இந்திய தேசியப் படை Indian National Army நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji
பெயர் மாற்றம்
சிறையில் இருந்து விடுதலை பெற்றதுமே இந்தியாவில் இருந்து தப்பி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் சென்றுவிடவேண்டும் என்று உறுதி கொண்டார். வீட்டில் மவுன விரதம் பூண்டு தனிமையில் இருந்த சமயத்தில் தாடி வளர்த்துக் கொண்டார். காபூல் வழியே மாஸ்கோ செல்லத்தான் முடிவு செய்திருந்தார் .ஏற்பாடுகள் சில நண்பர்கள் மூலம் செய்யப்பட்டன.
1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாளன்று நண்பருடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள பர்ஹாம்பூர் புகை வண்டி ஏறி பெஷாவர் அடைந்தனர். அங்கு சென்றவுடன் நேதாஜி தனது பெயரை ஜியாவுதீன் என்றும் பந்த ராம் தனது பெயரை ரகுமான் என்றும் மாற்றிக்கொண்டனர். அடையாளம் தெரியாத அளவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு காபுல் சென்றனர். காபூலில் பாரசீக மொழியை பேசியதால் மொழி தெரியாமல் விழித்தார். நமக்கு தெரிந்த மொழியில் மூலம் சமாளித்தார்.
இத்தாலி தூதர் சந்திப்பு
ஒருநாள் "உத்தம சந்த்" என்ற இந்திய வணிகரை கடைவீதியில் கண்டனர். அவர் சிறந்த தேசபக்தர். அவர் ஏற்கனவே நேதாஜியின் பெருமைகளை நன்கு அறிந்து இருந்ததினால் நேதாஜியின் நேரில் சந்திப்பதை பெருமை கொண்டார். இத்தாலி தூதரை சந்திக்க உதவினார். பிப்ரவரி 18ஆம் நாள் இத்தாலி தூதர் அனுமதியுடன் என்ற வேறு பெயரில் நேதாஜி காபூலில் இருந்து விமானத்தில் புறப்பட்ட உத்தம சந்தை ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்தார். தங்கள் இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்ததால் நேதாஜியை ஏற்றிச் சென்ற விமானம் ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் இறங்கியதும் நாட்டிற்கு செல்வது தடைபட்டது. நேதாஜியின் வருகையினை பெர்லின் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனை அறிந்த ஜெர்மன் நாட்டின் தலைவரான ஹிட்லர் வரவேற்பு அளித்தார்.
ரஷ்யா செல்ல தடை
1941 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் நாளன்று ஜெர்மனியும் ரஷ்யாவும் பகை நாடுகள் ஆனது அதன் காரணமாக நேதாஜி ரஷ்யா செல்வது தடைபட்டு அதனாலேயே தங்கியிருக்க முடிவு செய்தார்.
காலாட்படை பயிற்சி
இந்தியா விடுதலை பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து விட படை வலிமை மிக்கதாக அமைய வேண்டும். அதற்காக அவர் வெளிநாடுகளில் இருந்த இந்திய வீரர்களை கொண்டு "இந்திய தேசிய படை" (Indian National Army) ஒன்றை திரட்ட எண்ணினார். அவர் புதுமை கருவிகளைக் கொண்டு போர் புரியும் முறைகளில் பயிற்சி பெறத் தொடங்கினார். ஏற்கனவே இராணுவத்தில் காலாட்படையில் இருந்ததால் இப்பயிற்சி எளிதாக அவருக்கு இருந்தது. பயிற்சி முடிந்ததும் அவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்த இந்தியர்களின் மனதினை அறியும் பொருட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
இந்திய தேசிய படை (Indian National Army)
சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பெர்லின் வந்த நேதாஜி தாம் அமைக்க இருக்கும் இந்திய தேசிய படையில் 400 பேர்கள் சேர வந்தால் போதும் என்று அறிவிப்பு கொடுத்தார். அறிவிப்பின்படி படையில் சேர வந்த 400 பேரைக் கொண்டு 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாளை இந்திய தேசியப் படையை நிறுவி னார்.
சில நாட்களில் அப்படையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு ஜெர்மனியிடம் அப்படையை ஒப்படைத்தார். நேதாஜி பயிற்சி அளிக்க வந்த ஜெர்மனியர் பிரிஸ் இண்டியன் என்று அழைத்து பயிற்சி கொடுத்தனர். இந்திய மக்களின் உரிமைகள் இந்திய தேசியப் படையை சிக்கல் நிறைந்த பகுதி கறுப்பு கூடாது என்று கூறியிருந்தார். இருப்பினும் ஐரோப்பாவில் பல முனைகளிலும் ஆங்கில அமெரிக்க படைகளை எதிர்த்துப் போர் புரிந்து வந்தது. பெர்லினில் இருந்தவாரே வானொலி மூலமாக இந்திய மக்களின் உரிமைக் குரலை ஒலிக்கச் இது வந்தார்.
கிழக்காசியாவின் நிலை
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் நாளன்று ஜப்பானியர் ஆங்கிலேயருக்கும் அமெரிக்காவிற்கு எதிராக போர் தொடங்கினார். பாங்காங்க் தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஜப்பானியர் வசமாயின. ஜப்பானியர் தாய்லாந்தை கைப்பற்றியதும் பர்மாவின் மீது படையெடுத்து சிங்கப்பூரை முற்றுகையிட்டனர். சிங்கப்பூரில் இருந்த அனைவரும் ஜப்பானியர்களிடம் சரணடைந்தனர். அவர்கள் 32,000 பெயர்கள் இந்திய வீரர்கள் மற்ற இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்கள் ஜப்பானிடம் சிக்கினர்.
டோக்கியோ மாநாடு
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராஷ்பிகாரி கோஷ் டோக்கியாவில் மாநாடு ஒன்றினை கட்டி கூட்டினார். அம்மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கம் ஒன்று ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார்.
பாங்காங்க் மாநாடு
மீண்டும் பாங்காங்கில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது அம்மாநாட்டில் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் இந்திய விடுதலை எனும் பெயரில் ஒரு கழகம் அமைக்கப்பட்டது.
அத்தோடு பெர்லினில் தங்கியிருக்கும் நேதாஜியை ஜப்பானுக்கு வரவழைக்க அந்நாட்டின் அனுமதி பெறவும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய விடுதலை இயக்கத்தின் சார்பில் இந்திய தேசிய படை ஒன்றும் திரட்டப்பட்டது. 7000 இந்திய வீரர்கள் அப் படையில் சேர்ந்து தொண்டாற்ற முன்வந்தனர். கேப்டன் மோகன் சிங் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்திய தேசியப் படை Indian National Army நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji
No comments:
Post a Comment