யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொணடது போல - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளி்மையான விளக்கங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, October 30, 2020

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொணடது போல - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளி்மையான விளக்கங்களும்

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொணடது போல - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளி்மையான விளக்கங்களும்


யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல 

மனக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு நா(க்கு) கட்டுப்பாடும் மிக மிக அவசியம். நாக்கிலிருந்து புறப்படும் பேச்சு என்பது கீழே இருந்து மேல் நோக்கி போன பந்தாய் மறுபடி கீழேயே வருவது அல்ல. 

ஆகையால் எதற்கு பேச்சுக் கொடுத்தாலும் அந்தப் பேச்சு சரியானது தானா?   முறையானதுதானா என்பதை மனதில் கொண்டு ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்தானே?  

எவருக்காவது எதையாவது செய்து கொடுப்பதாகச் சொல்  கொடுத்தால் அதை செய்து கொடுத்துவிட வேண்டும்.  செய்து கொடுக்காவிட்டால் பேச்சு கொடுத்தவருக்கு நிம்மதி இருக்காது.  பேச்சு வாங்கியவருக்கு நிம்மதி இருக்காது. 

பின்னால் "எதற்குத்தான் அவருக்கு வாக்கு கொடுத்தோமோ? என்று வருந்தக் கூட கூடிய நிலை உருவாகக் கூடிய அளவுக்கு வைத்துக்கொள்ளக்கூடாது. இதற்கு பெயர்தான் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்கிற கதையாகும். ஏனென்றால் முடிகிற காரியத்துக்கு மட்டுமே வாயை திறக்க வேண்டும். 

இந்த காரியத்தை என்னால் கண்டிப்பாக செய்து தர முடியும் என்று 100% உறுதியாக இருந்தால் மட்டுமே இதற்கு வாக்குக் கொடுத்து அதை நிறைவேற்றியும் கொடுக்க வேண்டும். சுருக்கமாக கூறினால் எந்த சந்தர்ப்பத்தில் வாயை திறக்க வேண்டும் தெரியுமா?  அவசியம் ஏற்பட்டால் மட்டுமே. 

நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் மத்தியில் நல்ல மதிப்பும் பெயரும் பெறவேண்டும் என்பதுதான் உங்கள் லட்சியம் எனில் பேச்சுக் கொடுக்க வாய் திறக்கும் முன் யோசனை செய்யுங்கள். 

சரியாக - வம்பில்லாமல்தான் பேசப்போகிறோமா?
நம்மால் முடிவதை மட்டும் தான் பேசப் போகிறோமா?

No comments:

Post a Comment