சிறை சென்ற நேதாஜி Netaji who went to jail | நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, October 2, 2020

சிறை சென்ற நேதாஜி Netaji who went to jail | நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji

சிறை சென்ற நேதாஜி Netaji who went to jail | நேதாஜியின் வாழ்க்கை வரலாறு Biography of Netaji

பல பொறுப்புக்கள் 

அரசுப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேசிய பள்ளிகளும் கல்லூரிகளும் தோற்றுவிக்கப்பட்டன. அப்படிப்பட்ட தேசிய கல்லூரி ஒன்றை சித்தரஞ்சன் தாஸ் நிறுவி அதற்கு தலைமை பேராசிரியராக  நேதாஜியை நியமித்தார். 

வங்காளத்தின் காங்கிரஸ் கட்சி கொள்கை பரப்பு குளிருக்கும் நேதாஜியை தலைவராக்கினார்.  வங்க மாநிலத்தின் தேசியத் தொண்டர் படைக்கு நேதாஜியை தலைவராக்கினார். இப்படி பல்வேறு பொறுப்புகளை நேதாஜியிடம் சித்தரஞ்சன் தாஸ் ஒப்படைத்தார். 

ஏனெனில் நேதாஜி சாதாரண மனிதரல்ல. 

  • அரிய செயல்களை செய்யும் ஆற்றலும் 
  • சாதனை புரியும் சாதுரியமும் 
  • வழிநடத்தும் வல்லமையும் 
  • வெற்றிகளை குவிக்கும் வேகமும் விவேகமும் 

உடையவர் என்பதை சித்தரஞ்சன் தாஸ் ஏற்கனவே படித்திருந்தார். 

வேல்ஸ் இளவரசர் வருகை 

1921-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வரவிருந்த வேல்ஸ் இளவரசருக்கு ஆங்கிலேய அரசு சிறப்பான முறையில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வந்தது.  ஆனால் அதே நேரத்தில் விடுதலைப் போராளிகள் இளவரசருக்கு கருப்பு கொடி காட்டவும்,  கடையடைப்பு செய்யவும் திட்டமிட்டிருந்தனர். அதன்படியே வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது கடைகள் அடைக்கப்பட்டன. கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. அந்நியத் துணிகள் கொளுத்தப்பட்டன. "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தோடு இளவரசரை "திரும்பிப் போ" என்று குரல் கொடுக்கப்பட்டது.

கடுமையாக தண்டிக்க திட்டம் 

கொல்கத்தாவிற்கு வேல்ஸ் இளவரசர் வந்த போது கடும் எதிர்ப்பை தெரிவிக்க காத்திருந்த தொண்டர் படையை அடக்கி ஒடுக்க ஆங்கிலேய அரசு முனைந்தது. தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், மௌலானா அப்துல் கலாம் ஆசாத் போன்றவர்கள் சட்டத்தை மீறி எதிர்ப்பு காட்டியது, பொதுமக்களிடையே எழுச்சியினை தோற்றுவித்தது. 

அதன் வழியில் எல்லோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்புக்குரல் எழுப்பினர். இத்தனை எழுச்சிக்கும் இத்தனை பெரும் எதிர்ப்புக்கும் மூலகாரணம் நேதாஜி தான் என்பதை தெரிந்து கொண்ட ஆங்கில அரசு அவரை கடுமையாக தண்டிக்க திட்டம் தீட்டியது. 

அரசின் ஆட்டம் 

ஒத்துழையாமை இயக்கம் உச்ச நிலையில் இருந்ததால் அன்றாட அலுவல்களை கூட செய்ய இயலாமல் ஆங்கில அரசு திணறியது. அப்படிப்பட்ட நேரத்தில் இப்படிப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஆங்கிலேய அரசை ஆட்டங்காண செய்தன. அரசின் வெறுப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக பத்திரிகைகள் பாராட்டு செய்திகளை வெளியிட்டது. ஆங்கில அரசை வெறுப்படையச் செய்ததை இதற்கெல்லாம் காரணம் நேதாஜி தான் என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட ஆங்கில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது. 

சிறைத்தண்டனை 

நேதாஜியின் தலைமையில் இயங்கும் தொண்டர் படையை சட்டத்திற்கு எதிரான அமைப்பாக ஆங்கிலேய அரசு அறிவித்து தடை செய்தது. அத்துடன் நேதாஜிக்கு 6 மாத சிறை தண்டனையும் அளித்தது.  நேதாஜியின் அரசியல் குருவான சித்தரஞ்சன் தாஸ் சிறை தண்டனை அளித்து 1921 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வங்கத்தில் வெள்ளம் 

வங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பலரது உயிர்களை பறித்தது. பல ஊர்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து பயிர் நிலங்களை பாழ் படுத்தியது. வீடு வாசல்கள் பலவற்றை இழக்க செய்தது. உயிர் பிழைத்த மக்களில் சிலர் உண்ண உணவின்றி உடுத்த உடையும் இன்றி பரிதவித்தனர். பஞ்சமும் நோயும் எங்கும் பரவத் தொடங்கின. 

வங்கத்தை வாழ்விக்க வந்த வள்ளல் 

இந்த சமயத்தில் 6 மாத சிறை தண்டனையை அனுபவித்து விட்டு விடுதலை பெற்று வந்த நேதாஜி விஷயம் தெரியவரவே பிசி ராய் தலைமையில் அமைக்கப்பட்ட உதவி குழுவின் செயலாளர் பொறுப்பினை ஏற்ற நேதாஜி அல்லும் பகலும் ஊர் ஊராக சென்று பெரும் நிதி திரட்டினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடைகளை வீடுகளை அனைத்து துயர் துடைத்தார். அவரது செயல்களை கண்ட மக்கள் "வங்கத்தை வாழ்விக்க வந்த வள்ளல்" என்று நேதாஜியை வாழ்த்தினர். அன்புடன் அவரை "பாபு" என்று செல்லமாக அழைத்தார்கள்.ஓர் அரசு செய்ய தவறியதை நேதாஜி செய்ததைக் கண்டு வங்காள அறிஞர் லிட்டன் பிரபு நேதாஜியை நேரில் அழைத்து பாராட்டினார். 

செளரி செளரா நிகழ்ச்சி 

நாட்டின் ஆங்கிலேய அரசு கொடுங்கோலாட்சியினை எல்லைமீறி செயலாற்ற தொடங்கியது. அதனடிப்படையில் பலரை தேசத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைத்து. காங்கிரஸ் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த கூடாது. கும்பலாக பேசுதல் கூடாது என்று தடை போட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாய் பொதுமக்கள் ஆதரவுடன் சட்டமறுப்பு இயக்கம் நடத்த காந்தியடிகள் முடிவு செய்தார். அதன்பேரில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் "பர்தோலி" என்னும் ஊரை சட்டமறுப்பு களமாக தேர்வு செய்தார். 1922ஆம் ஆண்டு பிப்ரவரியில் காந்தியடிகள் பள்ளிக்கு வந்தார். 

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் சௌரி சௌரா என்ற சிறு நகரத்தில் இருந்த நான்காயிரம் தேசிய படை தொண்டர்கள் நகர காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர் பல காவலர்களே உயிருடன் எரித்தனர்.  இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காந்தியடிகள் அதிர்ச்சி அடைந்தார். அடுத்த கணமே பற்றிய சட்ட மறுப்பு இயக்கத்தை கைவிட்டார்.

ஒத்துழையாமையும் சட்டமறுப்போம்

 சட்ட மன்றத்திற்கு சென்று ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த முடியும் என்று தங்களின் கொள்கையை சித்தரஞ்சன் தாஸ் மோதிலால் நேரு மௌலானா முகமது அலி மவுலானா அப்துல் கலாம் ஆசாத் போன்றோர் காந்தியடிகளிடம் மீண்டும் வலியுறுத்தினார். சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதே ஒத்துழையாமை செல்வதற்கான செல்வதற்குத் தான் அவ்வாறு செல்வது ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதி தான் என்று இவர்கள் தெளிவுபடுத்தினர். 

ஒத்துழையாமை இயக்கத்திற்கும் சட்டமறுப்பு இயக்கத்திற்கும் முழு ஒத்துழைப்பையும் தருகிறோம். அதற்காக எங்களது உயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் உறுதிபடக் கூறினர். அதற்குப் பின்புதான் காந்தியடிகள் கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் கூட இருந்த கருத்துவேறுபாடு பெரிதும் குறைந்தது. இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் வேகம் பிறந்தது.

No comments:

Post a Comment