அருமையான தமிழ் பழமொழிகளும் அசத்தலான விளக்கங்களும் Fantastic Tamil proverbs and stunning explanations
கௌளி ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் தான் மாத்திரம் கழுநீர்ப் பானையில் விழும்
நாக்கில் தேன் தடவிக்கொண்டு இப்படி செய் அப்படி செய் என்று ஊருக்கு உபதேசம் செய்கிறோம். ஆனால் அதன்படி நாம் செய்கிறோமா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. திருடாதே என்று மகனுக்கு புத்தி கூறும் அப்பா தன் ஆபிசில் லஞ்சம் வாங்குவார். ஜாக்கிரதையாக நடந்து போ என்பாள் அம்மா. அவளே அஜாக்கிரதையாக கீழே இடறி விழுவாள் அறிவுரை வழங்கும் விஷயத்தில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று உண்டு. அது, இப்படி அறிவுரை வழங்க எனக்கு யோக்கியதை இருக்கிறதா?
2. ஜென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது
ஒருவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவன் தனது சின்ன வயதில் கற்றுக்கொண்ட பழக்கவழக்கங்கள் மூலமாகத்தான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதால் நமது சின்ன வயசு குணங்கள் நமது ஆயுள் வரை பசுமரத்தில் அடித்த ஆணியாக நெஞ்சில் ஒட்டிக்கொண்டு விடுகிறது. அதனால் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து நற்குணங்களையும் விடாப்பிடியாக கற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று தீய செயல்களை ஒதுக்கி தள்ள வேண்டும். ஆரம்பத்தில் சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டவன் அதை தனது சாவு வரை தொடர்ந்து கொண்டிருப்பான். இடையில் நிறுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும். ஆக குழந்தைப்பருவ பழக்கங்கள் காலமெல்லாம் தொடரும்.
3. சாட்டை இல்லாமல் பம்பரம் ஆடுமா
சாட்டையில்லா பம்பரம் சுற்றுவது துன்பம் இல்லாத வாழ்க்கை கிடைக்காது துன்பம் இல்லாத வாழ்க்கை சுவைக்காதும் கூட. துன்பம்தான் இன்பத்தின் அஸ்திவாரம். துன்பங்கள் நமக்கு அனுபவங்கள் ஆகும் போதுதான் அது போன்ற துன்பங்களை தொடராமல் நம்மை நாம் காப்பாற்றிக் கொள் கிறோம். வாழ்க்கையில் இன்பம் மட்டும் இருந்தாலும் அது அலுத்துப் போய் விடும். இனிப்பு சாப்பிட்டு கொண்டே இருந்தால் அது திகட்டி விடுவது போல சாட்டை இல்லாமல் பம்பரம் சுற்றுவது என்பது போலத் துன்பம் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் சுற்றுவது என்பது மட்டுமல்ல பாடமும் கூட.
4. சின்ன சின்ன பேச்சும் சிரித்தாற் போன்ற வார்த்தைகளும்
இந்த மொத்த உலகத்தையும் மயக்கி நம் மடிக்குள் போட்டுகொள்ளலாம். இதற்கு மாயமோ மந்திரமோ தந்திரமோ தேவையில்லை. சிரிப்பு என்னும் சொக்குப்பொடி போட்டால் போதும். நம் பேச்சின்போது சிரிப்புக்கும் புன்னகைக்கும் மயங்காத மனித உள்ளம் எதுவும் இருக்காது. இது சிரிப்பின் பலம் பேசுகின்ற பேச்சு சின்னதாக அழகாக இருக்கவேண்டும் மல்லிப்பூ போல. அதுதான் மனித உள்ளத்துக்கும் சுகம்.
வளவள என்று பேச்சு எதிராளியை கதிகலங்க வைக்கும். இப்பேச்சு எத்தனை நேரம்தான் தொடரும்? சிக்கனமான வார்த்தைகளில் சிரிப்பு அல்லது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு புதிதாக அறிமுகமான அவர்களுக்குக் கொடுங்கள். நட்பு வளர்வது நிச்சயம்.
சீச்சி என்கிற அதுவும் இந்த வாய்தான் சிவசிவ என்கிற துமிந்த வாய் தான்
இந்த வாயின் இடையில் இருக்கிறதே நாக்கு அதற்கு நரம்பு கிடையாது. தந்தியில்லா வீணை போல. அதனால் எத்தகைய வார்த்தைகளைக் கொண்டும் ஆனாலும் வேண்டுமானாலும் இது உருவாகிக்கொண்டே இருக்கும். இதனால் தெய்வத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டுள்ளதாக காட்டிக்கொள்ள இந்த வாய் "சாமி கடவுளே" என்று கெஞ்சும். காரியம் ஆகும்வரை. அப்புறம் சீச்சீ கருமம் என்றெல்லாம் ஏசுவும்.
இது எப்படி இருக்கிறது தெரியுமா? பிச்சைக்காரனுக்கு அன்போடு சோறு போட்டு பிறகு அவனை கன்னத்தில் அடிப்பது போல. இதுதானா பண்பு? நாக்கை நல்ல வார்த்தைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நாகரிகம்.
No comments:
Post a Comment