்
- அள்ளூர் நன்முல்லையார்
- ஆலங்குடி வங்கனார்
- பரணர்
- ஆலம்பேரி சாத்தனார்
- இடைக்குன்றூர் கிழார்
- குடபுலவியனார்
- மாங்குடி மருதனார்
- மருதன் இளநாகனார்
முதலாக புலவர் பெருமக்கள் பலரும் போற்றிப் பாடப்பட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
இளமையிலேயே அரியணை ஏறிய இவன்மேல் சேரனும் சோழனும் ஐந்து சிற்றரசர்களும் போர் தொடுத்தனர். அவர்களை வெல்லாவிடின் புலவர்கள் என்னைப் பாடாதொழியட்டும் என வஞ்சினம் கூறி எதிர்த்து நின்றான் இவன்.
தலையாலங்கானத்தில் நடந்த அப்போரில் சேர சோழரையும், சிற்றரசர் ஐவரையும் முறியடித்து சினேகாவையும் ஒருசேர முறியடித்து வெற்றி முரசங்களைக் கைப்பற்றிய பெருமை கொண்டான். இதனாலேயே "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்" எனக் குறிப்பிடப்பட்டான்.
படைத்திறனும், கொடைக்குணமும், தமிழ் புலமையும் மிகப் பெற்றிருந்த இவனுடைய புறநானூற்றுப் பாடல் (72) ஒன்றே போதும். இவனது எழுத்தாற்றலின் ஏற்றம் உணர!
Sangakala Pandiya Mannargal சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் | The History of King of Pandiyans பாண்டிய மன்னர்களின் வரலாறு
No comments:
Post a Comment