புலமை பெற்ற புலவர் Wise men in Serar | The History of Sera Nadu | சேர நாட்டின் வரலாறு
புலமை பெற்ற புரவலர்
சேர மன்னர்கள் சிறந்த வீரர்களாகவும் விவேகம் மிக்கவர்களாகவும் செந்தமிழ்ப் புலமை படைத்தவர்களாக இருந்தார்கள். இதனால் அந்த நாளில் புலவர் பெருமக்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அரச பரம்பரையை சேர்ந்த செங்குட்டுவனின் இளவல் இளங்கோவடிகள் பாடினார்.
வேணாடு (திருவாங்கூர்) மார்த்தாண்டவர்மன் திருவிசைப்பா பாடினான். சேரமன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னனுக்கும் போர்மூண்டதில் சேரன் சிறை பிடிக்கப்பட்டான். அவன போது தாகம் தணிய தண்ணீர் கேட்டான் சிறைக் காவலர்களிடம். அவர்கள் தாமதித்தனர். அதன் பிறகு வந்த தண்ணீர் குடிக்க மறுத்து சேரன் இரும்பொறை பாடியதாக புறநானூற்றில் ஒரு பாடல் காணப்படுகிறது.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்று மன்னன் பாடியபாடல்கள் ஒன்று புறநானூறிலும் இன்னொன்று அகநானூறிலும் காணப்படுகின்றன.
பாலைத் திணையைப் பாடுவதில் புகழ் பெற்று விளங்கினான் பெருங்கடுங்கோ என்ற சேர மன்னன். இதனாலேயே பாலை பாடிய பெருங்கடுங்கோ எனப் பெயர் பெற்றான். கலித்தொகையில் பாலைக்கலியும் மற்ற தொகை நூல்களிலேயே பாலைத்திணைப் பாடல்கள் பலவும் பாடிய பெருமையாளன் இவன்.
இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல சேர மன்னர்களும் இனிய தமிழிலே ஈடற்ற புலமைப் பெற்றவர்களாக வாழ்ந்தார்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது புறத்திணை நூல்களில் ஒன்றாகும். சோழனால் சிறையிடப்பட்ட சேரன் கணைக்கால் இரும்பொறையின் அவைக்களப் புலவரான புலவர் பொய்கையாரால் பாடப்பட்டது அந்நூல். சோழன் கோச்செங்கணான் வெற்றிப் பற்றிச் சிறப்பித்து 40 வெண்பாக்களை களவழி நாற்பதாகப் பாடிய அப்புலவர் சேரமான்னனை சிறைமீட்டதாக வரலாறு இருக்கிறது.
"முதுமொழிக்காஞ்சி" இயற்றிய கூடலூர்கிழார் கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மிக நெருங்கிய நண்பராக இருந்தார். இவர் விருப்பபடியே இவர் ஐங்குறுநூறு என்ற நூலைத் தொகுத்துத் தந்தார். அழிசி என்ற அருந்தமிழ் கவிஞரும் சேரர் காலத்தில் சிறப்புற்றிருந்தனர். பிற்கால சேரர் காலத்தில் குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரால் இந்து மதம் வழங்கலாயிற்று.
பெருஞ்சோற்று உதியன்
பகை நட்பு பாராமல் பாரதப் போரில் இரு சாராருக்கும் உணவளித்தவன் என்ற சிறப்பு சேரமன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உண்டு. முரஞ்சியூர் முடிநாகனார் மாமூலனார் ஆகியோர் இவனைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்கள்.
வீரமும் அரசியல் விவேகமும் உடையவனான இவன் குட்ட நாட்டு வஞ்சியைத் தலைநகராகக்கொண்டு சேரநாடாண்டவர்களில் குறிப்பிடத் தக்கவன். அப்போது வேணாட்டுத் தலைவனாக இருந்த வெளியன் மகள் வேண்மாளை இவன் மணந்து கொண்டான். இவர்களுக்கு நெடுஞ்சேரலாதன் குட்டுவன் என்ற பிள்ளைகள் இருந்தார்கள்.
முத்தமிழில் வல்லவனான பெருஞ்சோற்று உதியன் படை நடக்கும்போது இசை முழங்க செய்தான். தென்பாண்டி நாட்டை வென்று தென் கடற்கரைப் பகுதியை தன் நாட்டின் எல்லையாகக் கொண்டிருந்தான். கிழக்குக் கடற்கரைப் பகுதியும் இவர் வசம் இருந்தது. குழுமூரில் நடந்த பெரும் போரில் வென்று கொங்கு நாட்டையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான் பெருஞ்சோற்று உதியன். உதியம்பேரூர், உதியஞ்சேரி ஆகிய ஊர்கள் இவன் புகழ் பொற்றத் தோன்றியவைகள் ஆகும்.
.
சேரமான் மாக்கோதை
சேர மன்னனான இவன் கிமு மூன்றாம் நூற்றாண்டில் ஆண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்போது கோட்டயம் எனக் கூறப்படும் கோட்டையம்பலத்துத் போரில் மாண்டு போனான். எனவே கோட்டையம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாக்கோதை என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறான். பதவி சுகம் மறந்து கோட்டயும் கோவிலில் தங்கி இறைவனுக்கு தொண்டு செய்து கொண்டு உறங்கியதால் இப்பெயர் வந்தது எனக் கூறுவாறும் உண்டு. அகநானூற்றில் இவர் எழுதிய இனிய பாடல் ஒன்று காணப்படுகிறது. கன்னித் தமிழ் வளர்த்த கடைச்சங்கத்திலும் வீற்றிருந்தவன் சேரமான் மாக்கோதை. இவனுடைய மனைவி பெயர் பெருங்கோப்பெண்டு.
பல்லான்குன்றில் குளமூர் உதியன்
ஏறத்தாழ மாக்கோதை காலத்தை சேர்ந்தவனான இவன் உதியன் குடும்பத்தை சேர்ந்த சிற்றரசன். அசோக சக்கரவர்த்தியோடு நட்புரிமை கொண்டிருந்த இவன் நாடு காந்தாரம் முதல் காமரூபம் வரையிலும் இமயம் முதலாக வேங்கடம் ஈராகப் பரவி இருந்ததாக தெரிகிறது. குழுமூர் உதியன் விருந்தோம்பலில் சிறந்தவன். புலவர் பெருமக்கள் இவன் ஆட்சிக் காலத்தில் புகழ் பெற்றிருந்தார்கள்.
செல்லூர் ஆதன் எழினி
ஐயூர் புலவர் முடவவனாரால் போற்றிப் பாடப்பட்ட இவன், எழினி என்ற விருது பெயர் பெற்றவன். புலவர் இளநாகனார் இவனது வீரத்தையும் புகழ்ந்து இவன் படை வீரத்தையும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.
குடகு, துளு நாடு வரை ஆட்சி செலுத்திய ஆதன் எழினியிடம் இடம் வலிமைமிக்க யானைப் படை ஒன்று இருந்தது. கோசர என்பார் போர்க்களத்தில் இவனுக்குத் துணை நின்றனர். குறுநிலசேர குறுநில மன்னர்களில் குறிப்பிடத்தக்கவன் ஆதன் எழினி.
No comments:
Post a Comment