மிகச் சிறந்தத் தமிழப் பழமொழிகளும் அதன் அருமையான விளக்கங்களும் The best Tamil proverbs and its wonderful interpretations
1. கோள் சொல்லி குடியைக் கெடுப்பதா?
மனிதனிடம் இருக்க கூடாத கெட்ட குணங்களில் ஒன்று கோள் மூட்டுவதுதன் மூலமாக நாம் மிகச் சிறந்த நாடக நடிகர்கள் ஆகிவிடுகிறோம். ஒருவரிடம் நன்றாக பேசி நல்லவர்கள் போல் நடிக்கிறோம். அவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாதது பொல்லாதது சொல்லி வைக்கிறோம். இதன்மூலமாக அவரைப்பற்றி கெட்ட எண்ணங்களை விஷமுள்ளாக பிறர் நெஞ்சில் விதைத்தும் விடுகிறோம். அப்படியே நட்பு இழந்து போகும் நிலையில் அவர் குடியை கெடுத்தும் விடுகிறோம். இப்படிக் கூறுபவர்கள் ஒன்றை கவனிக்க..
நம்மைப்பற்றி கோள் மூட்டுபவர்களும் இருப்பார்கள். ஆகையால் நாம் புதைக்க முயலும் விஷமுள் நம்மையே குத்திக் காயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
2. கொசுவுக்கு பயந்து குடிபெயர்ந்து போவதா?
வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் கலந்த கடல். கடலில் நல்ல தண்ணீரையும் உப் பையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாதது போல இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் பிரிக்க இயலாது. வாழ்க்கையில் நாம் கற்க வேண்டிய முதல் பாடம் இது.
கஷ்டமான வாழ்க்கை அப்பா இது என்று வாழாமல் இருந்துவிடுவது வாழ்க்கை ஒரு பந்தயம் அதை ஒரு சாலை ரோடு எதிர் கொள்ள வேண்டியதுதான் ஆண்மைத்தனம் வேண்டாம் வேண்டாம் பந்தயத்தில் கலந்து கொண்டால் தோல்வி நிச்சயம் என்று ஓடுவது நிச்சயமாக அழகல்ல
3. கை நிறைந்த பெண்ணை பார்க்கிலும் கண் நிறைந்த கணவனே மேல்
பணக்காரர்கள் எல்லோரும் சந்தோஷமாக இல்லை. ஏழைகள் அனைவருமே கவலையாக இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது பணத்தின் மூலம் சந்தோஷத்தை வாங்க முடியாது என்று.
நிறைவான வாழ்க்கைக்கு தேவையானது பணமா குணமா என்று போட்டியிட்டால் வெல்லுவது கண்டிப்பாக குணமாக தான் இருக்கும். இன்று வரும் பணம் நாளை காலியாகிவிடலாம். குணம் மனத்தை தொடுகிறது. மணவாழ்க்கையில் பொன்னால் சந்தோஷத்தை நிரப்பி விட முடியாது.
பொன்னின் மீதே கண் இருக்கும் போது மனம் மாறிப் போகிறது. மாறிப்போன மனம் குணத்தை வரவழைக்காது. குணம் இல்லாத மனசு வாழ்க்கையில் நிம்மதி தராது. வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றால் வாழ்ந்து என்ன பயன்?
No comments:
Post a Comment