நேதாஜியின் வீட்டுச் சிறை மற்றும் 51வது காங்கிரஸ் மாநாடு Netaji's house arrest and the 51st Congress | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji
வீட்டுச் சிறை
கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டை அடைந்ததும் அவரின் வருகையை எதிர்நோக்கி கொண்டிருந்த போலீஸ் அதிகாரி உத்தரவு ஒன்றை காட்டி வீட்டு வாயிலை கடந்து வெளியே வரக்கூடாது என்றும் உத்தரவில் இருந்தது.
அதனை பொருட்படுத்தாது வீட்டிற்குள் சென்றார் நேதாஜி. தனது தாயையும் உடன் பிறந்தோரின் கண்டு அவர்களுடன் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார். அவர் பிறருக்கு அனுப்பும் கடிதங்களும் பிறரிடமிருந்து அவரும் கடிதங்களும் போலீஸ் அதிகாரிகளால் இடையில் சோதனை செய்யப்பட்டன. நேதாஜிக்கு வீடே சிறை ஆயிற்று.
மீண்டும் ஐரோப்பா
ஒரு மாதம் சென்றது. தந்தையின் பிரிவு துயரமும் அரசின் வீட்டுக்காவல் கொடுமையும் அவர் உடலையும் உள்ளத்தையும் நலிவடையச் செய்தன. மீண்டும் உடல்நலம் பாதித்தது. காசநோய் மீண்டும் தலை காட்டத் தொடங்கியது. அவரது உடல்நிலையை சோதித்த மருத்துவர்கள் மீண்டும் அவரை ஐரோப்பா செல்லும்படி கூறினர்.
1935ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் நாள் மும்பையைலிருந்துவிக்டோரியா என்னும் கப்பலில் ஏறினார். அப்போது பத்திரிகை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். இந்தியாவின் நிலைமை குறித்து எதுவும் கூற விரும்பவில்லை இருப்பினும் இந்திய மக்கள் தங்கள் போர் குணத்தை கொண்டவர்கள் என்றும் கூறினார்.
நகாசு பாஷா உடன் சந்திப்பு
எகிப்து நாட்டின் துறைமுகத்தில் கப்பல் நின்றது. நேதாஜி அங்கு இறங்கி அந்நாட்டின் தலைவராகிய நகாசு பாஷாவை கண்டு அவரோடு கலந்துரையாடினார். அங்கிருந்து பின்பு வியன்னா சென்றார். அங்கு மீண்டும் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு மூன்று மாதங்களில் உடல் நலம் பெற்றார்.
ரோமன் ரோலண்ட் உடன் சந்திப்பு
பிரான்ஸ் நாட்டின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான ரோமன் ரோலந்தைக் காண ஜெனிவா சென்றார். இருவரும் உலக அரசியல் நிலைமை குறித்து உரையாடினர்.
இந்திய போராட்டம்
1920 ஆம் ஆண்டில் தொடங்கி 1934 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் விடுதலைக்காக செய்த கிளர்ச்சிகளை இந்திய போராட்டம் எனும் நூலில் எழுதியிருந்தார். அந்நூலை லண்டனில் ஒரு கம்பெனி வெளியிட்டது. ஆனால் அந்த நூல் இந்தியாவுக்குள் வர கூடாது என அரசு தடை விதித்தது. அதனால் ஐரோப்பிய நாடுகளில் நேதாஜியின் பெருமை பரவியது.
முசோனிலியுடன் தொடர்பு
நேதாஜி ஐரோப்பிய நாடுகளின் அரசியல் முறைகளை ஆராய்ந்து அறிந்தார். அதுமட்டுமின்றி முசோனினிலி உடன் தொடர்பு கொண்டு இத்தாலியின் அரசியல் நடைமுறைகளை நன்கு அறிந்தார்.
டிவேலராவை சந்தித்தார்.
அயர்லாந்தில் இருந்தே டிவேலாராவை சந்தித்தார். அந்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து கொண்டார். அங்கு பல கூட்டங்களிலும் கலந்து கொண்டு இந்தியாவின் நிலைமை பற்றி அவர் சொற்பொழிவாற்றினார். அவருக்கும் இருந்த ஒத்த உணர்ச்சி அவர்களது நட்பை வளர்த்தது. இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கு இடையே இருந்த தொடர்பு பெலப்பட்டது.
ஹிட்லருக்கு மறுப்பு
ஜெர்மனியில் ஹிட்லர் ஆற்றிய உரையில் வெள்ளை நிறத்தவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றும், கறுப்பு நிறத்தவர்கள் அடிமை வாழ்வுக்கு உரியவர்கள் என்றும் கூறியிருந்தார். அதனைக் கேள்விப்பட்ட நேதாஜி விட்டல்பாய் படேல் அவர்களின் படத்திறப்பு விழாவில் கருப்பு நிறத்தவர்கள் எந்த வகையிலும் வெள்ளையர்களுக்கு குறைந்தவர்கள் அல்லர் என்பதை சுட்டிக் காட்டினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரத்தையும் அவர் தமது உரையில் வன்மையாக கண்டித்தார்.
இந்தியா திரும்பினார்
1936 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க நேதாஜிக்கு அழைப்புக் கிடைத்ததும் சிறையிலிருந்து காரணத்தால் அது இயலாமல் போய்விட்டது. தற்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து தலைமை ஏற்க அழைப்பு விடுத்தனர். எனவே தலைவர்களின் அழைப்பையும் இந்திய மக்களின் விருப்பத்தையும் மதித்து நேதாஜி இந்தியா திரும்பினார்.
51-வது காங்கிரஸ் மாநாடு
1938 ஆம் ஆண்டில் ஹரிபுராவில் விழாவில் நடைபெற்ற 51வது காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜியை காங்கிரஸின் தலைவராக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர். 51வது காங்கிரஸ் மாநாடு என்பதை காட்டும் வகையில் 51 எருதுகள் பூட்டி அலங்காரத் தேரில் நேதாஜியை அமர்த்தி பேரணியாக அழைத்து வந்தனர். 51 நுழைவாயில் கொண்டதாக பந்தல் அமைக்கப்பட்டு 50 கொடிகள் ஏற்றப்பட்டன. மாநாட்டு பந்தலை அடைந்த நேதாஜியை ஆரவார முழக்கங்களுக்கு இடையே மேடைக்கு அழைத்து சென்று தலைவர் இருக்கையில் அமரச் செய்தனர். நேதாஜி தலைமையில் 51 தேசிய பாடல்கள் பாடப் பெற்று மாநாடு மாபெரும் எழுச்சியோடு தொடங்கப்பட்டது.
நேதாஜியின் வீட்டுச் சிறை மற்றும் 51வது காங்கிரஸ் மாநாடு Netaji's house arrest and the 51st Congress | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji
No comments:
Post a Comment