The history of Chozha சோழர்களின் ஆட்சிக்காலம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 24, 2020

The history of Chozha சோழர்களின் ஆட்சிக்காலம்

The history of Chozha சோழர்களின் ஆட்சிக்காலம்


சோழர்களின் ஆட்சிக் காலம் 

திருச்சி தஞ்சை மாவட்டம் தென்னார்காடு மாவட்டத்தின் தென் பகுதியும் சேர்ந்துதான் பழங்கால சோழநாடு.  காவிரியால்  வளம் பெற்று வந்த இப்பகுதியை ஆண்டதால் சோார்கள் "வளவர்"  எனப் பட்டனர்.  சோழ வள நாடு சோறுடைத்து எனப் புலவர்கள் பாடினர். 

பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழப் பேரரசு சற்று ஏறக்குறைய 400 ஆண்டு காலம் தென்னிந்தியாவில் நிலைபெற்றிருந்தது.  இலங்கை முதலான கடல் கடந்த நாடுகளில் இவர்கள் புகழ் கொடி நாட்டினர்.  சீனத்திற்கும் இலங்கைக்கும் சோணாட்டுத் தூதர்கள் சென்றனர்.  அந்நாட்டு தூதுவர்கள் இங்கு வந்து போயினர். 

சூரியக் கடவுளை வணங்கிய வடநாட்டார் தோழமையால் முதற் குலோத்துங்கன் காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் ஏற்பட்டது.  ஆயினும் எம்மதமும் சம்மதம் என்ற நிலை ஓங்கியிருந்தது. 

இலங்கை 

சோழப்பேரரசு காலத்தில் பலமுறை குறிவைத்து தாக்கப்பட்டது இலங்கை. ஏறத்தாழ 150 ஆண்டுகாலம் இலங்கையின் வடபகுதி சோழ பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது . தமிழ்நாட்டு வணிகர்கள் கடல் கடந்து சென்று வாணிபம் செய்து வந்தார்கள். சோழர்கள் படையெடுத்த நாடுகளின் மீதெல்லாம்  பகைப் பாராட்டாமல் நட்பு கொள்ளவும் உறவுகொள்ளவும் செய்தனர். குலோத்துங்கன் தான் வென்ற நாடுகளை பெரிய மனதோடு அவற்றை ஆண்டிருந்தவர்களுக்கே விட்டுக்கொடுத்தான்.

சைவ சமயத்தை சேர்ந்த சோழ மன்னர்கள் தமது அவையில் முக்கிய இடம் தந்திருந்தார்கள்.

மெய்க்கீர்த்திகளில் தம்மை சக்கரவர்த்திகள் என குறிப்பிட்டு கொண்டார்கள் சோழப் பேரரசர்கள்.  அவர்கள் தங்கள் பெயர்களை ஊர்களுக்கும் நாடுகளுக்கும் தங்கள் எழுப்பிய கோயில்களுக்கும் இட்டார்கள்.  சோழ வேந்தர்கள் சிலைகளோடு சில கோயில்களில் வைக்கப்பட்டன. 

மிகப் பெரிய அரண்மனைகளிலே வாழ்ந்த அம்மன்னர்களிடம் பணிந்தவர்கள் வாழ தனி வீதிகளே அமைக்கப்பட்டிருந்தன.  பகை நாடுகளிருந்து கைது செய்து கொண்டு வரப்பட்டவர்கள் தனி வீதிகளிலேயே குடியமர்த்தப்பட்டார்கள். இவர்கள் செய்தொழில்கள் யாவும் மதிக்கப்பட்டன. 

படைவலிமை 

சோழர்களிடம் ஆற்றல் மிக்க தரைப்படை கப்பல் படையும் இருந்தன. இடது கை பழக்கம் இருந்திருக்கிறது.  நாடு முழுவதும் ஆங்காங்கே படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.  கோயிலின் பாதுகாப்புகள் இவ்வகை  படையினரிடேம விடப்பட்டிருந்தது. சோழநாட்டுப் படையில்  60 ஆயிரம் படைகள் இருந்தன.  பல்லாயிரக்கணக்கான குதிரைகள் இருந்தன.

எல்லாப் படைகளுக்கும் மன்னனே தலைவனாக இருந்தான். 

ஊரில் சில இடங்களில் அமர்ந்து குடிமக்களின் குறை கேட்டு அரசின் ஆணை பிறப்பித்தான்.  தன் அமைச்சரையும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட தலைமைச் செயலாளரையும் கலந்து கொண்ட பிறகு ஆணையானது வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டது.  தலைமைச் செயலாளர் "பெருந்தனும்" எனப்பட்டார். கீழ் பிரிவு செயலாளர் "சிறுதனம்" எனப்பட்டார். 

ஊர் சபையினர் இடமும் குலப் பெரிய தனக் காரரிடமும் நீதி வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  திருட்டு, பொள் கையெழுத்த,  விபச்சாரம் ஆகியவை பெரும் குற்றங்களாக கருதப் பட்டன.  

பிறர் நலத்திற்காக உயிர் துறந்தவர்களின் உறவினர்களுக்கும் வழிவந்தவருக்கும்  "உதிரப்பட்டி" என்னும் பெயரில் நிலதானம் செய்யப்பட்டது. 

உழவே தலை 

சோழர்கால நாட்டாட்சி முறையில் கிராம நிர்வாகத்திற்கு சிறப்பிடம் தரப்பட்டது. உழவுத் தொழில உயர்வாகப் போற்றப்பட்டது.  குடிமக்கள் மேல் நியாயமாக பல வரிகளும் கட்டணங்களும் விதிக்கப்பட்டன.  ஒவ்வொரு ஊரிலும் சில வகை நிலங்களுக்கும் வரி விளக்கம் அளிக்கப்பட்டது.  

கற்புநெறி தவறாத சோழர் கால பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தார்கள்.  அரசனின் அலுவலகங்களில் பட்டத்தரசியும் பங்கேற்றாள்.  

இசை ஓவியம் நடனம் சிற்பக்கலை ஒப்பனைகள் எல்லாம் சோழர்கள் காலத்தில் சுடர் வீ சீன. 

நாட்டில் ஆங்காங்கே தண்ணீர் பந்தலும் மடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களில் விழாக்கள் பல கொண்டாடப்பட்டன. ஒட்டக்கூத்தர் கம்பர் புகழேந்தி சேக்கிழார் ஜெயங்கொண்டார் திருத்தக்கதேவர் மெய்கண்டார் ஆகிய புலவர் பெருமக்கள் சோழர் காலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்தனர். 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, தொண்டைமான் இளந்திரையன் போன்ற புலவர் பலரும் திறமை பெற்றுவிட்டார்கள். இனிக்கும் இலக்கிய தமிழ் ஏற்றம் பெற்றிருந்தது. 

சோழர்களின் காலத்தில் மொத்தத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது  என்பதை யாராலும் மறுக்க இயலாது.  சோழன் நல்லுருத்திரன் பாடிய புறநானூற்றுப் பாடல் (190) ஒன்றை இங்கே காணலாம்

"விளைப் பதச் சீறிடம் நோக்கி வளைகதிர் 
வல்சி கொண்டு அலை மல்க வைக்கும் 
எலிமுயன் றனைய  ராகி உள்ளதாம் 
வளம்வலி உறுக்கும் உளம் இலாளரோடு 
இயைந்த கேண்மை இல்லா கியரோ 
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென 
அன்றவண் உண்ணா தாகி வழிநாள் 
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து 
இருங் களிற்று ஒருத்தல் நல்வலன் படுக்கும் 
புலிபசித் தனை மெலிவில் உள்ளத்த
உரனுடையாளர் கேண்மையோடு
இயைந்த வைகல் உளவா கியரோ"

No comments:

Post a Comment