நேதாஜியும் ஜாலியன் வாலாபாக்கின் தாக்கமும் Netaji and the impact of Jallianwala Bagh
ஆயுதப்போராட்ட எண்ணம்
போர் பயிற்சியால் புடம் போடப்பட்ட நேதாஜிக்கு இந்தியாவின் அடிமைத் தனையை தகர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்றி அவர்களை போன்ற ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்ற கொள்கையினையும் கடைப்பிடிக்க விரும்பினார்.
ரவுலட் சட்டம்
முதல் உலகப் போர் ஓய்ந்த பின் ஆங்கிலேய அரசு தாங்கள் கூறிய உறுதி மொழிக்கு இணங்க உரிமை வழங்க முன் வராதது கண்டு இந்திய தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் மூலம் மன கொதிப்படைந்தனர் மக்கள். மன கொதிப்படைந்த மக்களை அடக்க கடுமையான சட்டம் போன்றவை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. காந்தியடிகள் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்செய்தி அறிந்த மக்கள் ஒன்று திரண்டு எழுச்சியில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்ட போராட்டம்
மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு அமிர்தசரஸ் நகர் நிர்வாகத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தது. ராணுவச் சட்டம் நடப்பில் உள்ள போது விசாரணையின்றி ஒருவருக்கு தண்டனை வழங்க முடியும் என்பதால் போராட முன்வந்த மக்கள் கூடிப் பேசி அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
20,000 பேர்
ஏப்ரல் 13ஆம் நாள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருந்தபோது ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் 20,000 பேருக்கும் மேல் அன்று மாலை மக்கள் கூடினர். மக்கள் கூடுவதை கண்டு ஆத்திரம் கொண்ட ராணுவ அதிகாரியான ஓட் டயர் என்பவன் தன்னுடன் துப்பாக்கி படையினருடன் மைதானத்திற்குள் நுழைந்த அந்த மைதானத்திற்கு இருந்தது ஒரே ஒரு வாயில்தான்.
உயிரிழந்தனர்
200 ராணுவ வீரர்களுடன் மைதானத்தை அடைந்த டயர் நுழைவாயில் நுழைந்து தனது படையினருக்கு மக்களை நோக்கி சுட கட்டளை இட்டான். மக்கள் துப்பாக்கி குண்டு அடிப்பட்டு சாய்ந்து மாய்ந்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாததால் நூற்றுக்கணக்கான மக்கள் குண்டடிபட்டும் மிதிபட்டும் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
நேதாஜியின் முடிவு
தலைவர்களும் மக்களும் ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்கு அன்றாடும் ஆளாகி இருப்பதை அறிந்த நேதாஜி துடிதுடித்தார். சொந்த மண்ணில் அந்நிய நாட்டு மக்கள் வதை படுவதா? என்ற எண்ணம் அவரை வாட்டியது. நாட்டு மக்களுக்காக இனி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற முடிவு செய்தார்.
பி ஏ வகுப்பில் தேறினார்
இந்த நிலையில் அவர் 1919 ஆம் ஆண்டு பி ஏ தத்துவம் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். ஆனாலும் தாம் எடுத்த முடிவில் தீவிரம் காட்டினார்.
தந்தையின் விருப்பம்
இவ்விஷயம் தந்தை ஜானகிநாத்க்கு தெரியவரவே மிகவும் கவலை கொண்டார். அஞ்சா நெஞ்சமும் உரிமை உணர்ச்சியும் கொண்ட நேதாஜியை அரசியல் கிளர்ச்சி ஆட்கொண்டு விடும் என்று அவரது தந்தை அஞ்சினார். அதே நேரத்தில் தனது மகன்கள் ஒருவராவது ஐசிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருந்தார். அதனால் நேதாஜி அரசியலில் ஈடுபடாமல் காக்கப்படுவதோடு நீண்ட நாள் தமது ஆசை நிறைவேறும் என்று அவர் கருதினார்.
அடிமை வேலை
ஐசிஎஸ் படித்து இந்தியா வந்தால் ஆங்கிலேய ஆட்சியில் அவர்களுக்கு கீழ் அடிமை வேலை தானே பார்க்க முடியும். எனவே படிப்பை தவிர நாட்டிற்கு உழைத்த விடுதலை பெற பாடுபடுவதே சரி என்று எண்ணினார்.
லண்டன் பயணம்
இருப்பினும் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ள மனமின்றி ஐசிஎஸ் படிக்க 1919 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாளில் லண்டன் பயணத்தை மேற்கொண்டார்.
கேம்பிரிட்ஜில் சேர்ந்தார்.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐசிஎஸ் பயின்றார். ஆனாலும் இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயருடைய வாழ்க்கைநிலை தொழில்முறை முதலியவற்றை உன்னிப்பாக கவனித்து வந்தார். அதே நேரத்தில் இந்தியாவின் வறுமை இங்கிலாந்து செழுமை ஆள்பவர் இராணுவம் ஆளப்படும் எளிமை சுதந்திர நாட்டவரின் முகப்பொலிவு அடிமை நாட்டவரின் மனப்புழுக்கம் அத்தனையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
கவியரசி சரோஜினி தேவி
நேதாஜி லண்டன் நகரில் இருந்த காலத்தில் கவியரசி சரோஜினி தேவி அங்கு சென்றிருந்தார். லண்டனில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியினர் சரோஜினி தேவிக்கு ஒரு விருந்து நடத்தினார். அதற்கு நேதாஜியும் சென்றிருந்தார். அங்கு சரோஜினிதேவி ஆற்றிய உணர்ச்சிமிக்க பேச்சினை கேட்டு பெருமிதம் கொண்டார். சரோஜினி அவர்களின்ன் சொல் வன்மையும் நேதாஜியை ஈர்க்க செய்தது. அவர் பேசிய பின்பு, நேதாஜி உரையாற்றியபோது மேல் நாட்டு பெண்மணி யாரும் சரோஜினிதேவி அதற்கு சமமாக மாட்டார். இதுபோன்ற பெண்மணிகளை பெற்றுள்ள இந்திய நாடு எதிர்காலத்தில் உயர் நிலையை எட்டும் என்று தம் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி
நேதாஜி இங்கிலாந்துக்குச் சென்ற எட்டாவது மாத இறுதியில் நடந்த ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதனால் கிடைத்த மகிழ்ச்சியை விட இந்தியாவிற்கு செல்லப்போகிறோம், விடுதலைப்போரில் விரைந்து ஈடுபடப் போகிறோம் என்பதில் அவருக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி இருந்தது.
நேதாஜியின் உறுதி
கவிஞர் தாகூரின் சர் பட்டத்துறவும், சங்கரன் நாயரின் பதவி துறவும், மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோரின் தொழில் துறவும் அவரது உள்ளத்தில் உணர்ச்சியைப் பெருக்கின.
No comments:
Post a Comment