The King First Rajendiran முதலாம் இராசேந்திரன் | The History of Chozha Nadu சோழ நாட்டின் வரலாறு.
முதலாம் இராசேந்திரன்
சிவபாதசேகரன் என்று அழைக்கப்பட்ட ராசராச சோழனுக்கும் பட்டத்தரசி வானவன் மாதேவியாருக்கும்க்கும் பிறந்தவன் ராஜேந்திர சோழன். (கிபி 1012 கிபி 1044). பழையாறை அரண்மனையில் இருந்து அத்தையரான குந்தவைப் பிராட்டி யாராலும் பாட்டியார் செம்பியன் மாதேவியாராலும் போற்றி வளர்க்கப் பட்டான்.
தன் தந்தையாரின் ஆட்சிக் காலத்திலேயே சிற்றரசனாகவும் சோழர் படைத் தலைவராகவும் இருந்தவன் இவன். தேர்ந்த அரசியல் அறிவு போர்த்திறன் தமிழ் புலமை எல்லாம் அமையப் பெற்றவன்.
இராசராசன் பெற்ற பல வெற்றிகளுக்கும் மூலாதாரமாக இருந்தவனே இந்த முதலாம் ராஜேந்திரன். 32 ஆண்டுகாலம் சோழப் பேரரசின் புகழ்பெற்ற ஆட்சி நடத்திய இவனது பெருமை பற்றி அறிவிக்கும் பல கல்வெட்டுகளும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் உண்டு. இராசேந்திர சோழனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டவைகளே திருவாலங்காட்டுச் செப்பேடுகள். இவனைப் பற்றி கல்வெட்டுகள் யாவும் "திருமன்னிப்படர...." என்றே தொடங்குகின்றன.
தந்தையாரைப் போலவே இவனும் தன் ஆறாம் ஆட்சி ஆண்டில் தன்னுடைய மகன் ராசாதிராசனுக்கும் இளவரசு பட்டம் கட்டி விட்டான்.
சேர பாண்டிய மன்னர்களின் கொட்டம் அடக்கிய ராஜேந்திரன் தன் மகன்களில் ஒருவனான சுந்தர சோழ அரசப் பிரதிநிதியக்கினான். தன் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வென்றான். ராஜேந்திரனுக்கு அருண்மொழி நங்கை, அம்மங்கை தேவி என இரண்டு புதல்விகள் உண்டு. அருண்மொழி நங்கை கொள்ளிடக் கரையிலுள்ள திருமலைபாடி கோயிலுக்கு சில நிவந்தங்கள் வழங்கியுள்ளாள். அம்மங்கை தேவி கீழைச் சாளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கும் முதல் ராஜராஜ சோழன் புதலஙவியாகிய குந்துவைக்கும் பிறந்த ராஜராஜ நரேந்திரன் என்ற அரச குமாரனுக்கு மணமுடிக்க பட்டாள். இவளுக்கு பிறந்தவன் குலோத்துங்க சோழன்.
தம்பியர் இருவர்
ராஜேந்திரனின் தம்பிரானே ராஜேந்திர சோழ தேவர் வீர ராஜேந்திரன் என்பவரும் அரசவைக் கவனித்து வந்தார்கள். கங்கைக்கு பெரும் படை ஒன்றை அனுப்பினான் ராசேந்திரன். அப்படை சக்கரக்கோட்டம், கோசல நாடு, ஒட்டர தேசம் தண்டபுத்தி, தென்லாட தேசம் ஆகியவற்றை வென்றது. வங்கத்தை ஆண்ட மகிபாலன் தோல்வியுற்றான்.
வெற்றியோடு அப்படைத் திரும்புகையில் சுற்றிவளைத்து விட, பழைய மன்னர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள். ஆனால் அது பலிக்கவில்லை.
தோல்வியுற்ற மன்னர்கள் கங்கைநீர் குடங்களை சுமந்து வருமாறு செய்யப்பட்டனர். வென்று மீண்ட தனது படையை கோதாவரி ஆற்றங்கரையில் எதிர்கொண்டு வரவேற்றான் ராஜேந்திரசோழன். அந்தத் கங்கை நீர் கொண்டு அப்பெரும் வெற்றியின் சின்னமாக புதிதாக உருவாக்கப்பட்ட தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். சிவன் கோயில் கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை தூய்மை செய்யப்பட்ட நீர் நிரப்பப்பட்ட ஏரி சோழகங்கம் எனப்பட்டது.
தஞ்சை பெரியக் கோயில் போல அதே அமைப்பில் சற்று சிறிதாக உருவாக்கப்பட்டதுதான் கங்கை கொண்ட சோழபுரம். சிவன் கோயில் இக்கோயில் விமானத்தின் உயரம் 160 அடி.
இப்பெரு வெற்றியின் பின் ராஜேந்திர கங்கைகொண்டான், கங்கை கொண்ட சோழன் என்றெல்லாம் சிறப்புறக் குறிக்கப்பட்டான்.
இவனுடைய கடற்படை கிழக்கிந்திய தீவுகளுக்கு சென்றது. நிகோபார் தீவுகள் கடாரம், சுமத்திரா, ஜாவா தீவுகள் முதலான பல தீவவுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த வெற்றிக்குப் பிறகு ராஜேந்திரன் கடாரம் கொண்டான் என்ற சிறப்புடன் குறிப்பிடப்பட்டான். மதுராந்தகன், உத்தம சோழன், முடி கொண்ட சோழன், பண்டித சோழன் போன்ற விருது பெயர்களும் இவனுக்கு இருந்தன.
தென்னிந்திய வரலாற்றில் தன் ஆற்றல் மிக்க கடற்படையால் உட்பட இப்படி கடல்கடந்த நாடுகளை வென்ற பேரரசன் ராஜேந்திரன் ஒருவனே ஆவான். தமிழகத்தை ஆண்ட சோழர்கள் வடக்கே கங்கை வரை சென்று வென்ற இவன் ஒருவனே ஆவான்.
ஆயிரத்து 17 முதல் 18 வரை இவர் நடத்திய போர் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இலங்கை வேந்தனான ஐந்தாம் மகிந்தன் வட இலங்கையை கைப்பற்ற முயன்றான். ராசேந்திரன் தனது பெரும் படையை அனுப்பி ஈழவேந்தன் முடியையும் அவன் மனைவியர் முடிகளையும் மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டுக்கு முன் பராந்தகனிடம் தோற்ற வீரபாண்டிய மன்னன் அங்கே கொண்டு போய் கொடுத்து வைத்த மணிமுடியையும் கவர்ந்து வரச்செய்து பெற்றான்.
இலங்கை முழுவதையும் கைப்பற்றியதோடு ஐந்தாம் மகிந்தன் கொண்டு வந்த சோழ நாட்டு சிறையில் அடைத்தான். அம்மன்னன் சோழ நாட்டிலேயே 12 ஆண்டுகள் இருந்து இறந்திருக்கிறான்.
திருமறைகள்
சோழ மண்டலங்களில் ஒன்றாக ஆக்கப்பட்ட இலங்கைத் தீவில், ராஜேந்திரன் சிவனுக்கும் திருமாலுக்கும் கோயில் எழுப்பினான். சிறந்த சிவபக்தனான இவன் காலத்தில் கோவில்களில் சைவத் திருமுறைகள் ஓதப்பட்டன. அதை மேற்பார்க்க தேவார நாயகம் என்ற அந்தண அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஸ்ரீவிஜய நாட்டின் சைலேந்திர மன்னன் மார விசயோதுங்கன் இராசராச சோழன் உதவி பெற்று நாகையில் சூடாமணி விகாரை என்ற பெளத்த மடம் ஒன்றை கட்டி இருந்தான். இராசேந்திர சோழன் பட்டத்துக்கு வந்த பிறகு அவளை திருப்பி தன் தந்தையின் நிவந்தமாக கொடுத்திருந்த ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் அம்மடமே சூரிய சந்திரர் உள்ளவரை அனுபவிக்கும்படி ஆணை பிறப்பித்தான்.
இவன் காலத்தில் கடல் வாணிகம் சிறந்திருந்தது. ராஜேந்திரன் ஆட்சியிலிருந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளிலும் சோழ நாடு மிக உன்னத நிலையில் இருந்தது.
கிபி ஆயிரத்து 18 சிங்களத்திலும் சேர பாண்டிய நாடு களிலும் அரசியல் கிளுர்ச்சிகள் சுதந்திர போராட்டங்கள் மூண்டன. இளவரசன் ராசாதிராசன் அவைகளையெல்லாம் ஒடுக்கிவிட்டான்.
வீரத்திலும் நிர்வாகத் திறனிலும் சிறப்பிலும் தந்தை இராசராசனுக்கு மேலாக திகழ்ந்த ராசேந்திர சோழன் வாழ்நாள் முடிவுக்கு வந்தது. கிபி ஆயிரத்து 44 அவன் பிரிவாற்றாமல் அவனது மனைவியரில் ஒருத்தியான வீரமாதேவி உடல் உயிர் துறந்தாள்.
இராஜேந்திரனின் மக்கள்
சோழப் பேரரசனாக கிபி ஆயிரத்து பதினெட்டில் ராஜேந்திரனுக்கு பின் முடிசூட்டிக் கொண்ட அவன் மகன் முதலாம் இராஜராஜனுக்கு பெரிய வீரனாக விளங்கினான். தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே அவர் செய்த போர்கள் பலத்தோடும் பாண்டிய நாடு மலை நாடு மேலைச் சாளுக்கியருடன் நடத்திய போர்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவன் பதவி பொறுப்பை ஏற்றதும் பெரும்படையோடு வடக்கு நோக்கி சென்று தக்கணம் முழுவதும் ஆண்ட இரண்டாம் ஐய சிம்மனின் மகன் ஆகவமல்லனையும் வெற்றி கண்டான். மேலை சாளுக்கிய நாட்டில் புகுந்து பல ஊர்களைத் தீயிட்டான். தலைநகராய் இருந்த கல்யாண புரதஙதை சூறையாடினான்.
அங்கே வெற்றி கொடி நாட்டி வீரம் முழுக்கு செய்துகொண்ட ராஜாதிராஜன் வீசய ராஜேந்திரன் என்கிற விருதுப் பெயர் பெற்றான்.
சாளுக்கியர்களின் வீழ்ச்சி
கிபி ஆயிரத்து 53 கிருஷ்ணய்யர் ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் மிகக் கடுமையான போர் மூண்டது. அப்போரில் யானை மீதிருந்த போரிட்ட ராசராச இராசாதிராசன் கொல்லப்பட்டான். இதனால் யானை மேல் துஞ்சிய தேவர் என்று பெயர் பெற்றான்.
அவன் மாண்டதும், களத்தில் இருந்த சோழர் படை பின்வாங்கியது. உடனே அவன் தம்பியான இராசேந்திரன் சோழதேவன் முன்சென்று பயங்கரமாகப் போரிட்டு சாளுக்கியரை தோல்வி காணச்செய்தான். அவர்களது பன்றிக்கொடியும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த போர்க்களத்திலேயே இரண்டாம் இராசேந்திரன் இராசேந்திர சோழ தேவன் (கி பி 1054) சோழப் பேரரசனாக ஒரு முடி சூட்டிக்கொண்டான். பகை நாட்டில் கொல்லாபுரம் வரை படை நடத்திச் சென்று அங்கே வெற்றித் தூண் ஒன்றை நாட்டினான். நாளடைவில் சாளுக்கியர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஓங்கலாயிற்று ஆகமல்லன் மீண்டும் வேங்கி நாட்டு அரசியலில் தலையீட்டான்.
அவனை அடுத்து முதலாம் வீர இராஜேந்திரன் இளவரசுப் பட்டத்தை ஏற்றான்.
வீரராஜேந்திரன்
கி பி 1063 இரண்டாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி முடிவுற்ற பின்னர் அவனது இளவல் முதலாம் வீரராஜேந்திரன் அரசு கட்டில் ஏறினான். (கிபி 1061 முதல் 1070)
சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் உடைய அறைகூவலை ஏற்று மேலை சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றித் தூண் நாட்டினான்.
சோமேஸ்வரர் காய்ச்சலுக்கு ஆளாகி துங்கப்பத்திரையில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டான்.
ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இலங்கையோடு வீரராசேந்திரன் போர் தொடுத்தான். வீரராஜேந்திரன் காலத்தில் புத்தி மித்திரர் என்பவர் "வீரசோழியம்" என்னும் இலக்கண நூலை இயற்றினார்.
சகலபுவனாசிரியன், மேதினி வல்லபன், மகாராசாதி ராசா, ஆகவமல்லகுலகாலன். பாண்டிய குலாந்தகன், ராச ராசிரியன், வல்லபவல்லபன், வீர சோழன், கரிகாலன் போன்ற பல விருதுகள் இவனுக்கு உண்டு.
கி பி 1070 ல் இவன் இறந்தான்.
அதன் பிறகு அவனுடைய மகனும் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின் மைத்துனனுமான அதிராஜேந்திர தேவன் அரசு கட்டில் ஏறினான். முடிசூட்டிக் கொள்ளும் முன்பே தந்தையோடு அமர்ந்து ஆட்சி நடத்திய அனுபவம் அவனுக்கு உண்டு. அதி ராஜேந்திரன் அரியணை ஏறிய பின் ஒரு மாத காலமே ஆட்சி புரிந்தான். எக்காரணத்தாலோ இவன் கொலை செய்யப்பட்டான். வீர ராசேந்திரன் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட சில அரசுடைமைக் கிளர்ச்சிகளே அதிராசேந்திரனின் மறைவுக்கக் காரணம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இவனுடைய வாழ்நாழோடு விசயாலயச் சோழனின் நேர் பரம்பரை முடிவடைந்தது.
No comments:
Post a Comment