வங்கம் தந்த சிங்கம்
வங்கம் தந்த சிங்கங்களில் ஒருவரும், இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு அச்சத்தை தோற்றுவித்தவரும், வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர் ஐசிஎஸ் பட்டத்தை துறந்து வரும், நாடு கடத்தப்பட்ட வரும், பெரும் படையை திரட்டியவரும் என பல்வேறு வகை திறன் பெற்றவர் தான் சுபாஷ் சந்திர போஸ் என்ற நேதாஜி.
பிறப்பு (Birth)
இவர் வங்காளம் மாநிலம் 24 பர்கானாக்கள் எ ன்ற மாவட்டத்தில் கோதாலிய கிராமத்தில் அரசு வக்கிலான ஜானகிநாத் பிரபாவதி என்னும் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் 6 ஆண்கள் 8 பெண்கள் என 14 பிள்ளைகள் பிறந்தனர்.
தாய்தந்தையர் 16 பேருடன் நேதாஜியின் பெரியப்பா பிள்ளைகள், உறவினர்கள், வீட்டு வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், ஆடு மாடுகள் வளர்ப்போர் என பல்வேறு வகையினர் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருபவர்களை போல அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
உதவிகள் தாராளம்
நேதாஜியின் தந்தை ஜானகிநாத் முழுமையான காங்கிரஸ் தலைவர். இருப்பினும் மேல் நாட்டு மோகத்தில் மூழ்கியவர். நேதாஜியின் தாயாரோ இந்திய நாட்டின் பண்பாட்டில் வாழ்ந்துவந்தார். அத்தோடு ஏழை எளியோருக்கு உதவிகள் செய்வதில் தாராளமானவராக இருந்து வந்தார்.
கடவுள்தான் துனை
மேலும் நேதாஜியின் தாய் கடவுள் பக்தியும் ஒழுக்கமும் கொண்டு வாழ்ந்து வந்தவர். இந்து தர்மத்தில் உறுதியான மற்றும் இந்துசமயம் புராண இதிகாசங்களில் நம்பிக்கையுடையவர். அவரது உள்ளம் எப்போதும் ஆன்மிகத்தில் லயித்திருந்தது. நேதாஜியும் ஆன்மீகத் தன்மை பெற்றவராக விளங்கியதோடு தாயிடம் புராண கதைகளை கேட்டு வந்தார். அத்தோடு வீதியில் பிச்சை எடுக்கும் சிறுவர்களை சுட்டிக்காட்டி அம்மா இவர்களுக்கு எல்லாம் யார் துணையாக இருக்கிறார்கள்? என்று கேட்டார்.
கதியற்ற இவர்களுக்கு கடவுள் தான் துணை என்றார். கடவுளின் துணை என்றால் மிகவும் மகிழ்ச்சி அம்மா என்று நேதாஜியும் பதில் கூறி தாயின் அருகிலேயே இருந்து வந்தார்.
பள்ளிப்படிப்பு (School form)
நேதாஜிக்கு பள்ளி வயது வந்தவுடன் கட்டாக் நகரில் இருந்து பிராட்டஸ்டன்ட் யுரோப்பியன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் படித்து வந்தனர். மேலும் அப்பள்ளியில் ஒரு கலாச்சாரமும் வீட்டில் ஒரு கலாச்சாரமும் முரண்பட்ட நிலையில் இருந்து வந்தது நேதாஜிக்கு சற்று மன வருத்தத்தை தோற்றுவித்தது.
கல்வித்தொகை வேதனை
இந்திய குழந்தைகள் எவ்வளவு தான் சிறப்பாக படித்தாலும் அவர்களுக்கு கல்வி தொகை கிடைக்காது இருந்தது கண்டு நேதாஜி வேதனைப்பட்டார். கல்வி கிடைக்கச் செய்வதோடு ஆங்கிலேயர்களை போல இந்தியர்களும் உயர் நிலையை எட்ட வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்றும் சிறுவயதிலேயே உறுதி பூண்டார்.
விளையாட்டில் நாட்டம் இல்லை
காலை முழுதும் படிப்புபின்பு கனிவு தரும் பாட்டுமாலை முழுவதும் விளையாட்டுஇதை வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
என்று பாரதியார் பாடிய பாடலில் முதல் இரண்டு வரிகளில் கூறப்பட்டுள்ளது போல படிப்பில் நாட்டம் காட்டி வந்தவர். பின் இரண்டு வரிகளை விளையாட்டுக்களில் நாட்டம் இன்றி இருந்தார்.
எல்லோரும் சமம்
தொடக்கக் கல்வியை முடித்த பின்பு 1909 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். இப்பள்ளி இந்தியர்களால் நடத்தப்பட்ட பள்ளி. இங்கு இந்திய மாணவர்கள் என்று எல்லோரும் சமமாக நடத்தப்பட்டனர். நல்ல பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்த "பெனி மாதவ தாஸ்" என்னும் ஆசிரியர் உயர்ந்த கொள்கையையும் பகுத்தறிவையும் மான உணர்ச்சியும் மனிதநேயத்தையும் கல்வியோடு கலந்து கற்பித்து வந்தவர் மீது நேதாஜிக்கு ஒரு பிரியம் ஏற்பட்டது.
அதேபோன்று நேதாஜியும் புத்திக்கூர்மை ஒருமுறை பாடத்தை கேட்டாலே மனதில் ஆழமாய் பதிய வைக்கும் ஆற்றல் கொண்டிருந்தது ஆசிரியரையும் கவர்ந்தது. நல்ல பயிற்சிகளை அளிக்கலானார.
பட்டையைத் தீட்ட தீட்ட ஜொலிப்பது போல இயற்கையிலேயே ஆற்றலும் அறிவும் பெற்றிருந்த நேதாஜி ஆசிரியரின் நல்ல பயிற்சியினால் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினார்.
தனக்குத்தனே
கூர்மையான அறிவும் சிதறாத கவனமும் நேதாஜி இயல்பாக பெற்று இருந்ததினால் படிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்காமல் அதற்கு பதிலாக படித்தவற்றை பற்றி வினாக்கள் எழுப்பி விளக்கம் தருவதில் தனக்குத்தானே சிந்தித்து விடை காண்பதிலும் நேரத்தை செலவு செய்தால் தான் பார்ப்பது கேட்பது படிப்பது எதுவாயினும் அதனை ஆய்விற்கு உட்படுத்தி சிந்தித்தார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு
நேதாஜி தனக்குத்தானே சிந்திக்கும் ஆற்றலினால் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக தேர்வு பெற்று 1913 ஆம் ஆண்டு தனது 16வது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாவது மாணவனாகத் தேர்வு பெற்றார்.
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு The History of Netaji Subash Chandra Bose | நேதாஜியின் பிறப்பு மற்றும் பள்ளிப் படிவம் Netaji's Birth and School Form (தொடரும்)
No comments:
Post a Comment