The King Kuloththungan குலோத்துங்கன் | The History of Chozha Nadu சோழர்களின் வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 23, 2020

The King Kuloththungan குலோத்துங்கன் | The History of Chozha Nadu சோழர்களின் வரலாறு

The King Kuloththungan குலோத்துங்கன் | The History of Chozha Nadu சோழர்களின் வரலாறு


குலோத்துங்கன் 

கீழைச் சாளுக்கிய பட்டத்திற்கு உரிய ராஜேந்திரன் முதலாம் குலோத்துங்கன் என்னும் பெயருடன் அவனை அடுத்து பட்டத்திற்கு வந்தான்.  இவன் தந்தை வழியில் சாளுக்கியன்.  தாய்வழியில் சோழன். நேரான சோழர் பரம்பரையில் அப்போது பட்ட ஏற்க யாரும் இல்லாததால் தான் சோழப் பேரரசனாக நேர்ந்தது (கி பி 1070 - 1122)

சோழப் பேரரசு அழிந்துவிடாமல் புத்துயிர் ஊட்டி காத்த பெருமையாளனான இந்த  குலோத்துங்கசோழன் பிற்காலச் சோழர் வரலாற்றில் நிலைத்து புகழுக்குரியவனானான்.

சிறந்த அரசியல் ஞானமும்,  தமிழ் பற்றும்,  போர்க்குணம் கொண்ட இவன் ஆறாம் விக்கிரமாதித்தன் ஆணவப் போக்கை ஒடுக்கினான்.  மைசூர் நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான்.  

பாண்டியர்களும் சேரர்களும் தம் ஆட்சியை மீட்டு நிலை நிறுத்த முயன்றனர். போரில் அவர்களை முறியடித்தான் குலோத்துங்கன்.  

கோட்டாறு போன்ற இடங்களில் தன் படைகளை நிலையாக நிறுத்திய அவன் மக்கள் ராசராச மும்முடிச்சோழன்,  வீரசோழன்,  ராசராச சோழங்கன்,  விக்கிரம சோழன் என்ற நால்வரும் ஒருவர் பின் ஒருவராக வேங்கி நாட்டை ஆண்டனர். 

கலிங்கத்துபரணி 

சோழருக்கு எதிராக புறப்பட்ட அனந்தவர்மன் சோழங்கன் என்ற கலிங்க மன்னன் குலோத்துங்க சோழனின் மகனான விக்கிரம சோழனால் ஒடுக்கப்பட்டான்.  அதன் பின்னரும் சோழனுக்கு திறை செலுத்த மறுத்த சோழன் குலோத்துங்கன் படைத் தலைவனான கருணாகர தொண்டைமான் போரில் முற்றிலும் முறியடிக்கப்பட்டான்.  

இந்தப் போர் விவரம் பற்றியதுதான் "கலிங்கத்துப் பரணி"  என்னும் நூல். குலோத்துங்கனின் அவை புலவரான சயங்கொண்டார் இதனை திறம்பட இயற்றினார். 

கி பி 1076இல்,  விசயபாகு என்ற ஈழ மன்னன் சோழர் ஆட்சியில் இருந்த வட இலங்கையை கைப்பற்றினான்.  அனுராதபுரத்தில் இலங்கை முழுமைக்கும் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.  

ஈழத்தோடும் சீனத்தோடும் கடாரத்தோடும் நல்லுறவு கொண்டான் குலோத்துங்கன். வட நாடுகளுடனும் தொடர்பில் இருந்தது.  இவன் பெற்ற விருது பெயர்களில் சயதரன், அபயன்,  விருதராச பயங்கரன்,  திருநீற்றுச் சோழன்.  சுங்கம் தவிர்த்த சோழன்,  விஷ்ணுவர்தன்,  இராசகேசரி பெருமாள், ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

கி பி 1086ல் சோழ நாடு முழுவதும் இருமுறை அளக்க ஏற்பாடு செய்தவன். குலோத்துங்கசோழன்.  மதுராந்தகி பட்டத்தரசியாக இருந்தாள்.  அவள் மாண்டபின் தியாகவல்லி குலோத்துங்கனின் பட்டத்தரசியானாள்.  இவனுக்கு முன்பு போலவே மனைவிமார் பலராவர். 

இராசசுந்தரி,  சூரியவல்லி,  அம்மங்கை  என குலோத்துங்கனுக்கு பெண்மக்கள் மூவர்.  இவர்களின் ஒருத்தி சிங்கள இளவரசனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.   இவன் காலத்தில் நாடு பல மண்டலங்களாகவும் அவை வள நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன.

அரசியல் நிபுணான குலோத்துங்கன் சுங்கவரி நீக்கியதால் "தவிராத சுங்கம் தவிர்த்தவன்" என்ற கலிங்கத்துப்பரணியில் பாடப்படுகிறான். சைவனாயினும்  மன்னார்குடியில் சோழ விண்ணகரம் என்ற வைணவ கோயிலைக் கட்டிய குலோத்துங்கன் பெளத்த மடங்களுக்கு நிவந்தம் அளித்து வந்தான். 

கங்காபுரி அல்லது கங்கை கொண்ட சோழபுரமே இவனுக்கும் தலை நகராக விளங்கி வந்தது.  ஆனால் காஞ்சிபுரத்தில் அவ்வப்போது தங்கிய இவன் அங்கிருந்தும் ஆணைகள் பிறப்பித்து வந்தான்.


விக்கிரம சோழன் 

முதல் குலோத்துங்கனை அடுத்து அவருடைய மகன் விக்கிரம சோழன் சோழ நாட்டுக்கு அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.  கிபி  1120 - 1135 இவனே கலிங்கப்  போரை முன்னின்று நடத்தியவன்.  

ஒட்டக்கூத்தர் எழுதிய விக்கிரம சோழன் உலா இவன்மீது பாடப்பட்டதேயாகும். அவரே இவனுடைய ஆசிரியர்.  விக்கிரமசோழன் காலத்தில் அவ்வளவாக பெரிய போர்கள் நிகழவில்லை. சிதம்பரத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் நடராசர் கோயிலுக்கு தன் முன்னோர்களைப் போலவே இவனும் அளவற்ற தானங்கள் வழங்கினான்.  அக்கோயிலின் முதல் திருச்சுற்று மதில் விக்கிரமசோழன் திருமாளிகை எனக் குறிப்பிடப்பட்டது.  கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஒன்று விக்கிரமசோழன் திருவீதி எனப்பட்டது.  திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் காட்டியதாக மேல் கோயிலொழுகு கூறுகிறது.  நாடு முழுவதும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பழக்கம் எனக்கு இருந்தது. 

தியாக சமுத்திரன்,  அகளங்கன் போன்ற பல விருதுகளைப் பெற்றவன் விக்கிரம சோழன்.  விக்கிரம சோழனுக்கு பிறகு அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் அரியணை ஏறினான்.  (கிபி 135 -  1150)  சிதம்பரத்தில் இவன் முடிசூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.  

திருச்சிற்றம்பலத்தில் பொன்வேய்ந்த இரண்டாம் குலோத்துங்கன் அந்தக் கோயிலின் தென்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை பெயர்த்து போய் கடலில் போட செய்தான்.  பெரியபுராணம் பாடிய சேக்கிழார் இவன் அவையின் முக்கிய அமைச்சராக இருந்தார். அவரே இவருடைய ஆசிரியர்.  இவர் மீது அவர் "குலோத்துங்கன் உலா"  பாடினார். 

சைவ வைணவ பூசல்கள் தவிர,  இவன் காலத்தில் வீன் கிளர்ச்சிகளோ கலவரங்களோ எதுவுமில்லை.   நாடு அமைதியாக இருந்தது. 

இரண்டாம் இராசராசன் 

இரண்டாம் குலோத்துங்கனின் வாழ்நாள் முடிவதற்குள் 4 ஆண்டுகளுக்கு முன்பு அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆட்சி பொறுப்புகளை ஏற்று நடத்தி வந்தான்.  (கிபி 1146 - 1173) 

இவனோடு அரியணையில் வீற்றிருந்தவள் அவனிமுழுதுடையாள் என்கிற அரசியாவாள்.  வேறு மூன்று மனைவிகளும் இருந்தார்கள். 

தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றியவன்.  ஆகையால் "முத்தமிழ் தலைவர்" என்ற விருது பெற்றிருந்த இவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய இராசராச "சோழன் உலா." 

கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் என்ற ஊரில் அற்புதமான வேலைப்பாடுகள் உடைய பெரியதோர் சிவன் கோயிலைக் கட்டினான். ராஜராஜன் இராசராசேஸ்வரம் என்பது இதன் பெயர்.  இக்கோயில் உள்ள துவாரபாலகர் சிலை ராசராசன் வைக்கப்பட்டதாகும். 

கண்டன், வீரதீரன், வீரோதயன், சோழேந்திர சிம்மன், ராஜகம்பீரன,  எதிரிலிசோழன், நெறியுடைச்சோழன் என பல விருதுகள் இவனுக்கு இருந்தன. 

இரண்டாம் இராசராசன் ஆட்சியின் கடைசி காலத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் தளர்ச்சியுறலாயின. 

இரண்டாம் இராசராசனுக்கம் பிள்ளைப்பேறு இல்லை.  அதனால் விக்கிரம சோழனுடைய பெண் வயிற்றுப் பேரர்களில்ன் ஒருவனான இரண்டாம் ராசராசன் பட்டத்திற்கு வந்தான். கி பி 1178 - 1179

 இவனுடைய ஆட்சிக் காலத்தில்,  பாண்டிய ஆட்சியை கைப்பற்றுவது குறித்து பங்காளிகள் சண்டை நடந்தது.  பராக்கிரமபாகு என்ற இலங்கை அரசன் ஒரு பங்காளியையும், சோழன்  மற்றொருவனை ஆதரித்தார்கள்.  வெற்றிவாகை அவர்கள் இருவர் கழத்திலும் மாறி மாறி விழுந்தது. 

இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் சோழ பாண்டிய சிங்கள  மன்னர்கள் ஆட்சி நடத்தவில்லை.  அரசியல் சூதாட்டம் நடத்தினார்கள் என்றால் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment