Sangathamizh சங்கத்தமிழ் | பாண்டியர்களின் வரலாறு The History of Pandiyargal
முதலாவது தமிழ் சங்கத்தை தென் மதுரையில் நிறுவினார்கள் பாண்டிய மன்னர்கள். கடல்கோளால் மதுரை அழிய நேர்ந்தது. பிறகு தமது தலைநகரை கபாடபுரத்தில் மாற்றிக் கொண்டு அவர்கள் அங்கே இரண்டாவது தமிழ் சங்கத்தை இடைச்சங்க அமைத்தார்கள். எழிலார் தமிழன் ஏற்றத்திற்கு துணை நின்றார்கள்.
பின்னர் கபாட புரமும் கடலின் பசிக் இலக்காகியது. மதுரைக்கு மாற்றப்பட்டது. பாண்டியர்களின் தலைநகரம் கடைச்சங்கம் பெரும் புலவர் நக்கீரர் தலைமையில் 49 நற்றமிழ்ப் புலவர் பெருமக்களோடு சிறப்பாக செயல்படலாயிற்று.
இன்று நாம் காணும் இலக்கியம் எல்லாம் பெரும்பாலும் இந்த கடைச் சங்கப் புலவர்களில் கைவண்ணங்களேயாகும்.
பாண்டிய மன்னர்களில் பெரும்பாலோர் வீரதீரம் மிக்கவர்களாக மட்டுமல்லாமல் முத்தமிழ் வித்தகர் களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். புலவர் பாடும் புகழ் உடையவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
பாண்டிய நாட்டு ஆட்சிக் கட்டிலில் கொலுவிருந்தோர் தம் முழு வரலாறும் நமக்குத் தெளிவாக கிடைக்கவில்லை. இதன் காரணம், அடிக்கடி கடல்கோளுக்கு ஆளானதாககூட இருக்கலாம்.
காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாகப் பாண்டியன் மன்னர்கள் 89 பேர். முதலாவது தமிழ் சங்கத்தின் புரவலர்களாக இருந்தார்கள். அகத்தியம் ஒன்று மட்டுமே இலக்கண நூலாக இருந்த அந்த நாளில் அவர்களில் 7 மன்னர்கள் தானே பெரும் துணைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கபாட புரத்தில் அமைந்த இடைச் சங்கத்தில் வெண்டேர்ச் செழியனிலிருந்து முடத்திருமாறன் வரை 59 பாண்டிய மன்னர்கள் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஐவர் அருந்தமிழ் புலவர்களாக இருந்திருக்கிறார்கள்.
- அகத்தியம்,
- தொல்காப்பியம்,
- பூதபுராணம்,
- மாபுராணம்,
- இசை நுணுக்கம்
ஆகிய இலக்கண நூல்கள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன.
தொல்காப்பியமும் அகத்தியமும் இலக்கண நூலாக வழங்கப்பட்ட கடைச்சங்கம் பாண்டியன் முடத்திருமாறனால் நிறுவப்பட்டது. இதன் கடைசி காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர் கானப்பேர் கடந்த உக்கிரப்பெருவழுதியாவான். இடைப்பட்ட காலத்தில் அரசு கட்டிலேறிய பாண்டிய மன்னர்கள் மூவர் முத்தமிழ் புலமை பெற்றிருந்தார்கள்.
Sangathamizh சங்கத்தமிழ் | பாண்டியர்களின் வரலாறு The History of Pandiyargal
No comments:
Post a Comment