நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji | நேதாஜியின் சிறை வாழ்க்கை Netaji's prison life - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 3, 2020

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji | நேதாஜியின் சிறை வாழ்க்கை Netaji's prison life

நேதாஜியின் வாழ்க்கை  வரலாறு Biography of Netaji  | நேதாஜியின் சிறை வாழ்க்கை Netaji's prison life



சிறைக்குள் சுதந்திரநாள் 

1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை மூலம் நாடு முழுவதும் சுதந்திர நாளாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். நேதாஜியை கொல்கொத்தாவில் சிறப்பாக கொண்டாட விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஜனவரி மாதம் 23ஆம் நாளன்று வாங்க அரசால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு முடிவுக்கு வந்தது ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். 

நேதாஜி சிறையில் அடைக்கப்பட்ட விஷயம் வங்க மக்களுக்கு மன வருத்தத்தை தோற்றுவித்தது. சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் செய்து விட்டது குறித்து அரசினர் பெருமை கொண்டனர். ஆனால் குறித்த நாளன்று நேதாஜி தான் திட்டமிட்டவாறு கொடியேற்றி சுதந்திர நாளை கைதிகளைக் கொண்டு சிறைக்குள் சிறப்பாக கொண்டாடினார். 

வட்டமேசை மாநாடு 

1931 ஆம் ஆண்டு செப்டம்பரில் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் காந்தி அடிகள் சரோஜினி நாயுடு மதன் மோகன் மாளவியா ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பரிபூரண சுயாட்சி வேண்டும் என்று வட்டமேசை மாநாட்டில் காந்தி அடிகள் கேட்டார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்றுக்கொள்ளாமல் தீண்டாதோர் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தொடங்கியது. ஏமாற்றமடைந்த இந்திய தலைவர்கள் தோல்வியோடு நாடு திரும்பினர். வட்டமேசை மாநாட்டில் எந்த பயனும் ஏற்படாது செல்ல வேண்டும் என்று நேதாஜி கூறியது முற்றிலும் உண்மையானது.

மும்பையில் கைது 

காந்தியடிகள் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்ததும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அவசர சட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படலாயின. வங்காள அவசர சட்டம் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது.  அதனால் நேரு சிறை வைக்கப்பட்டார். 

நாட்டு தலைவர்கள் அனைவரும் மும்பையில் கூடி நாட்டில் நடைபெறும் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சியை அகற்றி விட வேண்டும் என்று நேதாஜியும் வரவழைத்தனர். 

அரசின் போக்கினைக் கண்டித்து மீண்டும் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்க முடிவு செய்து அரசு பிரதிநிதிகள் தெரிவித்தார். அப்போரை தொடங்கும் முன்னரே தடுக்க கருதி அரசு பிரதிநிதி தலைவர்கள் அனைவரையும் சிறை செய்யுமாறு மாகாண அரசுக்கு கட்டளையிட்டார் 

1932 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் காந்தியடிகளும் நேதாஜியும் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.  காந்தியடிகளை ஏரவாடி சிறைக்கும் நேதாஜி சியோனி சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறையில் நோய் 

சியோனி சிறையில் நேதாஜியின் உடல் நிலை சீர் கேடு  அடைந்தது. பழையபடி காசநோய் கண்டிடவே,  அவரை ஜபல்பூர் சிறைக்கு மாற்றினர். அங்கு அவரது நோய் கட்டுபடு வதற்கு பதிலாக அதிகரிக்கவே செய்தது. அதனால் அவரை  சென்னை சிறைக்கு அனுப்பியது. அங்கு மருத்துவர் மூலம் பரிசோதனை செய்தபோது காசநோய் ற்றும் நிலைக்கு வந்தது. 

ஐரோப்பா அனுப்பப்பட்டார் 

நேதாஜியின் காச நோயை குணப்படுத்திவிட ஐரோப்பாவுக்கு அனுப்பிட அரசு முடிவெடுத்தது.  அச்சமயம் தனது பெற்றோரைக் காண வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.  அதற்கு தடை விதித்து ஆயிரத்து 33 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் நாளன்று மும்பை துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டனர். 

வியன்னாவில் சிகிச்சை 

ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகரமான வியன்னாவில் உள்ள பெருநகர மருத்துவ நிலையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இடமாற்றத்தால் நேதாஜி உடல் நலம் தேறியது. 

பல நாடுகள் சென்றார் 

நாளடைவில் வியன்னா-பகுதி அவருக்கு வெறுப்பினை உண்டாக்கவே மன அமைதி பெறுவதற்காக வேறிடம் செல்ல விரும்பினார். ஜெர்மனிக்கு செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்திருந்ததினால் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். பின்னர் சுவிட்சர்லாந்து இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

ரோமாபுரியில் சில நாட்கள் தங்கியிருந்து பாசிச இளைஞர் படையின் அணிவகுப்புத் பார்வையிட்டார். அதன் பின்பு  யுகேஸ்லாவிற்கு சென்றார். சென்ற இடமெங்கும் அவர் இந்தியாவை பற்றி ஆங்கிலேயர் செய்துவந்த பொய் பிரசாரத்தை மறுத்தார்.  இந்தியாவின் உயர்வையும் இந்திய மக்களின் நாகரிக சிறப்பையும் இந்திய விடுதலைப் போரின் தன்மையை விளக்கி பிரசாரம் செய்தார். 

அரசின் முயற்சி 

ஆங்கிலேய அரசு நேதாஜியின் பிரசாரத்தை தடுக்கவும் அவரைப் பற்றி பொய் செய்திகளை பரப்ப முயன்றனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. 

தந்தையின் மறைவு 

நேதாஜி யூகோஸ்லேவியா பயணத்தை முடித்துக்கொண்டு வியன்னாவுக்கு மீண்டும் வந்தார். அப்போது அவரது தந்தையார் மரணம் அடையும் தருவாயில் இருப்பதாக ஒரு தந்தி செய்தி வந்தது. அச்செய்தி நேதாஜியை துணுக்குறச் செய்தது.  உடனே அவர் விமானம் ஏறி 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் நாள் கராச்சி வந்து சேர்ந்தார். அப்போது தந்தையார் மறைந்து விட்ட செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றார்.

நேதாஜியின் வாழ்க்கை  வரலாறு Biography of Netaji  | நேதாஜியின் சிறை வாழ்க்கை Netaji's prison life

No comments:

Post a Comment