பை எடுத்தவனெல்லாம் வைத்தியன் ஆவானா? Tamil proverbs and simple explanations - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, October 23, 2020

பை எடுத்தவனெல்லாம் வைத்தியன் ஆவானா? Tamil proverbs and simple explanations

தமிழ்ப் பழமொழிகளும் எளிமையான விளக்கங்களும் Tamil proverbs and simple explanations


1. பை எடுத்தவனெல்லாம் வைத்தியன் ஆவானா?

இந்த உலகில் பிறந்தவன் எல்லாம் மனிதனாக விட முடியாது. மனிதன் என்கிற அந்தஸ்து தருகிற புத்திகள் அவனிடம் இல்லாமல் இருப்பதே காரணம். யாரை எந்த நேரத்தில் கவிழ்க்கலாம் என்கிற புத்தியே மனிதனிடம் அதிகம். 

பிறர் உழைப்பில் தான் உடம்பு வளர வேண்டும் என்கிற கோணல் மூளையும் கூட.  அதாவது ஒருவன் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்.  தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்கிற சுயநலம் இல்லாத மனிதனை மனிதனே என்று அழைக்கப்பட்ட தகுதியானவன்.

2. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் 

பொய் சொல்லாமல் வாழ்வதுதான் சிறப்பு என்றாலும் சில நேரங்களில் பொய் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது. இவ்விடத்தில் பொய் சொல்லுவது அப்படி ஒன்றும் குற்றமில்லை. ஆனால் சொல்லுகிற போது அது பொய்யென்று தெரியாதவாறு சொல்ல வேண்டும். அதுவே சிறப்பு. 

சூழ்நிலைகள் ஒருவனை கெட்டவன் என்று குற்றம் சாட்டினால் அவன் நல்லவன் என்று தெரிந்த பட்சத்தில் அவன் நல்லவன் என்று பொய்க் கூறலாம். ஆனால் உண்மையில் இது பொய் அன்று.  உண்மையை காப்பாற்ற மேற்கொண்ட உபாயம்.  ஆகையால் வாழ்க்கையில் பொய் கூற வேண்டிய சந்தர்ப்பங்கள் எழுவது சகஜம். ஆனால் பொய்யை அது பொய் என்று பிறர் உணரா வண்ணம் கூறுவதில் தான் பலமே இருக்கிறது.

3. போனது நினைப்பவன் புத்தி கெட்டவன்

வாழ்க்கையில் நம்முடைய நினைப்பும் செயலும் நிகழ் காலத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.  கடந்த காலத்துக்கு போய்விடக்கூடாது. கடந்து போனதை பற்றி மனசை செலவிட்டால் வீணாவது நேரம்தான். 

கடந்த காலத்தில் மறக்க வேண்டியது - மறக்கக் கூடாது என இரண்டு உண்டு. நம்முடைய தோல்விகள்,  இழப்புகள் அனைத்தும் மறைக்கப்பட வேண்டியவை. காரணம் இது மனசை கவலையால் அழிக்கும் கரையான்.  அதே நேரத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததை மறக்கக் கூடாது. காரணம் இது நெஞ்சுக்குள் எப்படி பார்க்க முயலும் கர்வத்தை அடித்து நொறுக்கும் சாட்டை.

4. மந்திரத்தால் மாங்காய் காய்க்கும? 

மந்திரத்தால் மாங்காய் விழுவது என்பது எப்படிப்பட்ட முட்டாள்தனமோ அப்படித்தான். உழைப்பில்லாமல் பணம் கிடைக்கும் என்பதும். உழைப்பில்லாமலே பணம் கிடைப்பதாக இருந்தால் எவர் தான் உழைக்க ஆசைப்படுவார்கள்? 

உழைப்பு இல்லாவிட்டால் இந்த உலகமே அஸ்தமித்துப் போய் விடாதா? அனைவரும் -  பிச்சைக்காரர்களும் கூட -  இயங்கிக் கொண்டிருப்பதால் தான் இந்த மனிதர்களும் கொஞ்சமேனும் சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.  உழைப்பு ஒன்றே மனிதனை சந்தோஷமா இயங்க வைத்துக் கொண்டிருக்கும் கருவி.

அந்த கருவியை ஒரு பக்கத்தில் ஒடுக்கி வைத்து விட்டால் மனிதன் நிமிர்வதே கஷ்டம். சுருக்கமாக கூறினால் உட்கார்ந்து கொண்டே பணம் சம்பாதிக்க நினைப்பது நம் தலைமீது நாமே கல்லைத் தூக்கிப் போட்டுக் கொள்வதற்கு சமம். 

5. மாதா மனம் எரிய வாழான் ஒரு நாளும்

நமக்கு ஜனனம் தந்த தாயின் மனம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அது நமது கையில்தான் இருக்கிறது.  மாதா நினைக்கிறாள் பிள்ளைகள் நல்லவர்களாக இல்லாவிட்டாலும் ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று . 

ஊருக்கு நல்லவன் என்ற பெயர் எடுத்துவிட்டால் அதையே விழாவாகக் கொண்டாடுவாள். இப்படி தாய் மனம் அறிந்து நடக்காதவன் அவளை வயிறு எரிய வைப்பவன் கண்டிப்பாக உருப்படவே மாட்டான். 

காரணம்,  தாய் ஒருபோதும் சாபமிடுவது இல்லை. ஆனால் அவள் மனதுக்குள் வீசிக்கொண்டிருக்கும் வெப்பம்,  தாய் மனதை நோக நோக செய்பவனை தாக்கி அவனை அழிக்க செய்யும் சக்தி கொண்டது. இது உலகம் அறிந்த உண்மை.

No comments:

Post a Comment