The King Third Kuloththungan மூன்றாம் குலோத்துங்கன் | The History of Chozha Nadu சோழ நாட்டின் வரலாறு
மூன்றாம் குலோத்துங்கன்
சோழப் பேரரசர்களின் பட்டியலில் இரண்டாம் இராசராசனுக்குப் பிறகு அவன் விருப்பப்படி ஆட்சிக்கு வந்த மூன்றாம் குலோத்துங்கன்( கி பி 1178 - 1216) ஒருவனாவான். இவன் காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும்ம் பல போர்கள் நடைபெற்றன. வீரபாண்டியனையும் அவனுக்கு உதவிய ஈழவேந்தர்களையும் குலோத்துங்கன் வென்றான். கொங்கு நாட்டை வென்றான். சேர மன்னனை வென்றான். கருவூரில் வெற்றி முழுக்க செய்து கொண்டான்.
பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வென்ற இவன் மதுரையை சூறையாடினான். நன்நெஞ்சம் படைத்தவனான குலோத்துங்கன், பிறகு பாண்டியனுக்கு பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை எழுதி வைத்தான்.பறித்த முடியையும் திருப்பி அளித்து மதுரை மாநகரை அவனை திரும்ப ஆளும்படி செய்தான்.
இவன் நடத்திய பெரும் போர்களில் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாது இன்னும் பல உண்டு.
வீரகேரளன் என்பானை வேணாட்டுப் போரில் முறியடித்த மூன்றாம் குலோத்துங்கன் பெருந்தன்மையோடு அவனுக்கே அவன் நாட்டை அளித்தான்.
முதல் பராக்கிரமபாகு என்ற ஈழமன்னனை புறங்காண வைத்து தன்னை பேரரசன் என ஏற்கச் செய்தான்.
திருச்சியை அடுத்துள்ள கருவூரில் இருந்த ஆண்ட சேர மரபினர் மீது படையெடுத்து வென்றான். பிறகு அந்த அரசனையே அவ்வுரை ஆளும்படி செய்தான். இப்படி முடிவு வழங்கிய காரணத்தால் இந்த ஊர் முடி வழங்கிய சோழபுரம் என்ற பெயர் பெற்றது.
தெலுங்கு சோழனான தேவனிடமிருந்து காஞ்சி மீட்டான்.
விக்கிரமபாண்டியன் மகனான சடாவர்மன் குலசேகர பாண்டியன் முரண்பட்டு நிற்கவே போரில் அவனை வென்று "சோழ பாண்டியன்" என்ற பட்டம் பெற்றான். மதுரையிலேயே இவன் வீரமுழக்கம் வெற்றி முழக்கம் செய்து கொண்டதால் அந்நகரம் முடித்தலைகொண்ட சோழபுரம் எனப் பெயர் பெற்றது.
இவ்வாறாக சேரனையும் பாண்டியனையும் வென்று நின்றதால் "திரிபுவன வீரதேவன்" என அழைக்கப்பட்டான் மூன்றாம் குலோத்துங்கன். திரிபுவன சக்கரவர்த்தி வீரராசேந்திரன் குமார குலோத்துங்கன் தியாக வினோதன் என பல விருது பெயர்களும் இவனுக்கிருந்தன.
குடந்தைக்கு அருகில் திருபுவனத்தில் இருக்கும் திரிபுவன வீரேசுவரம் என்ற பெருங்கோயில் இவன் கட்டியதாகும். மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக விளங்கியது.
இவன் ஆண்ட போது இரண்டு ஆண்டு காலம் ( கி பி 1201 - 1202 ) கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அவதிக்குள்ளாகினர். பஞ்ச நிவாரணப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டன. தனிப்பட்டவர்களும் இந்த நிவாரணப் பணியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மூன்றாம் குலோத்துங்கன் காலம் சோழ நாட்டின் எல்லை வடக்கே கடப்பை முதல் தெற்கே குமரி வரையும் மேற்கில் மைசூர் முதல் கீழைக்கடல் வரையிலும் பரவியிருந்தது.
மூன்றாம் இராசராசன்
குலோத்துங்கனுக்குப் பின்னர் மூன்றாம் இராசராசன் முடி சூட்டிக்கொண்டான் கிபி 1216 - 1246. இருவரும் எப்படி உறவு என தெளிவாக விளங்கவில்லை.
இவனுடைய காலத்தில்தான் பாண்டியர்களின் கரம் ஓங்கியது.
சுந்தரபாண்டியன் மூன்றாம் இராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான். உறையூரையும் தஞ்சையையும் சின்னபின்னப்படுத்தினான். பழையாறை அரண்மனையில் வீர முழுக்கு செய்து கொண்டான்.
அவன் அமராவதியில் தங்கியிருந்தபோது மூன்றாம் ராச ராசன் தன் மனைவி மக்களோடு சென்று அடிபடிந்தான். இதனால் பாண்டியன் மனமிரங்கி சோழநாட்டை அவனுக்கே வழங்கினான்.
இக்காரணத்தால் சோணாடு வழங்கிய சுந்தரபாண்டிய தேவன் என்று அவனை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால் இந்த நிலை நீடிக்க வில்லை. பாண்டியனுக்கு கப்பம் கட்ட மறுத்த பாண்டியனை பகைத்துக் கொண்டான் ராசராசன். இதன் காரணமாக மூண்ட போரில் தோற்றான். பாண்டியன் முடிகொண்ட சோழபுரம் அரண்மனையில் வெற்றி முழுக்க செய்துகொண்டான்.
ஒய்சலர்
காஞ்சியில் தங்கி இருந்த ஒய்சலரோடு சேர்ந்து நோக்கி ஓடிய ராசராசனை சேந்தமங்கலத்தை ஆண்டு வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் பிடித்து சிறை வைத்தான். இதனால் சினமுற்ற மன்னன் ஒய்சல மன்ன் நரசிம்மன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து பாண்டியனையும் பல சிற்றரசர்களையும் வென்று ராசராசனை விடுவித்தான். நரசிம்மன் முயற்சியினால் ராசராசன் மீண்டும் அரியணை ஏறினான்.
இவ்வாறாக ஒய்சலர் செல்வாக்கானது சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் பரவியது. அவர்கள் படை கண்காணிப்பில் இருந்ததால் சோழநாட்டு அமைதி குலைந்திடலாயிற்று.
இராசராசன் தான் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது மகன் மூன்றாம் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டி நாடாளச் செய்திருந்தான்.
மூன்றாம் இராசேந்திர சோழன் ஆட்சியில் கி பி 1246 - 1279 சோழநாட்டின் அரசாட்சி நாளுக்கு நாள் நலிவுரலாயிற்று.
இடையில் ஒரு நிகழ்ச்சி.....
மூன்றாம் இராசேந்திரன் ஒய்சலருக்கு பகைவரான தெலுங்கு சோழர்களுடன் தோழமை கொண்டிருந்தான். அவர்கள் உதவியோடு பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து போய் இரண்டாம் சுந்தரபாண்டியனை வெற்றி கொண்டான். அவனது முடி மூன்றாம் இராசராசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் மூன்றாண்டு காலம் அவன் சோழ நாட்டடையும் பாண்டிய நாட்டையும் ஒரு சேர ஆண்டான்.
இந்த மகிழ்ச்சி சில காலம்தான் நீடித்தது
போர்கள் தொடர்ந்தன
பாண்டியரின் எழுச்சியாலும் சிற்றரசர்களின் சீற்றத்தால் அல்லது ஒத்துழையாமையாலும், ஒய்சலர்களின் படையெடுப்பாலும் சோழப்பேரரசு சீர்குலைந்திடலாயிற்று. பாண்டி நாட்டுக்கு திறை செலுத்தும் அளவுக்கு அதன் ஆக்கம் பலவீனம் ஆகிவிட்டது.
ஆதித்தசோழனால் மலர்ச்சி பெற்ற பிற்கால சோழப் பேரரசு முதலாம் இராசராசனுக்கும் முதலாம் இராசேந்திரனுக்கும் அரும்பாடுபட்டு உருவாக்கிய சோழப்பேரரசு கிபி 13ம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் இராசராசனாலும் மூன்றாம் இராசேந்திரனாலும் வலுவிழந்து உருக்குலைந்து அழிந்தது.
No comments:
Post a Comment