துஞ்சிய பாடல் | Thunjiya Padal | The History of Sera Nadu | சேர நாட்டின் வரலாறு
துஞ்சிய பாடல்
கணைக்கால் இரும்பொறை தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரன் கணைக்கால் இரும்பொறை தமிழ்ப் புலமை மிக்கவராக இருந்தார். சிறந்த வேற்படை உடையவனாய் இருந்த அவனுடைய வீரம் பற்றி பொய்கையார் என்ற புலவர் நற்றிணையில் (18) நயம்பட பாடியுள்ளார்.
ஒருமுறை மதம் பிடித்த யானை ஒன்றை அடக்கி பல போர் வீரர்களின் உயிர் காத்த பெருமையாளன் இவன். மூவன் என்ற சிற்றரசனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அதில் வென்ற இரும்பொறை மூவனுடைய பற்களைப் பிடுங்கித் தனது கோட்டையின் வாயிற் கதவில் பதித்து பகைவர்களுக்கு தன்னுடைய வீரம் விளங்கச் செய்தான். இதே இரும்பொறை சோழ மன்னனுடன் போரிட்ட போது இரண்டு மூன்று முறை தோல்வி கண்டு இறுதியாக சிறை பிடிக்கப்பட்டான். அப்போது தாகத்திற்கு , இவன் தண்ணீர் கேட்க காவலர்கள் காலம்தாழ்த்தி தண்ணீர் எடுத்து வர அதை ஏற்க மறுத்து தனது மான உணர்ச்சி தோன்றக் கவிதை ஒன்று பாடினான். புறநானூற்றின் 74 ஆவது பாடலாக இடம் பெற்றுள்ள அக்கவிதை வருமாறு.....
குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்ஆள்ன் றென்று வாளிற் றப்பார்தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்மதுகை யின்றி வயிற்றுத் தீத் தணியத்தாமிரந் துண்ணு மளவைஈன்ம ரோஇவ்வ் வுலகத் தானே
என்றுள்ள அப்பாடலின் கீழே சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணான் ரோடு திருப்பூர் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் கடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கொண்டிருந்தது உண்ணான் சொல்லித் துஞ்சிய பாடல் என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது.
இதில் துஞ்சிய என்ற சொல்லைக் கொண்டு மான உணர்ச்சி காரணமாக காலம் தாழ்த்து வந்த தண்ணீர் அருந்தாமல் அவர் மாண்டு போனான் என்பார்கள் சிலர்.
ஆனால் கணைக்கால் இரும்பொறையின் அருமை நண்பர் புலவர் பொய்கையார் "களவழி நாற்பது" என 40 வெண்பாக்களை சோழனைப் புகழ்ந்து பாடிவிட்டு சோழனிடமிருந்து இரும்பொறைக்கு விடுதலை வாங்கி மீட்டார் என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.
கலிங்கத்துப்பரணி எனும் விக்கிரமசோழன் உலாவிலும் இதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இரும்பொறையின் பாடலில் உள்ளது என்ற சொல்லுக்கு நீர் வேட்கையால் மயங்கி கிடந்த என்று பொருள் கொள்வோமானால் பொய்கையார் மீட்டது சரியாகலாம்.
முதலாம் குலசேகரப் பெருமாள்
கிபி மூன்றாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டவன் இவன். அப்போதுதான் சேர மன்னர்கள் பெருமாள் என்று குறிப்பிடப்பட்டார்கள். 12 ஆண்டு காலம் முதலாம் குலசேகரப் பெருமாள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
முடங்கிடந்த நெடுஞ்சேரலாதன்
சேர மன்னர்களில் ஒருவனான இவன் சிறந்த இவன் தமிழ்ப் புலமை பெற்றிருந்தான் அகநானூற்றில் இவனுடைய கவிதை ஒன்று உண்டு. கடைச் சங்கப் புலவர்களில் ஒருவராக இருந்தார் என்றும் கூறுவார்கள்.
முடங்கிகடநஙத என்று சொல்லும் முடக்குவாத நோயால் அவதிப்பட்ட என்றும் பொருள்தரும். நோயை வென்ற என்றும் பொருள்தரும் ஆனால் இங்கு எப்படி என்று விளக்கம் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
சேரமான் பெருஞ்சேரலாதன்
புலவர்களைப் போற்றும் சிறந்த தலைவனாக ஆட்சி செலுத்தியவன் இச்சேர மன்னன். கரிகால் சோழனுக்கும் இவனுக்கும் வெண்ணிப்போரில் இவனுடைய முதுகில் வேல் பாய்ந்தது முள்ளாயிற்று. புறப்புண் பட்டோமே என்று அதற்காக நாணி வடக்கிருந்து உயிர்நீத்த சிறப்பினன் இவன்.
வெண்குயத்தியார் என்ற பெண்பாற் புலவர் புறப்புண் நாணி வடக்கிருந்து மாண்ட சேரன் சோழன் விட மேலானவன் என்று பாடியிருக்கிறார். கழாஅத் தலையா என்னும் புலவராலும் பாடப்பட்ட இம்மன்னன் காலத்தில் அயல்நாட்டு வாணிபம் சிறப்புற்று விளங்கியது.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
குடக்கோ என்பது சேர மன்னர்கள் பொதுப் பெயராக இருக்கலாம். சிறப்புற ஆட்சி செலுத்திவந்த இவனுக்கும் பெருவிறர்கிள்ளிக்கும் திருப்போர் புறத்தில் பெரும் போர் மூண்டது. போரின் முடிவில் அரசர்கள் இருவருமே மாண்டு போனார்கள்.
சேரனின் உயிர் நீங்கும் நேரத்தில் களத்திற்கு வந்த புலவர் கழாஅத் தலையார் இரண்டும் அரசர்கள் இறுதி நிலை குறித்தும் மனம் கலங்கி பாடினார். இறக்கும் தருவாயில் சேர மன்னன் அவருக்கு ஆரம் ஒன்றைப் பரிசாக தந்து விட்டுகண்மூடினான். இப்போர் நடந்த திருப்போர் என்ற ஊரே இப்போது திருப்பூர் என விளங்குவதாக தெரிகிறது.
சேரமான் இளங்குட்டுவன்
நாடாளும் பொறுப்பில் இருந்தாலும் நற்றமில் கவி இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய மன்னன் இவன். குட்ட நாட்டு இளவரசன் ஆகையால் குட்டுவன் என அழைக்கப்பட்டான். இவன் எழுதிய தமிழ்ப் பாடல் ஒன்று மட்டும் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment