நேதாஜி தனது ஐ சி எஸ் பட்டத்தைத் துறத்தல் Netaji relinquishes his ICS title | நேதாஜியின் வாழக்கை வரலாறு Netajis Life History
பட்டத்தை துறந்தார்
தாம் முயன்று பெற்ற ஐசிஎஸ் பட்டத்தை ஆங்கிலேய அரசின் அடிமைப்பட்டம் என்று நேதாஜி கருதினார். இந்திய நாடு விடுதலை பெறும்வரை அரசு உத்தியோகம் எதையும் பார்ப்பதில்லை என்று உறுதி பூண்டார். அதற்காகத்தான் ஐ சி எஸ் பதவியைத் துறக்கத் துணிந்து, இந்தியாவின் அமைச்சராக இருந்த மாண்டேகு வை சந்தித்து தனது துரப்பு சம்பந்தமான கருத்தை தெரிவித்தார்.
மாண்டேகு வியப்போடு நேதாஜியைப் பார்த்து, சிரமப்பட்டு படித்து பட்டம் பெற்று துறக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். நேதாஜி பட்டம் துறப்பதில் உறுதியாக இருந்ததினால் மாண்டேகுவின் முயற்சி வீணாயிற்று. பட்டம் துறப்பதில் வெற்றிபெற்ற நேதாஜி 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வந்தார்.
மக்கள் பாராட்டினர்
ஐசிஎஸ் என்ற உயர் பதவியை தாய்நாட்டின் விடுதலைக்காக உதவி உதறி எறிந்து வந்த நேதாஜியை இந்திய மக்கள் வெகுவாக பாராட்டினர். அவர் மீது அளவு கடந்த மகிழ்ச்சி அனைவருக்கும் ஏற்பட்டது.
சித்தரஞ்சன் தாய் தாயின் பாராட்டு
தியாகசீலரான சித்தரஞ்சன் தாஸ், சுபாஷ் உங்களைப் போன்ற உயர்கல்வி கற்றவர்கள், குறிப்பாக இளைஞர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முன்வர வேண்டும். அப்படி இளைஞர்கள் முன்வர நீங்கள் ஒரு முன்னோடியாக நிற்கிறீர்கள் என்று பாராட்டினார்.
காந்தியடிகளை சந்தித்தார்
மும்பையிலுள்ள "மணிபவனம்" (Manibhavanam) என்னும் மாளிகையில் காந்தியடிகள் இருப்பதை அறிந்து அங்கு சென்ற[ வணக்கம் செலுத்திய நேதாஜி. அருகே சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். நேதாஜியை அழைத்து தன் அருகில் அமரச் சொன்ன காந்தியடிகள் நேதாஜியை ஒரு முறை உற்று நோக்கினார். அவரது மனித நேயம் மலர்ந்த முகம் காந்தியாரை கவர்ந்தன.
சில கேள்விகள்
மனதில் எதையும் மறைக்காது ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துபவர் அதனால் காந்தியடிகளும் அவரிடம் மனம் திறந்து பேசினார். அதன் பொருட்டு நேதாஜி சில கேள்விகளை காந்தியடிகளிடம் கேட்க தொடங்கினார்.
"இந்தியா விடுதலைக்குத் தங்கள் திட்டம் என்ன?"
விடுதலைப்போரில் நம்மை முதலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின் திட்டம் தீட்டி செயலாற்றவேண்டும்.
"தற்போதைய தங்களது திட்டங்கள் விடுதலையைப் பெற்றுத்தர போதுமானவையா?"
ஒத்துழையாமை இயக்கம், சுதேசி உணர்வு சத்தியாகிரகம் அகிம்சை இவற்றின் மூலம் விடுதலை பெறலாம் என்று காந்தியடிகள் பதிலளித்தார்.
காந்தியடிகள் பதில் நேதாஜிக்கு நிறைவினை அளிக்கவில்லை என்றாலும் முதல் சந்திப்பிலேயே தனது வேகத்தைக் காட்ட கூடாது என்று அவரது பதிலுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டார் நேதாஜி.
சித்தரஞ்சன் தாஸ் உடன் சந்திப்பு
நேதாஜியின் துடிப்பையும் ஆர்வத்தையும் கண்ட காந்தியடிகள் கொல்கொத்தாவில் இருக்கும் தேசபந்து சித்தரஞ்சன் தாசை சென்று சந்திக்கும்படி அறிவுரை கூறினார்.
அதன்படியே காந்தியடிகளிடம் விடை பெற்றுக்கொண்டு கொல்கத்தா நகருக்கு சென்றார். அங்கே சித்தரஞ்சன் தாஸை சந்தித்து தாம் பதவியை துறந்து, நாட்டு விடுதலைக்கான போராட்ட பணிசெய்ய வந்திருப்பதை கூறினார். நேதாஜி கூறியதைக் கேட்ட சித்தரஞ்சன் தாஸ் நாட்டு விடுதலைக்காக போராட இங்கு வந்துள்ளீர்கள். எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறீர்கள். உங்களைப் போன்று உயர்கல்வி கற்று உயர் பதவிக்கு தகுதி உள்ள இளைஞர்கள் வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் நாடாத உங்களைப் போன்றவர்கள் போராட்டங்களுக்கு வந்தால் நாடு விரைவில் விடுதலைப் பெற்றுவிடும். உங்களை நான் உளமாரப் பாராட்டுகிறேன். உங்களுக்குரிய பணிகளில் உங்களை ஈடுபடுத்தவும் விரும்புகிறேன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
நேதாஜி நெகிழ்ந்து போனார் நல்லதொரு தலைவர் நமக்கு கிடைத்து விட்டார் என்று மகிழ்ந்தார் அன்று முதல் தனது தளபதியாக நேதாஜியை மாற்றினார் சித்தரஞ்சன் தாஸ்.
No comments:
Post a Comment