Senguttuvan செங்குட்டுவன் | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 20, 2020

Senguttuvan செங்குட்டுவன் | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு

Senguttuvan செங்குட்டுவன் | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு



செங்குட்டுவன் 

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

 நெடுஞ்சேரலாதன் மூத்த மகனான இவன் இமய வரம்பன் மாண்ட பிறகு பட்டத்துக்கு வந்தவன். இவனுடைய தம்பியே  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தந்தை இளங்கோவடிகள். அவர் கிபி 100 முதல் 155 வரை இவர் ஆட்சி நடத்தியதாக தெரிகிறது. 

வடக்கே கங்கை கரையில் ஆரிய அரசர்களை வென்று பின்னர் கொடுங்கையூரில் கொங்கு நாட்டு மன்னர்களை வென்று கடற் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி வெற்றி மேல் வெற்றி குறித்தவன் இவன். 

ஒரு முறை மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் அங்கே சாத்தனார் என்ற பெரும்புலவர் மூலம் கண்ணகி பற்றிய செய்தி அறிந்தான். பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு சிலை எடுக்க உறுதி கொண்டான். வடதிசை சென்று தமிழரசர் தரம் குறித்து பேசிய கனக விசயன் என்ற ஆரிய மன்னர்களை வெற்றி கண்டான். கண்ணகிக்கு சிலை எடுக்க அவர்களையே இமயத்திலிருந்து கல் சுமந்து வரும்படி செய்தான். வஞ்சியை  அடுத்த கங்கையில் நீராட்டி அடுத்த கொடுங்கோளூரில் பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான். இதற்கான விழாவில் தான் இலங்கை மன்னன் கயவாகு வந்து பங்கேற்றான்.

கனக விசயரும் இவ்விழாவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.  கடல் கொள்ளையர்களை பிரச்சினை செய்ததால் இவன் கடல் பிறகோட்டிய என்ற அடைமொழிக்கு உரியவன் ஆனான்.  நாடெங்கும் தமிழ் தழைத்தோங்க புலவர்களையும் பாணர்களையும் ஊக்குவித்தவன் இவன். தன்னுடைய மகன் குட்டுவன் சேரல் தமிழ்ப் பயில தக்கப் புலவர்களை நியமித்திருந்தான்.  வீரன் மிக்கவனான செங்குட்டுவனின் ஆட்சித் திறன் பற்றி சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் நாம் பல விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் 

புலவர் கபிலரால் பாடப்பெற்ற பெருமையாளனான இவன் சேர நாட்டை 25 ஆண்டுகள் செம்மையுற ஆண்டிருக்கிறான்.  வேள் ஆவிக்கோவின் இரண்டாவது மகளான இவனுடைய மனைவி கடுங்கோ வாழியாதன் காலத்தில் கொடுமணம் மதர் ஆகிய ஊர்கள் நன்முத்து விளையாடி கூடியவர்களாக இருந்திருக்கின்றன. என்ன காரணத்தினாலோ பிற்காலத்தில் அவை அழிந்துபோயின. 

சோழர்களோடும் பாண்டியர்களோடும் போரிட்டு வெற்றி பல கண்ட இவனை நட்பு முறையில் காண வந்த ஆரிய மன்னன் பிரகத்தனனுக்கு தமிழ் பண்பாடு உணர்த்த கபிலர் பாடியதே  "குறிஞ்சிப்பாட்டு"

பாண்டிய மன்னனோடு சிக்கற்பள்ளி என்ற இடத்தில் நடந்த பெரும் போரில் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு போனான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

No comments:

Post a Comment