யதார்த்தவாதி வெகுஜன விரோதி - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்
யதார்த்தவாதி வெகுஜன விரோதி
வாழ்க்கையில் பலரும் மிகவும் யதார்த்தமான வர்களாக வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாக பிறருக்கு தென்பட மாட்டார்கள். ஏனென்றால் யதார்த்த வாதியின் போக்கு சிலருக்கு வேம்பாகவே கசக்கின்றது. ஏனென்றால் அவர்களால் நல்ல யதார்த்த வாதிகளாக இருக்க முடிவதில்லை. அதனால் யதார்த்தவாதி அவர்களின் கண்ணுக்கு விரோதியாக தெரிகிறான். கோவணம் கட்டாத ஆசாமிகள் இருக்கிற ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் தெரிவதுபோல.
அப்படியானால் ஒருவன் தனது யதார்த்த தன்மையை விட்டுக்கொடுத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப வளைந்து கொடுக்கத் தான் வேண்டுமா? இதில் வளைந்து கொடுத்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. வளைந்து கொடுப்பதன் மூலம் நாம் நிமிர முடியாதவர்களாக ஆகிவிடக்கூடாது இல்லையா? அப்படி என்றால் பிறரின் விரோதம் சம்பாதிக்காமல் வாழும் வழிதான் என்ன? இருக்கிறது யதார்த்தத்தின் சதவீதத்தை கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சதவீத குறைச்சல் மனசாட்சிக்கு விரோதமாக ஆகிவிடுகிற அளவுக்கு குறைந்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவை. மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப அவர்களின் இயல்பை நமது எதார்த்த தன்மையால் மாற்றி அமைக்கக்கூடிய முயற்சிதான் நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு கால அவகாசம் தேவைப்படலாம் ஒழிய நமது இயல்பு- பண்பு அடிபடாமல் இருக்கும்.
No comments:
Post a Comment