நேதாஜியின் வாழ்க்கை வரலாறு The History of Netaji | நேதாஜியின் ஆன்மீக ஈடுபாடு மற்றும் தொண்டு செய்யும் குணம் Netaji's spiritual commitment and charitable nature
முன்மாதிரி
நேதாஜி மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்ற பின்பு கொல்கத்தா நகரில் உள்ள அரசு கல்லூரியில் சேர்க்கப்பட்டார். கல்லூரி பாட புத்தகங்களை படிப்பதோடு நின்று விடாமல் புறவுலக நிகழ்ச்சிகளிலும் அவர் கருத்தை செலுத்தினார். நாள் தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை படித்தார். அதோடு மேனாட்டு அறிவியல் நூல்களையும் படித்தார். அதோடு ஆன்மீகம் சார்ந்த நூல்களை அதிகம் படித்தார். அதன் மூலம் அவரது உள்ளத்தில் தியானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதனை துறவிகளிடம் வெளியிட்டார் அதற்கான மெய்ஞானம் பெற வழிதனையும் கேட்டார். தியானத்திற்கு வழிகாட்டுபவர் விவேகானந்தர் ஒருவர்தான் என அறிந்தார் அவரையே முன்மாதிரியாகவும் எடுத்துக்கொண்டால் அவரது வீர முழக்கங்கள் ஈர்க்கப்பட்டார்
சிந்தனையைத் தூண்டியவர்
விவேகானந்தருக்கு அடுத்து சிந்தனையைத் தூண்டியவர் அரவிந்தர் ஆவார். நீங்கள் உணர்ந்து வாழவேண்டும். உங்களுக்காக அல்ல, நாட்டுக்காக. உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் அளவிற்கு உங்கள் உழைப்பு இருக்க வேண்டும் என்ற அரவிந்தரின் கருத்துக்கள் நேதாஜியின் உணர்வுகளுக்கு உரமிட்டன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு வீடாக சென்று ஆடைகளையும் உணவுப் பொருட்களையும் கையேந்தி வாங்கினார். ஆரம்பத்தில் பிறரிடம் கையேந்துவது என்பது இழிவாக தோன்றியது. என்றாலும் ஏழைகளுக்கு தானே கையேந்துகிறோம். இதில் இழிவு ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தவர் கிடைத்த ஆடைகளையும் உணவுப்பொருட்களையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார்.
மனிதநேயத்தோடு ஏழைகளுக்கு உதவியதுபோலவே தன்னுடன் படிக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்று வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவுதல் என்ற மனித நேயத் தொண்டுகள் செய்து வந்தார்.
படிப்பில் பிடிப்பில்லை
விடுமுறை முடிந்து கல்லூரி திறந்ததும் நேதாஜிக்கு படிப்பின் மீது நாட்டம் செல்லவில்லை. படிப்பில் முதல் மாணவனாக இருந்த போதிலும் அவரது எண்ணம் முழுவதும் பொது தொண்டு செய்வதில் இருந்தது. இதனால் படிப்பில் பிடிப்பில்லாமல் இருந்தது.
குருவைத் தேடி
கொல்கத்தாவில் விவேகானந்தர் நிகழ்த்தி வந்த சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்டு வந்த நேதாஜி "துறவும் தொண்டுமே இந்தியாவிற்கு தேவை" என்னும் விவேகானந்தரின் வார்த்தைகளை வாழ்க்கை ஆக்கிக்கொண்டார்.
விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாக இருந்து நல்வழிகளைக் காட்டியது போன்று நடக்க வேண்டும் என்று அவரது உள்ள அலைந்தது. பருவத்துடிப்பில் பல இன்பங்களை தேடித் திரிய வேண்டிய நிலையில் அவரது உள்ளம் சமுதாயத்திலும் ஆன்மீக நெறியிலும் சென்றது.
வீட்டைவிட்டு செல்லுதல்
ஆசையே மனிதனை அழிவுக்கு காரணம் என்பதை கண்டறிய அரண்மனையைவிட்டு துறவுக் கோலம் பூண்டு காட்டிற்கு சென்ற சித்தார்த்தின் நிலைப்போன்று செல்வ குடியில் பிறந்த நேதாஜியும் அருள் நாட்டத்தினால் குருவைத்தேடி பெற்றோர் உற்றோர் உடன்பிறந்தோர் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் துறவுக் கோலம் பூண்டு இரவோடு இரவாக கொல்கத்தாவை நோக்கிப் புறப்பட்டார்.
இமயமலைக்குச் சென்றார்
நேதாஜி கொல்கத்தாவை விட்டு ஆக்ரா மதுரா பிருந்தாவனம் காசி கயா ரிஷிகேஷ் ஹரித்துவார் போன்ற பல புனிதத் தலங்களுக்குச் சென்று உண்மையான குருவை தேடி அலைந்தார்.
குடும்பத்தினரின் கண்ணீர்
குருவைத் தேடி அலைந்த சமயம் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தனர். பல இடங்களுக்கு ஆட்களை அனுப்பித் தேடினார். படிக்கும் போது தனிமையில் தியானம் செய்தானே? அப்போது தடுத்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்குமா ?என்று எண்ணி எண்ணி குடும்பத்தினர் கண்ணீர் வடித்தனர்.
ஏமாற்றம் ஏற்பட்டது
குருவை தேடி புத்தகயா வரை சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து துறவிகள் அனைவரும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளில் கலந்து கொண்டதனைக்கண்ட நேதாஜிக்கு ஏமாற்றத்தை தோற்றுவித்தது. உயர்ந்த துறவி ஒருவராவது கிடைப்பாரா என்று தேடி அலைந்த நேதாஜிக்கு ஒருவரும் கிடைக்க வில்லை. ஆனாலும் விவேகானந்தரின் சிந்தனைகளை அடிக்கடி நினைவில் கொண்டு செயல்பட்டார்.
சிறந்தவழி
துறவிகளை தேடி அலைவதை விட துறவு வாழ்வில் இருந்துகொண்டே நாட்டிற்கு தொண்டு செய்யலாம். நாட்டு விடுதலைக்கு பாடுபட அதுவே சிறந்த வழியாகவும் இருக்க முடியும் என்று எண்ணி மீண்டும் துறவுகோலத்துடனே கயாவிலிருந்து வீட்டிற்கு திரும்பலானார். (தொடரும்)
No comments:
Post a Comment