சங்ககால இலக்கியங்கள் பண்டைய தமிழகத்தின் வரலாற்றை நமக்கு படம் பிடித்து காட்டுவனவாகும். அவை மட்டுமின்றி கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அவ்வகையில் பேருதவியாக இருக்கின்றன.
சோழப்பேரரசு காலத்தில் தோன்றிய செப்பேட்டு சாசனங்கள் மிகப் பெரிய சிறப்பு ஆகும். அவற்றின் மூலம் அறியப்படும் மெய்க்கீர்த்திகள் மிக விரிவானவை. சோழர் காலச் செப்பேடுகளில் குறிப்பிடத்தக்கது திருவாலங்காட்டு செப்பேடு.
அந்நாளைய மக்கள் வாழ்க்கை பண்பாடு மக்களிடமிருந்து அரசாங்கம் பெற்ற வரிகள், அரச பரம்பரை, வரலாறு, கோயில், அலுவலர்கள், கோயிலுக்குரிய நகைகள், சொத்துக்கள், நன்கொடைகள் போன்ற பல விவரங்கள் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றன.
புதுக்கோட்டை குடுமியான் மலை பாறை ஒன்றில் காணப்படும் கல்வெட்டு இசை பற்றிய கட்டுரையாகவே திகழ்கிறது. சோழ மன்னர்களின் வரலாறு கூறும் கல்வெட்டுகள் இங்கே தமிழகத்தில் மட்டுமல்ல சிங்கம், ஜாவா, சுமத்ரா பர்மா போன்ற நாடுகளிலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீத்திற்கு அனுப்பப்பட்ட சோழரின் தூதுகளை பற்றிய குறிப்புகள் சீன நாட்டின் சாங் வரலாறுகளில் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் நாணயங்களும் வெளியிடப்பட்டன. உத்தம சோழன், இரண்டாம் ஆதித்தன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னரின் நாணயங்கள் பல கிடைத்துள்ளன. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல நாணயங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பல இப்போது கிடைக்கவில்லை.
கலைச் சிறப்பு
சோழர்காலத்தில் விண்ணைத்தொடும் உயர கோபுரங்களோடு கோயில்கள் பல எழுப்பப்பட்டன. பல கோயில்கள் விரிவாக்கப்பட்டன. இசையும் நாட்டியக் கலையும் மிக நல்ல நிலையில் இருந்தன. ஓவியம் சிற்பம் ஆகிய கலைகள் அன்றுதான் உயர்வடைந்து இருந்தன.
மன்னர்களைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் தொல்காப்பியத்திலும் அதற்கு முந்தைய கிமு இரண்டாம் நூற்றாண்டில் முற்பகுதியை சேர்ந்த அதிகும்பா கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் அவற்றின் சிறப்புகள் தெரிகின்றன. சங்க இலக்கியங்களிலே மிகவும் பழம் பாடல்களால் தொகுக்கப்பட்டு புறநானூற்றில் சோழ மன்னர்கள் பலரை பற்றிய செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் முழுமையான வரலாறு கிடைக்கவில்லை. சோழ மன்னர்கள் ஆத்திப் பூ மாலை அணிந்தார்கள்.
சைவ சமயத்தவர்கள் ஆன அவர்கள் ஆட்சி கொடி புலிச் புலிச்சின்னம் உடையது.
No comments:
Post a Comment