சைமன் குழுவே திரும்பிப் போ Go back to the Simon group | நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji
சைமன் குழுவே திரும்பிப் போ
1928ஆம் ஆண்டு 7 பேர் கொண்ட சைமன் குழுவை ஆங்கில அரசு இந்தியாவிற்கு அனுப்பியது. இதில் ஒருவர் கூட இந்திய உறுப்பினராக இல்லை. அதற்காக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது. லாலா லஜபதிராய் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் "சைமன் குழுவை திரும்பிப்போ" என்று முழங்கி தங்களது உணர்வுகளை வெளியிட்டனர்.
இதை கண்ட ஆங்கில அரசு கடும் அதிர்ச்சி கொண்டு குதிரைப் படையை அனுப்பி கூட்டத்தை கலைக்குமாறு ஏற்பாடு செய்தது. தாக்குதலால் கூட்டம் சிதறி ஓடியது என்றாலும் பெரும்பாலான தொண்டர்கள் தாக்குதலுக்கு அஞ்சாது துணிந்து நின்று தொடர்ந்து முழக்கமிட்டனர்.
லாலா லஜபதிராய் ஆங்கிலேய போலீசாரின் கம்பால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தி அவர் தரையில் விழுந்து உயிரை இழந்தார். இதன் விளைவாய் விடுதலைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. சூழலைப் பயன்படுத்திக்கொண்டு புத்துணர்வோடு போராட்டம் நடத்தி பூரண சுதந்திரம் பெற்று விட வேண்டும் என்று நேதாஜி நினைத்தார்.
அவரது கருத்துக்கு உடன்பட்டு பல காங்கிரஸ் தலைவர்கள் காந்தியடிகளுக்கு கடிதம் எழுதினர். காந்தியடிகளோ அகிம்சை வழியில்தான் சுதந்திரம் பெறவேண்டும் என்று கூறி கடிதத்திற்கு பதில் எழுதினார். இதனால் வெறுப்புற்ற நேதாஜி இனி தனி வழிகளில் சென்று தான் இந்திய நாட்டின் விடுதலையை பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
கொல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு
1928ஆம் ஆண்டு டிசம்பரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கொல்கொத்தாவில் கூடியது. மாநாட்டின் தலைவர் ஆகிய மோதிலால் நேரு 16 குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். நேதாஜி தொண்டர் படை குதிரைப்படை காலாட்படை சைக்கிள் படை பெண்கள் படை என நான்கு குதிரை மீது அமர்ந்து மாநாட்டை நோக்கி சென்றார். மாநாட்டு பந்தலில் தொண்டர்கள் அணிவகுத்து நிறுத்தி தலைவரை வணக்கம் செலுத்தி வரவேற்ற காட்சி மாநாட்டிற்கு வந்திருந்தவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் இருந்தது.
மாநாட்டின் தலைவராக மோதிலால் நேரு குடியேற்ற நாட்டு உரிமை சட்டத்தை வெளியிட்டார்.
நேதாஜி நேரு இருவரும் அதை மறுக்க முனைந்தனர். இருதரப்பினரும் விட்டுக்கொடுக்க இணங்கவில்லை. மோதிலால் நேருவினால் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் இரு தரப்பினரின் கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினார்.
அவர் இரு தரப்பினரையும் ஒன்றுபடுத்த விரும்பி 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் நாளுக்குள் ஆங்கிலேய அரசு முழு உரிமை வழங்கினால் அதனை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். இல்லையேல் முழு விடுதலையை வற்புறுத்தும் என்றும் நடுநிலையான தீர்மானத்தை தாமே முன்மொழிந்தார். நேதாஜி இந்த நடுநிலை தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார். பிற்போக்கு நிலைக்கு காந்தியடிகள் இறங்கி விட்டார் என்றே அவர் மீது கடும் கோபம் கொண்டார்.
கைதிகள் நாள்
இதற்கிடையில் அரசின் அடக்கு முறையினால் இளைஞர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையாக நடத்தப்பட்டனர். அந்த கொடுமையை கண்டிப்பதற்காக 1929 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் அரசியல் கைதிகள் நாள்
கொண்டாடப்பட்டது.
அரசு அதனை தடுக்க விரும்பி நகர எல்லைக்குள் ஊர்வலம் கூட்டம் ஏதும் நடக்கக் கூடாது என்று தடை விதித்தனர். தடையை மீறி நேதாஜி ஹிஜாரி பாக்கிற்கு ஊர்வலத்தை அழைத்து சென்று கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகள் நடத்தும் கொடுமையினையும் ஊர்வலத்தில் போலீசார் நடத்தும் விதத்தையும் கடுமையாக கண்டித்தார். கண்டிப்பினை ஏற்றுக் கொள்ளாத வங்காள அரசு அவர் மீது விரோதக் குற்றம் சுமத்தி வழக்கினைத் தொடர்ந்தனர்.
No comments:
Post a Comment