Vennipporgal வெண்ணிப்போர்கள் | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு
வெண்ணிப்போர்கள்
சேரலாதன்
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல் நாடு ஆண்டவன் இச்சேர மன்னன். மூன்றாம் வெண்ணிப்போரில் இவன் மாண்டு போனான். படைவலி மிக்கவரான கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் முதலாம் வெண்ணிப் போர் நடந்தது. இரண்டாம் வெண்ணிப்போர் கணைக்கால் இரும்பொறைக்கும் செங்கணானுக்கும் நடந்தது. மூன்றாம் வெண்ணிப்போர் கரிகால சோழன் பாண்டிய மன்னரோடு தொடுத்ததாகும்.
இப்போரில் சேரலாதன் மட்டுமல்ல பாண்டிய மன்னனும் மாண்டு போனான். இந்த பெரும்போர் பற்றியும் சேர பாண்டிய மன்னர்கள் வீழ்ச்சி குறித்தும் புலவர் முடத்தாமக் கண்ணியார் பாடிய பாடலொன்று பெருநராற்றுப்படையில் காணப்படுகிறது. சேரலாதன் வீழ்ச்சிக்குப் பிறகு சேரன் உதியஞ்சேரல் உடன்பாடு செய்துகொண்டு ஆட்சி நடத்தலானான்.
சேரமான் கோக்கோதை மார்பன்
கணைக்கால் இரும்பொறை சேர நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவன் எனத் தெரிகிறது. இம்மன்னனப் பற்றி புலவர் பொய்கையார் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் காணப்படுகிறது. அப்பாடலிலிருந்து கோக்கோதை மார்பன் கால சேர நாடு செழிப்புடன் இருந்தது எல்லா வகையிலும் என விளங்குகிறது.
ஆட்டன் ஆத்தி
சோழமன்னன் இரண்டாம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்துகொண்டு ஆத்தன் அத்தி கி பி 30 முதல் 32 வரை ஆட்சி செலுத்தியதாக தெரிகிறது. சிறந்த வீரனாக மட்டுமல்ல செந்தமிழ்ப் புலமை மிக்கவனாகவும் நீதி ஒழுக்கம் உள்ளவனாகவும் ஆடல்கலைகளை அறிந்தவனாகவும் விளங்கினான் இவன்.
சோழ நாட்டையும் சேர நாட்டையும் சேர்த்து ஆண்டவன் ஆடல்கலையில் வல்ல மருதி என்பாளைக் காதலித்தான். ஆனால் இதை அறிந்த கரிகாலனின் தாய்மாமனும் பெரும் புலவரும் ஆகிய இரும்பிடர்த்தலையார் என்பார் ஆதிமந்தியையே இவன் மணக்குமாறு செய்தார்.
வேறு யாரையும் அழைக்க விரும்பாத மருதி, கடற்கரை யோர கன்னிமாடத்தில் போய் தங்கி துறவு வாழ்க்கை வாழ்ந்தாள்.
ஒருநாள் ஆட்டன் அத்தியும் ஆதிமந்தியும் காவிரியில் புதுப் புனலாட சென்றனர் அத்தியை வெள்ளம் அடித்து போயிற்று. கடற்கரையோர கன்னி மாடத்திலிருந்து மருதி இவனைக் காப்பாற்றி. தேடி வந்த ஆதிமந்தியிடம் ஒப்படைத்தாள்.. பின்பு அவர்கள் வாழ்வுக்கு தன்னால் துன்பம் வரலாகாது என்று மருதி கடலில் பாய்ந்து உயிர் நீத்தாள். அவள் உடல் அந்தக் கன்னிமாட்த்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment