Simple stunning description of ancient Tamil Nadu - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 13, 2020

Simple stunning description of ancient Tamil Nadu

Simple stunning  description of ancient Tamil Nadu - பண்டைய தமிழ் நாட்டை பற்றிய அசத்தலான எளிய விளக்கம் 



தமிழ்நாடு 

நம்முடைய தமிழ்நாடு மிகமிக பழம்பெருமையுடைய நாடு.  வடக்கே வேங்கடமும் தெற்கே குமரி முனையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன.  இந்த நான்கு எல்லைகளுக்கும் இடைப்பட்ட தமிழகம் சேரர் சோழர் பாண்டியர் என்ற முடியுடை மன்னர் மூவராலும் சிற்றரசர்கள் பலராலும் ஆளப்பட்டு வந்தது.  

சோழநாட்டின் வடக்கே பெண்ணையாறு பாயப்பெற்ற இடம் மலையமான்கள் ஆட்சியில் இருந்தது. அதற்கு வடக்கே இருந்த ஓய்மா நாடும்,  தொண்டை நாடு தொண்டைமான்கள் ஆட்சியில் இருந்தது.  கொங்கு நாட்டின் தகடூர் பகுதியை அதியமான்கள் ஆண்டார்கள். பழனி மலைப்பகுதியை  ப பின்னாளில் பேகனும் அவன் முனஙனோரும் பின்னோரும் ஆண்டனர். 

அந்நாளில் உடுமலைப்பேட்டை வட்டத்தை குமணனும் அவன் பரம்பரையும் ஆண்டது. வரது பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள மலைப்பகுதியை பாரி என்பவன் ஆண்டு வந்தான்.  சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைப் பகுதியை வல்வில் ஓரி, நள்ளி ஆகியோர் ஆண்டு வந்தார்கள்.   நாஞ்சில் நாட்டுப் பகுதியை வள்ளுவரின் மரபினர் ஆண்டு வந்தார்கள். 

இவர்களுக்கெல்லாம் சிற்றரசர்கள்.  சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு தான் முடி இருந்ததே அன்றி சிற்றரசர்களுக்கு முடி இல்லை.  சிற்றரசர்கள் எல்லாருமே பேரரசுக்கு அடங்கி இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. அவ்வப்போது மாறுபட்டும் இருந்திருக்கின்றனர்.  ஆனால் அன்னை தமிழை வளர்ப்பதில் எல்லாரும் அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.  

அவர்களால் அன்று அன்பு காட்டி அரவணைக்க புலவர்களும் பாணர்களும் கூத்தர்களும்களும் இயற்றியவைகளே சங்கப் பாடல்கள். 

தமிழ் நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவதில் புறநானூறு முதலானவைகளை இன்று பெரிதும் உதவுகின்றன.  இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன.  அவைகளில் பல அருமையான நூற்கள் காலத்தால் அழிந்து போயின.

தொல்காப்பியம்

இன்றுள்ள தமிழ் நூல்களில் தொல்காப்பியம் என்கிற ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உடைய இலக்கண நூலே காலத்தால் முற்பட்டதாகும்.  ஆராய்ச்சியாளர்கள் அதன் காலம் கிமு 300 என்கிறார்கள்.  பழந்தமிழகத்தில் எல்லைகள் அதனால்தான் முதலில் அறியப்பட்டன.  மூவேந்தர்களைப் பற்றிய குறிப்புகளும் அதில் உண்டு.  

எழுத்துக்கள்,  அவற்றான சொற்கள்.  அவற்றால் உருவாகும் தொடர்கள், அவற்றால் ஏற்படும் செய்யுட்கள்,  அவற்றால் தொகுக்கப்படும் நூல்கள் ஆகியவை மட்டுமல்ல அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், என்னும் வாழ்க்கை முறைகளும் தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. 

புறநானூறு முதல் மணிமேகலை முடிய உள்ள சங்க நூல்கள் கிபி 300 க்கும் மேற்பட்டவை என்றே கூறலாம். 

தொல்காப்பியர் காலம் கிமு 300 என்றால் சங்க காலம் ஏறத்தாழ கிமு 300 முதல் 500 வரை அரை நூற்றாண்டு காலம் என்றே கூறலாம்.  இப்படி இன்பத்தமிழ் பாடிய இணையற்ற புலவர் பெருமக்கள் அவ்வப்போது அரசர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு பெருமை பெற்றிருந்தார்கள்.  அரசாட்சியை கவனிக்க மூவேந்தர்களுக்கு அமைச்சர்கள் மட்டுமல்ல,  ஐம்பெருங்குழு,  எண்பேராயம் என்ற இரு அமைப்புகளும் இருந்தன.

அமைச்சர்,  சேனைத்தலைவர்,  சமயத் தலைவர்,  தூதுவர்,  சாரணர் ஆகிய ஐவரும் இருந்ததே ஐம்பெருங்குழு.  

கரணத்தியல்வர்,  அவர் சமயத் தலைவர், நகரமாந்தர், படைத்தலைவ,ர் யானை குதிரை வீரர்களும் கடைக்காப்பாளர் என்று எண்மரும்ம் அங்கம் வகித்ததே எண்பேராயம். 

இவர்கள் தவிர ஆசான்,  பெருங்கணி,  அறங்களத்ந்தனர் என்பாரும் அவ்வப்போது  அரசை நடத்துவதில் ஆட்சியாளர்களுக்கு உதவி வந்தனர். 

குடவோலை முறை 

சிற்றூர், பேரூர், நாடு, கூற்றம் என ஊர்கள் பிரிக்கப்பட்டிருந்தன, 

சிற்றூர்களில் ஊராட்சி மன்றங்கள் இருந்தன, இம்மன்றத்தில் அங்கம் வகிப்போர் ஊரவையினரால் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 

ஊர் வழக்குகளை தீர்த்தல்,  நீர்ப்பாசன வசதி அளித்தல், வரி வசூலித்தல் வறட்சி அல்லது வெள்ளம் போன்ற காலங்களில் வாட்டமின்றி ஊர் மக்களைக் காத்தல் முதலான பல பணிகள் ஊரவையினரால் ஆற்றப்பட்டன.  ஊராட்சி நடந்த இடம் மன்றம், பொதியில், அம்பலம் என்று குறிப்பிடப்பட்டது.

கடல் வாணிகம் 

அந்த காலத்தில் கண்ணை இமை காப்பதுபோல் மக்களை மன்னர்கள் காத்தார்கள்.  மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற நிலை இருந்தது. உள்நாட்டு வெளிநாட்டு வாணிகம் சிறந்திருந்தது.  பல் தொழில் வளமும் திகழ்ந்தது.  அயல்நாட்டு நல்லுறவு காக்கப்பட்டது.  கீழை நாடுகளோடும் மேலை நாடுகளோடும் கடல் வாணிகம் சிறந்திருந்தது. 

ரோமரும் கிரேக்கரும் யவனரும்  வணிகத்துக்காக நம் நாட்டை நாடி வந்தனர். முசிறி, தொண்டி, கொற்கை,  புகார் ஆகிய நம் நாட்டுத் துறைமுகங்களில் எப்போதும் பிற நாட்டு கப்பல் நின்றன. 

பெரிதும் பண்டமாற்று மூலமே வாணிகம்ம் நடந்தது.  ரோமாபுரி ராணி மணிமுடியில் நம் நாட்டு முத்து ஒளி வீசியது.  புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படுவது போல யவனர் பல மொழி மக்களும் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர்.  

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் காத்த தமிழறிஞர்கள் ரசிகர்களால் பெரிதும் போற்றி மதிக்கப்பட்டார்கள்.  பெண்களும்  புலமைப் பெற்றிருந்தனர். அரசர்களும் கூட இணையற்ற வீரர்களாக மட்டுமின்றி தமிழ்ப் புலமை உடையவர் களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நடுகல் 

போரில் வீரமரணமடைந்தோர்  நினைவாக அவரது பெயர்,  வீர முதலான விவரங்களுடன் கல் நடுதல் வழக்கமாக இருந்தது.  அரசாலும் மக்களால் போற்றப்பட்டது.  வழிபாடும் நடத்தப்பட்டது.  

போர் புரிவது கூட வெட்சித்திணை,  கரந்தை,  வஞ்சி,  காஞ்சி,  உழிஞைத் திணை நொச்சித் திணை,  தும்பைத் திணை,  வாகைத் திணை என பல வகை பிரிக்கப்பட்டிருந்தது.  அந்தப் போரில் ஈடுபடும் வீரர்கள் அவ்வத் திணைக்குரிய பூவை அல்லது பூமாலை சூடிக் கொண்டு கலந்து கொள்வது மரபாக இருந்தது.  

பகைவர்கள் கால்நடைகளைக் கவர்தல்,  அதை எதிர்த்து தவிர்த்தல்,  பகை நாட்டின் மீது படையெடுத்தல் அந் நாட்டு மன்னன் எதிர்த்து நிற்றல் பகைவனது கோட்டையை முற்றுகையிடல்,  கோட்டைக்குள் இருப்போர் எதிர்த்துப் போரிடல் என அத்திணைக்குட்ரிய  போர்கள் இனம் பிரிக்கப்பட்டன. 

பெண்கள்,  முதியோர்,  நோயுற்றோர்,  அந்தணர் ஆகியவர்களுக்கு போர்க்காலங்களில் விதி விலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் காக்கப்பட்டனர். பசுக்கள் எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்டு விடாமல் பாதுகாக்கப்பட்டன. 

திணைகள் மட்டுமல்ல,  ஒவ்வொரு போர் முறையையும் மேற்கொண்டவர்கள் என்னென்ன வயலும் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கும் பல துறைகளும் சொல்லப்பட்டுள்ளன.

கல்வி சிறப்பு 

அப்போது கல்வியும் கண்போல போற்றிக் காக்கப்பட்டிருக்கிறது.  கற்றறிவாளர்கள்  அரசவையை அலங்கரித்து இருக்கிறார்கள்.  ஆசிரியப் பெருமக்கள், கணக்காயர், பால் ஆசிரியர்கள்,  இளம்பாலாசிரியர்  என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார்கள்.  மக்கட் செல்வத்தை சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனாயிருந்திருக்கிறது. 

அக்காலத்தில் காதலாகி கலந்த ஒருவனும் ஒருத்தியும் தனி இடத்தில் சந்தித்து உள்ளம் கலந்து அன்பை பரிமாறிக் கொள்ளுதல் களவு மணம் என்று குறிப்பிடப்பட்டது. 

அவர்களின் பெற்றோர் உண்மை உணர்ந்து மணமுடித்து வைப்பார்கள். அதன்பின் அவர்கள் நடத்தும் இல்வாழ்க்கை கற்பு நெறி எனப்பட்டது. 

தமிழ் நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரிக்கப் பட்டிருந்தது. 

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி.  இப்பகுதி மக்கள் முருகக் கடவுளை வழிபட்டார்கள். 

பசும்புல் வெளியில் உள்ள இடமே முல்லை. இந்த பகுதி மக்கள் மாயோனை வழிபட்டனர். 

வயல் சார்ந்த இடம் மருதம் எனப்பட்டது. இந்த பகுதி மக்களுக்கு தெய்வம் வேந்தன். 

கடல் சார்ந்த நிலம் நெய்தல். இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் வருணனைத் தொழுதனர். 

குறிஞ்சியும் முல்லையும் வளங்குன்றிய பகுதியே பாலை.  இப்பகுதி மக்கள் கொற்றவையை வணங்கினர்.  

உழவுத் தொழிலில் தமிழ்நாட்டு மக்களின் முக்கிய தொழிலாக விளங்கியது. 

காலங்கள் 

ஒரு ஆண்டு என்பது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் ,முதுவேனில் என பிரித்து கூறப்பட்டது.  

ஆவனியும்  இதைப் போலவே ஒரு நாள் என்பதும் வைகறை விடியல் காலை நண்பகல் ஏற்பாடு என்று ஆறு பொழுதுகளாக பிரித்து கூறப்பட்டது நடைபெறும் என்பது நாள் என்று குறிப்பிடப்பட்டது இந்த விவரங்கள் எல்லாம் நமக்கு சொல்லும் தொல்காப்பியத்திற்குப் பின் னால் திருக்குறள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களை எஞ்சியுள்ளன

No comments:

Post a Comment