குழந்தைத்தனம் Tamil Short Story | Tamil Story for Kids சிறுவர் கதைகள் தமிழில்
அம்மா, எதிர்வீட்டு கணேசன் அடிச்சுட்டாம்மா.
ஏன்?
எப்பவுமே இப்படித்தானா? அவனுக்கு கை நீளம்
என்ன புள்ள பெத்து வச்சிருக்க எதிர் வீட்டுக்காரி.
சித்த இரு கேட்டு வைக்கிறேன்.
பரணியின் அம்மா மகனுக்காக பரிந்து எதிர்வீட்டை நெருங்கினாள்.
எங்கே உன் மகன்? கணேசன்.
தப்பே செய்யாம என் மகன் மேல கையை நீட்டி இருக்கான்.
என்ன பழக்கம் அடிக்கிற பழக்கம்? குர லில் காரத்தை ஏற்றினாள்.
பரணி என்ன பண்ணினானாம்? அதை கேட்டீங்களா? கணேசன் அம்மாவும் விடவில்லை.
உங்க பையன் எப்ப பார்த்தாலும் இப்படித்தான் பண்றான். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க.
"போன வாரம் உன் மகன் கூட தான் இவனை போட்டு கிள்ளி வச்சான். நான் அதை புகாராஎடுக்கலையே."
சும்மா பழி சொல்லாதே. என் பையன் பதவிசு
நீ தான் மெச்சிக்கணும். உன் பையன் சில்மிஷத்த தெருவுக்கே தெரியும்.
என்னடி உன் பையன் செஞ்ச தப்பை சுட்டிக் காட்டலாம் என்று வந்தா, வம்பளக்கிற.. வரிஞ்சிக் கட்டிக்கினு வந்தது நீ. பழியை என் மேல போடுறியா?
"எம்மா போதும்டி நான் சண்டை போட வரல."
நீ நிறுத்துடி அடி தொண்ட நோக கத்துறத
இருவரும் மாறி மாறி வசை பாட ஆரம்பித்தனர். இவர்கள் போட்ட கூச்சலில் அக்கம்பக்கத்து காரர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
என்ன இது அநியாயம் சகோதரிகளாட்டம் இருந்து நீங்க எதுக்கு சக்களத்தி களை மாறனும்? ஒரு வயதான பெண்மணி நடுநிலைமை பேசினாள்.
இந்த சண்டை அப்போதைக்கு முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்ந்தது
இருவரும் தங்கள் கணவர்களிடம் விவரித்தார்கள். அவர்களும் அதை பாராட்டினர்.
இருவீட்டாரிடத்தும் பேச்சுவார்த்தை முறிந்து போனது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தார்கள்.
அதேநேரம் கணேசனையும் சந்தித்தபோது சாரிடா கணேஷ் நான் என் அம்மா கிட்ட சொன்னது தப்பு.
"சாரி வெரி சாரி டா"
அதை விடு டா
இந்த விஷயத்தை என் அம்மா வீட்டுக்கு கொடுக்காம பேசி ரணபடுத்திட்டாங்கடா.
அநாவசியத்துக்கு ரெண்டு வீட்டுக்கும் பகை.
என் மேல டூ வாடா
ச்சே நீ என்னை புரிஞ்சுக்கடா. நான் உன்னை என்னோட நல்ல நண்பனா தாண்டா இப்போது நினைக்கிறேன். கணேசனும் பரணியும் பெரிய மனிதத் தன்மையோடு பேசி தங்கள் பெருந்தன்மை நிலைநிறுத்தினர்.
ஆனால்....
பெரியவர்கள் தான் குழந்தையாகிப் போனார்கள்.
No comments:
Post a Comment