The river Periyar |பேரியாறு | Vanavar |வானவர் | Pathitrupathu |பதிற்றுப்பத்து | The Amazing History of Serar | சேரர்களின் அதிசய வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 14, 2020

The river Periyar |பேரியாறு | Vanavar |வானவர் | Pathitrupathu |பதிற்றுப்பத்து | The Amazing History of Serar | சேரர்களின் அதிசய வரலாறு

The river Periyar   |பேரியாறு | Vanavar  |வானவர் | Pathitrupathu   |பதிற்றுப்பத்து | The Amazing History of Serar  | சேரர்களின் அதிசய வரலாறு 




பேரியாறு Periyar


சேரர்களது குடகு நாட்டில் தோன்றும் காவிரி ஆற்றினால் சோழ நாடு வளம் பெற்றது. பெறுகிறது. பாண்டிய நாட்டில் பசுமை தேக்கும் வைகை ஆறு தென் மலையாள பொறுப்பிலே தோன்றியதாகும். 

சேர நாட்டிலேயே தோன்றி அந்நாட்டிற்கு பெரும்பயன் நல்கி கடலில் கலக்கும் ஆறு பேரியாறு.  சேரநாட்டு ஆறுகளில் குறிப்பிடத்தக்கது இது.  ஆலப்புழை அருகே இரண்டாக பிரியும்.  இந்த ஆற்றில் ஒரு கிளை வடமேற்கில் உள்ள கோயிலிலும் மற்றொன்று தெற்கே போய் இன்னும் பிரிந்து வீரப்புழைக்காயலிலும் திருப்பொருணைத் துறைக்காயலிலும் விழுகின்றன. 

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் சோழ நாட்டு காவிரியும், வைகையும் மட்டுமல்ல வஞ்சிக் காண்டத்தில் இந்த பேரியாறும் பெருமையுறப்  பாடப்பட்டுள்ளது.  சுள்ளியாறு என்று கூறப்படும் பேரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் தான் வஞ்சி நகரம் இருந்தது. வஞ்சிமா நகரம் சேர நாட்டின் தலை நகரமாக திகழ்ந்தது.  வஞ்சி மாநகருக்கு கருவூர் என்ற பெயரும் உண்டு. அதன் கடலோரப் பகுதி முசிறி எனப்பட்டது.

சேரர்களின் சிறந்த துறைமுகப் பட்டினமான முசிறி, நறவு, தொண்டி ஆகிய துறைமுகப்பட்டினங்கள் அப்போது சிறப்புற்றிருந்தன. அந்நாளில் இந்தியாவின் முதன்மை துறைமுகமாக விளங்கியது முசிறி. கிபி 822 இல் ஏற்பட்ட கடல் கோளால் முசிறி அறிந்தது. 

மலை வளமும் மண் வளமும் மிக்கதான சேர நாட்டிலிருந்து மயில் தோகை, மிளகு, தேக்கு மரம், சந்தன மரத் துண்டுகள், வாசனைப் பொருட்கள் யாவும் வெளிநாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

வானவர் Vanavar

வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த மலை உடைய நாட்டினர் ஆதலால் சேரர் வானவர் எனப்பட்டார்கள். வில் வித்தையில் சிறந்து விளங்கிய சேர மன்னர்கள் சோழரும் பாண்டியரும் எப்போதாவது போர் தொடுத்தார்கள். இவளுடைய கொடி விற்கொடி ஆகும். சேர மன்னர்கள் மகிழ்ந்து அணிந்த மாலை பனம்பூ மாலை ஆகும். சேர நாட்டு காடுகளில் யானைகள் மிகுந்திருந்தன. எனவே வலிமைமிக்க யானைப்படையும் கடற்கரை நாடாக கடற்படையும் சேர மன்னர்களுடன் இருந்தன. கடற்படையினால் வெற்றி பெற்ற சேரமன்னன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் என்று புலவர் பெருமக்களால் போற்றிப் புகழப்பட்டான்.  அவருடைய தம்பிதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள். இன்னொரு பெரும் காப்பியமான மணிமேகலை இயற்றிய சீத்தலை சாத்தனார் இவர்கள் காலத்தில்தான்.

பதிற்றுப்பத்து Pathitrupathu

புறநானூறு மூலமும் சிலப்பதிகாரம் மூலமும் மணிமேகலை மூலமும் கூட நாம் சேரர்களை - சேரநாட்டை காணமுடிகிறது. அக்கால நாகரிகத்தை அப்போது இருந்தோர் தம் வீரதீர பராக்கிரமங்களை அறிந்து கொள்ள முடிகிறது. தொல்காப்பியம் மூலம் சில விவரங்கள் கிடைக்கின்றன. எனினும் அக்காலத்தில் தமிழ் வழங்கும் நாடாக இருந்த சேர நாட்டினர்க்கென்றே பிறந்த இலக்கியம் பதிற்றுப்பத்து என்பதுதான்.  முதல் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. வ, உ.  சுவாமிநாத ஐயர் ஆல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் சேர மன்னர்கள் 10 பேர் சிறப்பாக பாடப்பட்டுள்ளனர்.  

இமயம் வரை படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற இமயவரம்பன் குமட்டூர் கண்ணனார் என்ற புலவரால் இரண்டாம் பத்தில் பாடுபடுகிறான். அரபிக் கடலில் ஆர்ப்பரத்துக்கொண்டிருந்த கடம்பர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரை வென்று கடம்ப மரத்தை அறுத்து எறிந்த இவனுடைய தந்தை என்ற சேர மன்னனே முதலாவது பத்தில் பாடப்பட்டிருக்கக் கூடும்.

பாரதப் போரில் பங்குகொண்ட கௌரவ பாண்டவ சேனை களுக்கு பெருஞ்சோறு வழங்கி பெருஞ்சோற்றுதியன் என்ற புகழ் பெற்றவன் அவன். 

வாழ பள்ளி சாசனம் 

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் தன்னுடைய பரசு என்ற கோடாரியை வீசி எறிந்தார்.  அரபிக் கடலில் போய் விழுந்தது அது. அப்போது அங்கே நீர் விலகி நிலம் வெளிப்பட்டது. அதுதான் கேரளம். அவர் வழி வந்தவர்களே கேரளத்திலுள்ள நம்பூதிரிகள்.  அப்பகுதி பார்க்கவே ஷேத்திரம் அல்லது பரசுராம க்ஷேத்திரம் எனப்படுவது இதனால் தான் என்கிற புராணகதை என்றும் சொல்லப்படுகிறது.

வேதியர்கள் சோழமண்டலம் சென்றே கேரளன் என்பானை அழைத்து வந்து முடி சூட்டினர். அதனாலேயே இந்நிலை பகுதி கேரளமாயிற்று என்கிறது "கேரளோர்பத்தி" என்ற நூல். 

பிற்காலக் கேரளத்தில் முதன் முதல் கிடைத்த சாசனமான சேர மன்னர்களின் வாழ பள்ளி சாசனத்தின் மூலம் பல செய்திகள் கிடைத்துள்ளன.  அந்நாளைய சமூகம் பண்பாடு நாகரிகம் போன்றவற்றை அவற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது. 

பலதாரமுறை அனுமதிக்கப்பட்ட காலத்தில் தந்தைக்குப்பின் மகன் ஆட்சிக்கு உரியவன். சொத்துக்கு உரியவன் என்கிற முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 

கோ, கோன், கடுங்கோ  போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்ட சேர மன்னர்களுக்குப்பல விருதுப் பெயர்கள் இருந்திருக்கின்றன. 

சேரர், சேரலர் என்ற சொற்கள் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருஞானசம்பந்தரின் பதிகங்களிலும் சேரமான் என்ற சொற்கள் மெகஸ்தனிஸ் டாலமி பிளினி போன்றோரின் குறிப்புகள் காணப்படுகின்றன. 

பாண்டிய நாட்டு கல்வெட்டுக்கள் சிலவற்றில் மூலம் சேர நாடு பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. சங்க காலத்திற்குப் பிற்பட்ட சேர நாட்டை பற்றிய செய்திகள் விரிவாக கிடைக்கவில்லை. சேரமான் பெருமாள் என்ற மன்னர் சிலர் ஆண்டு வந்திருக்கிறார்கள்.  மாகோதை சேரன் என்பாரும் ஆண்டிருப்பதாக தெரிகிறது. 

"கிருத்துவ நிலப்பரப்புகள்"  என்ற நூலில் காஸ்மாஸ் இண்டிகோ ப்ளீஸ் என்பவர் ஆறாம் நூற்றாண்டிலேயே சேர நாட்டில் கிறிஸ்துவ மதம் பரவியதாக எழுதி இருக்கிறார். 

பிற்காலத்தில் சேரர் காலத்தில் சேர நாட்டில் இந்துமதம் தழைத்திடலாயிற்று. இதற்கு குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள், நாயனார் முதலான குலசேகர சக்கரவர்த்திகள் காரணமாக இருந்தார்கள், சேரநாட்டில் ஆரியர்கள் வருகை மிகுதியான காலம் அது.

No comments:

Post a Comment