சில அசத்தலான பழமொழிகளும் அதன் அற்புதமான தமிழ் விளக்கங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, October 15, 2020

சில அசத்தலான பழமொழிகளும் அதன் அற்புதமான தமிழ் விளக்கங்களும்

சில அசத்தலான பழமொழிகளும் அதன் அற்புதமான தமிழ் விளக்கங்களும் Some stunning proverbs and its wonderfulTamil interpretations.


1. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை 

ஆசைக்கு அளவில்லை. அதனால் விபரீதமான ஆசைகள் எல்லாம் வருகிறது. ஆசைப்படுவது தவறு இல்லை. ஆசை இல்லை என்றால் வாழ்க்கையில் சுவராசியம் இல்லை. ஆசை தான் வாழ்க்கையை போரடிக்காமல் காப்பாற்றி வருகிறது. 

இருந்தாலும் ஒரு ஆசை நிறைவேறும் முன்னே இன்னொரு ஆசைக்கு ஆசைப்படக்கூடாது. இரண்டு ஆசைகளையும் அடைய முயலும்போது இரண்டில் ஏதாவது ஒன்று அடிபட்டுப் போய்விடுகிறது. மீசையில் படாமல் எப்படி கூழ்  குடிக்க முடியாதோ,  அப்படியே ஒரு ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அதற்கான உழைப்பைத் தராமல் ஆசை நிறைவேறாது.

2. கெட்டார்க்கு உற்றார் கிிளையிலும் இல்லை

நம்மோடு இருக்கும் உறவு காப்பாற்றப்பட்டு சிதறி ஓடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உறவு ஒன்று வேண்டுமெனில் நல்லவன் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்லவன் ஒருவன் அவன் எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும் வல்லவனாக வேண்டும் என்றால் அவன் எந்த நிலையிலும் கெட்டவனாக மாறாமல் இருப்பது தான் வழி.  நல்லவனுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவி செய்ய உறவு இரண்டு கைகள் நீளமாக நீட்டி காத்திருக்கிறது. அவனை கெட்டவனாக இருக்கும்போது கண்டதைப் போல எந்த உறவும் காத தூரம் ஓடுவது உறுதி. 

ஏனென்றால் கெட்டவன் ஒருவனால் என்னென்ன கேடுகள் விளையும் என்பதை கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாது. கெட்டவன் ஒரு உறவு கொண்டால் நல்லவனும் கெட்டவனும் என்பது நிஜம்.

3. கேட்டதையெல்லாம் நம்பாதே
நம்பியதை எல்லாம் சொல்லாதே


கேட்டதை எல்லாம் ஆதாரபூர்வமாக கேட்டிருக்கவேண்டும் சொல்ல வேண்டியது எல்லாம் ஆதாரப்பூர்வமாக சொல்லவேண்டும். ஆதாரபூர்வமாக கேட்கப்படாத ஆதாரபூர்வமாக சொல்லப்படாது எதுவுமே வதந்திகளே.

அரைகுறையாக கேட்டதை நம்பி பிறரிடம் சொல்வதைவிட சொல்லாமல் இருப்பது மேல்.  அரைகுறையாக நம்புவது எல்லாம் முழுமையாக கைவிடுவது மேல், ஏனென்றால் கேட்டதும், நம்புவதும் பொய்யாக இருக்கும் என்பதால் அதை பிறர் நம்புவதும் சொல்லுவதும் பயங்கரமான பின்னணியாக மாறிவிடும்.

No comments:

Post a Comment