மோகன கல்லானாலும் பளு ஏறினால் உடையாதா? - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்
1. மோகன கல்லானாலும் பளு ஏறினால் உடையாதா?
வாழ்க்கையில் ஆசைகள் இருக்கலாம். ஆனால் ஆசைகளே வாழ்க்கை ஆகிவிட்டால்? வாழ்க்கை என்று கூறி கொள்கிற மாதிரியாக வாழ்க்கை இருக்காது என்பது உண்மையில் சுய உருவம். ஒரு வண்டியில் கூட எந்த அளவுக்கு பளு ஏற்ற முடியுமோ அந்த அளவுக்கு தான் பளுயேற்ற வேண்டும்.
அதிக பளு வண்டியின் அச்சாணியை முறித்து விடும். அதிக உழைப்பு ஆரோக்கியத்தை இழக்க வைக்கும். அதிக பணம் ஆபத்தை வரவழைக்கும். அதிக ஆசையும் வாழ்க்கை நாசமாகிவிடும். அப்புறம் வாழ்க்கையில் மிஞ்சக் கூடியது எதுவும் இருக்காது.
ஆசைகள் வாழ்க்கையில் குளறுபடி உண்டாக்கும். பாஷைகள். நமக்கு எல்லா பாஷைகளும் தெரியும் என்பதில் பெருமை இல்லை. தெரிந்த பாஷைகள் அனைத்தும் முழுமையாக ஒழுங்காக தெரியுமா என்பது அவசியம். ஆக ஆசைகளுக்கு அளவில்லை என்றாலும் அதில் நிறைவேறக்கூடிய ஆசைகள் தான் எத்தனை? எத்தனை?
நம்முடைய வாழ்க்கை ஏற்றத்துக்கு ஏற்ப நாம் ஆசைப்படும் ஆசைகள் தான் எத்தனை? எத்தனை? ஒன்றா இரண்டா? கணக்கில்தான் அடக்க முடியுமா?
ஆசைப்படுங்கள் தவறில்லை. ஆசை தான் வாழ்க்கையின் அடிக்கரும்பு. அதே நேரத்தில் ஆசைகளின் எண்ணிக்கை கூடி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைவேறாத ஆசைகளைப் பற்றி எண்ண மட்டும் அல்ல. கனவு காணாதீர்கள். விரலுக்கு ஏற்ற வீக்கம் தகுதிக்கு முடிந்த ஆசை களாக பாருங்கள். ஒரு ஆசை நிறைவேறும் முன்னர் இன்னொரு ஆசைக்கு அஸ்திவாரம் போடாதீர்கள். வாழ்க்கை அந்த பளுவைத் தாங்கிக் கொள்ளாது.
2. மௌனம் மலையளவு சாதிக்கும்
மௌனம் சாதிக்கக் கூடியது குன்றளவுக்கு அல்ல. மலை அளவு என்பது அனுபவப்பட்டவர்களே ஒப்புக் கொள்வதாகும். பேச்சு சாதித்த சாதனைகளை எல்லாம் மௌனம் சாதிக்கிறது என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
ஆனால் உண்மையை எவரும் துணி போட்டு மறைத்து விட முடியாது. உதாரணத்திற்கு ஒரு மேற்கோள் காட்டுகிறேன். ஒரு அலுவலகத்தில் ஒரு மேலதிகாரி தனது ஊழியனை அழைத்து, என்ன நீ உன் வேலையை ஒழுங்காக செய்ய வராதா? எல்லாமே தப்பு தப்பாக இருக்கிறது. நீ எதற்கும் லாயக்கற்றவன் என்று திட்டுகிறார்.
உடனே அந்த ஊழியன் ஆமாம் சார். என்னால் இப்படித்தான் வேலை செய்ய முடியும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று அலட்சியமாகப் பேசி விட்டால் போயிற்று. மேலதிகாரியின் கோபம் மேலும் அதிகரித்தது ஊழியனின் வேலைக்கே ஆபத்து உண்டாக்கும் அளவுக்கு போய்விடும்.
அதே நேரத்தில் அந்த ஊழியன் ஏதும் பேசாமல் மேலதிகாரி கூறுவது நிஜம் என்பது போல மௌனமாகி போனால் அவன் மேலதிகாரியின் நெஞ்சில் இமயமாய் உயர்ந்து போகிறான் என்பதோடு தனது வேலையை காப்பாற்றிக் கொள்கிறான் என்பது உணரப்பட வேண்டியது.
மௌனம் என்கிற ஆயுதத்தை கையில் ஏந்தி கொண்டால் எதிர் வரும் பிரச்சினைகளை தூள் தூளாக்கி விட்டு சாதனைகள் புரியலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment